நேர்க்காட்சியியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேர்க்காட்சியியம் என்பது, ஐயத்துக்கு இடமில்லாத அறிவு இயற்கைத் தோற்றப்பாடுகளையும், அவற்றின் இயல்புகளையும், தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண்டது என்று கூறும் மெய்யியல் கோட்பாடு ஆகும். ஆகவே, புலன்வழிப் பட்டறிவுகள் மூலம் கிடைக்கும் தகவல்களை பகுத்தறிதல், ஏரணம் என்பவற்றினூடாக விளக்குவதே எல்லா நிச்சயமான அறிவுகளினதும் மூலம் ஆகும். புலன்களின் ஊடாகக் கிடைக்கும் உறுதிப்படுத்திய தரவுகள் பட்டறிவுச் சான்றுகள் எனப்படுகின்றன. எனவே நேர்க்காட்சியியம் பட்டறிவியத்தை அடிப்படையாகக் கொண்டது.[1] இது நேர்க்காட்சிவாதம், புலனெறியியம், புலநெறிவாதம் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

நேர்க்காட்சியியத்தின்படி சமூகமும், பௌதீக உலகைப்போல் பொது விதிகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. அகநோக்கு, உள்ளுணர்வு என்பன சார்ந்த அறிவுகளையும் அதேபோல், மீவியற்பிய, இறையியல் அறிவுகளையும் நேர்க்காட்சியியம் ஏற்றுக்கொள்வதில்லை. நேர்க்காட்சியியத்தின் அணுகுமுறை மேற்கு நாட்டுச் சிந்தனை வரலாற்றில் தொடர்ந்து காணப்படுகின்ற கருப்பொருளாக இருந்துவருகின்றபோதும்,[2] தற்கால நோக்கிலான அணுகுமுறை 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெய்யியலாளரான அகசுத்தே காம்டேயினால் உருவாக்கப்பட்டது.[3] எந்த அளவுக்குப் பௌதீக உலகு புவியீர்ப்பையும், பிற விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறதோ சமூகமும் அவ்வாறே என காம்டே வாதிட்டதுடன்,[4] நேர்க்காட்சியியத்தை ஒரு மனிதநேய மதமாக வளர்த்தெடுத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. John J. Macionis, Linda M. Gerber, Sociology, Seventh Canadian Edition, Pearson Canada
  2. Cohen, Louis; Maldonado, Antonio (2007). "Research Methods In Education". British Journal of Educational Studies (Routledge) 55 (4): 9. doi:10.1111/j.1467-8527.2007.00388_4.x .
  3. "Auguste Comte". Sociology Guide. 
  4. Macionis, John J. (2012). Sociology 14th Edition. Boston: Pearson. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-205-11671-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேர்க்காட்சியியம்&oldid=2465847" இலிருந்து மீள்விக்கப்பட்டது