நைலான் 11

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நைலான் 11 அல்லது பாலிஅமைடு 11 (PA 11) ஒரு பாலிஅமைடு மற்றும் உயிர்ம நெகிழி ஆகும். இது நைலான் தொகுதி பலபடி வகையைச் சார்ந்தது. இச்சேர்மம் ஆமணக்கு வகைத் தாவரத்திலிருந்து அர்கேமாவால் ரில்சான் எனப்படும் வணிகப்பெயருடன் தயாரிக்கப்படுகிறது.[1] இது 11-அமினோஅன்டெகேனோயிக் அமிலத்தின் பலபடியாக்கல்  வினையினால் தயாரிக்கப்படுகிறது. [2]

நைலான்-11 ஆனது, தானியங்கு எரிபொருள் குழாய்கள், காற்றழுத்த தடைக் குழாய்கள், மின்சாதன வடக்கம்பி கரையான் எதிர்ப்பு உறைகள், எண்ணெய் மற்றும் வாயு கொண்டு செல்லப் பயன்படும் நெகிழும் குழாய்கள், விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், மின்னணு சாதனங்களின் பகுதிப்பொருட்கள், மருத்துவத் துறையில் சிறுநீர் வடிக்கப் பயன்படும் செருகு குழாய்கள் போன்ற உயர் செயல்திறன் கொண்ட பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rilsan Polyamide 11 and 12 பரணிடப்பட்டது 2008-09-15 at the வந்தவழி இயந்திரம், accessed September 12, 2008.
  2. Ben Herzog, Melvin I. Kohan, Steve A. Mestemacher, Rolando U. Pagilagan and Kate Redmond "Polyamides" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2013, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a21_179.pub3
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைலான்_11&oldid=3219097" இலிருந்து மீள்விக்கப்பட்டது