நையாண்டிப் போலி
நையாண்டிப் போலி (Parody) என்பது, இன்னொரு ஆக்கத்தை நையாண்டி செய்யும் பாணியில் ஆக்கப்பட்ட ஆக்கம் ஒன்றைக் குறிக்கும். இந்த நையாண்டி, ஒரு வஞ்சப் புகழ்ச்சியாகவோ, அந்த ஆக்கம், அதில் இடம் பெறும் பாத்திரம், ஆக்கியோன் அல்லது தொடர்புடைய வேறு ஏதாவது ஒன்றின் மீதான விருப்பத்தைக் காட்டுகின்ற ஒரு வேடிக்கையாகவோ, இருக்கலாம்.[1][2][3]
நையாண்டிப் போலி, விமர்சனத்துடன் கூடிய ஒரு போலச் செய்தல் என்று, இலக்கியக் கோட்பாட்டாளரான லிண்டா ஹச்செனன் (Linda Hutcheon) என்பவர் கூறுகிறார். சைமன் டென்ட்டித் என்னும் இன்னொரு திறனாய்வாளர், நையாண்டிப் போலிக்கு, இன்னொரு பண்பாட்டு ஆக்கம் அல்லது செயல்முறை குறித்து, தருக்க வாதத்துடன் கூடிய போலச் செய்தலை முன் வைக்கும், ஒரு பண்பாட்டுச் செயல்முறை என விளக்கம் அளித்துள்ளார்.
நையாண்டிப் போலிகள், இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை உள்ளிட்ட எல்லாக் கலை ஊடகங்களிலும் காணப்படுகின்றன. பண்பாட்டு இயக்கங்களும் நையாண்டிப் போலிக்கு உட்படுவதுண்டு.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ J.M.W. Thompson (May 2010). "Close to the Bone". Standpoint magazine. Archived from the original on 2016-04-16. Retrieved 2011-02-26.
- ↑ "Parody". Encyclopedia of Diderot & d'Alembert - Collaborative Translation Project. June 2007. http://hdl.handle.net/2027/spo.did2222.0000.811. பார்த்த நாள்: 3 October 2018.
- ↑ Balducci, Anthony (28 November 2011). The Funny Parts: A History of Film Comedy Routines and Gags. McFarland. ISBN 978-0-7864-8893-3. Retrieved 3 October 2018 – via Google Books.