சமூகவியலின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சமூகவியலின் வரலாறு, சமூகவியல் துறை பிரெஞ்சுப் புரட்சிக்குச் சற்றுப் பிந்திய காலத்தில், அறிவொளிச் சிந்தனைகளில் இருந்து, சமூகத்தின் நேர்க்காட்சியிய அறிவியலாக உருவானதில் இருந்து தொடங்குகிறது. இதன் தோற்றத்துக்கு அறிவியல் மெய்யியலையும், அறிவு மெய்யியலையும், சார்ந்த பல்வேறு இயக்கங்கள் காரணமாக இருந்தன. விரிந்த நோக்கில், சமூகப் பகுப்பாய்வு, சமூகவியல் துறை உருவாவதற்கு முன்னமே பொதுவான மெய்யியலின் ஒரு பகுதியாகத் தோற்றம் பெற்றது. தற்காலப் புலமைசார் சமூகவியல், நவீனத்துவம், முதலாளித்துவம், நகராக்கம், பகுத்தறிவுமயமாதல், மதச்சார்பின்மையாதல், குடியேற்றவாதம், பேரரசுவாதம் ஆகியவற்றுக்கான ஒரு எதிர்வினையாகத் தோன்றியது. 19 ஆம் நூற்றாண்டுச் சமூகவியல், நவீன தேசிய அரசின் தோற்றம், அதன் உறுப்பு நிறுவனங்கள், அதன் சமூகமயமாக்க அலகுகள், அவற்றின் கண்காணிப்பு முறை ஆகியவை தொடர்பில் குறிப்பாக வலுவான ஆர்வம் கொண்டிருந்தது. அறிவொளிச் சிந்தனைகளைவிட, நவீனத்துவக் கருத்துருவே பெரும்பாலும், சமூகவியல் விடயங்களைச் செந்நெறி அரசியல் மெய்யியலில் இருந்து வேறுபடுத்தியது.[1]

பல்வேறு கணியமுறைச் சமூக ஆய்வு நுட்பங்கள் அரசுகள், வணிக நிறுவனங்கள், அமைப்புக்கள் போன்றவற்றால் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டதுடன், பிற சமூக அறிவியல் துறைகளிலும் பயன்பட்டன. சமூக இயக்கம் தொடர்பான கோட்பாட்டு விளக்கங்களில் இருந்து விலகி, இது சமூக ஆய்வுக்குச் சமூகவியல் துறையில் இருந்து ஓரளவு சுதந்திரம் வழங்கியது. இதேபோல், "சமூக அறிவியல்" என்பது, மனிதர், இடைவினைகள், சமூகம், பண்பாடு போன்றவற்றை ஆய்வு செய்யும் பல்வேறுபட்ட துறைகளை உள்ளடக்கும் பொதுச் சொல்லாக ஆகியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harriss, John. The Second Great Transformation? Capitalism at the End of the Twentieth Century in Allen, T. and Thomas, Alan (eds) Poverty and Development in the 21st Century', Oxford University Press, Oxford. p325.
  2. Collins, Randall (2010). The Discovery of Society. United States: McGraw-Hill. பக். 343. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780070118836. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமூகவியலின்_வரலாறு&oldid=2749434" இருந்து மீள்விக்கப்பட்டது