நைஜீரிய நாட்டுப்பண்
நைஜீரியா நாடு கீதம் | |
இயற்றியவர் | ஜான் ஏ. ஐலௌகுகு, எமி எடிம் அக்பான், பி.ஓ.ஓகுன்னாயேக், சோடா ஓமோகிய், பி. ஓ. அடிரிபிகே, 1978 |
இசை | நைஜீரிய காவல்துறை இசைக்குழுவின் இயக்குநரான பெனடிக்ட் ஈ.ஓடியஸ், 1978 |
சேர்க்கப்பட்டது | 1978 |
நைஜீரிய நாட்டுப்பண் ("Arise, O Compatriots") என்பது நைஜீரியாவின் தேசிய கீதம் ஆகும். இது 1970 களின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது மேலும் இது நாட்டின் இரண்டாவது நாட்டுப்பண் ஆகும்.
வரலாறு
[தொகு]தற்போதைய நாட்டுப்பண்ணானது 1978 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இதற்கு முந்தைய நாட்டுப்பண்ணான "Nigeria, We Hail Thee" என்ற பாடலுக்குப் பதிலாக மாற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1]
இப்பாடல் வரிகளானது தேசிய அளவில் நடத்தப்பட்ட போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஐந்து பதிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட சொற்கள் மற்றும் சொற்றொடர்களின் கலவையாகும். இந்த பாடல் வரிகளுக்கு, நைஜீரிய காவல்துறை இசைக்குழுவின் இயக்குநரான பெனடிக்ட் ஈ.ஓடியஸ் என்பவரால் இசையமைக்கப்பட்டது.
ஆங்கில வரிகள்
[தொகு]- Arise, O compatriots
- Nigeria's call obey
- to serve our fatherland
- with love and strength and faith.
- The labour of our heroes past
- shall never be in vain,
- to serve with heart and might
- one nation bound in freedom
- Peace and unity.
- O God of creation,
- direct our noble cause
- Guide thou our leaders right
- Help our youth the truth to know
- In love and honesty to grow
- And living just and true
- Great lofty heights attain
- To build a nation where peace
- And justice shall reign
ஹவுசாவில் வரிகள்
[தொகு]- Yaku 'yan Nijeriya ku farka;
- Ku amsa kiran Nijeriya;
- Domin mu taimaki ƙasarmu ta haihuwa;
- Don aiki ga ƙasata cikin soyayya da riƙon gaskiya;
- Domin gudumawar da shuwagabaninmu 'yan kishin ƙasa suka bada;
- kada ta zama a banza;
- Muyi aiki da zuciya ɗaya da girmamawa a gareta;
- Domin ta kasance ƙasa ɗaya mai yanci ga kowa tare da haɗin kai da zaman lafiya.
இக்போ மொழியில் வரிகள்
[தொகு]- Bilie nu ndi ala anyi
- Irubere oku Nigeria isi
- Ije ozi ala nna anyi
- Na ifunanya na ike na okwukwe,
- Olu ndi dike anyi gara aga
- Agaghiabu ihe efu,
- Ije ozi n' obi n' ike n'okwukwe
- Otu ala jikolu onu na nnwere onwe
- Udo na ịdị n'otu.
யொரூபா மொழியில் வரிகள்
[தொகு]- Dide eyin ara .
- Wa je-pe Naijiria,
- ka fife sin 'lewa
- pelu okun ati 'gbagbo
- Ki ise awon akoni wa
- ko ma se ja sa-san,
- Ka sin tokan-tara
- ile tominira wa,
- ti alafia so-dokan.
தமிழ் மொழிபெயர்ப்பு
[தொகு]- நாட்டுப்பற்றாளர்களே, எழுங்கள்,
- நைஜீரியாவின் அழைப்பு, கீழ்ப்படியுங்கள்.
- நமது தந்தை நாட்டுக்கு சேவை செய்ய,
- அன்பு, வலிமை, நம்பிக்கையுடன்.
- கடந்தகால வீரர்களின் உழைப்பு
- என்றும் வீண் ஆகாதபடிக்கு,
- நெஞ்சார்ந்த வலிமையுடன் சேவையாற்றுங்கள்.
- அமைதி, ஒற்றுமை, சுதந்திரத்தால்
- கட்டுண்ட நாடு
- ஒ இறைவா
- எம் புனித நோக்கத்தை நீ இயக்கு.
- எம் தலைவர்களை சரியாக வழிநடத்து.
- எம் இளைஞர்கள் சத்தியத்தை அறிய,
- அன்பு, நேர்மையுடன் வளர,
- உண்மையாய், நேர்மையாய் வழ,
- மிக உயர்ந்த இடத்தை அடைய,
- அமைதியும், அறமும் கோலோச்சும்
- நாட்டை நிர்மாணிக்க உதவு
தேசிய உறுதிமொழி
[தொகு]நைஜீரிய நாட்டுப்பண் பாடப்பட்டு உடனடியாக நைஜீரிய உறுதிமொழி ஏற்கப்படுகிறது உறுதிப்படுத்துகிறது: இது 1976 இல் பேராசிரியர் (திருமதி) ஃபெலிசியா அடெபோலா அடிடாயினால் எழுதப்பட்டது.
- நான் நைஜீரியாவான எனது நாட்டுக்கு உறுதியளிக்கிறேன்.
- நான் நம்பிக்கையாகவும் விசுவசமொடும், நேர்மையோடும் இருப்பேன்.
- நைஜீரியாவுக்கு அனைத்து வகையிலும் சேவை செய்வேன்.
- அதனுடைய ஒற்றுமையைக் காக்கவும், அதன் இறையாண்மையையும், புகழையும் நிலைநாட்டவும்.
- இறைவா எனக்கு உதவு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nigeria’s National Anthem Composer, Pa Ben Odiase, Dies". Gazelle News. 2013-06-12 இம் மூலத்தில் இருந்து 2017-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170927112428/http://www.thegazellenews.com/2013/06/12/nigerias-national-anthem-composer-pa-ben-odiase-dies/. பார்த்த நாள்: 2013-07-08.