நேகா கிர்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேகா கிர்பால்
2018-ல் நேகா கிர்பால்
பிறப்புபுது தில்லி
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுநாரி சக்தி விருது-2015

நேகா கிர்பால் (Neha Kirpal) என்பவர் 2008-ல் இந்திய கலை திருவிழாவினை நிறுவியவர் ஆவார். கலை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களில் இவரும் ஒருவர். சனவரி 28 அன்று புது தில்லியில் நடத்தப்பட்ட நான்கு நாள் இந்தியக் கலைக் கண்காட்சியின் எட்டாவது நிகழ்வின் நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனராகச் செயல்பட்டார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து 85 கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 22,000 செலவாகும். இதில் தில்லி கலைக்கூடம் உட்பட, 1,500 சதுர மீட்டர்கள் ஒரு சிறிய அருங்காட்சியகம் போலத் தோற்றமளிக்கத் தனிப்பயனாக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கை[தொகு]

கிர்பால் புது டெல்லியில் பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தை இங்குக் கழித்தார். இவர் சீமாட்டி சிறீராம் கல்லூரியில் அரசியல் அறிவியல் படிப்பதற்கு முன்பு தனது சொந்த ஊரில் உள்ள சர்தார் படேல் பள்ளியில் பள்ளிக் கல்வியினைக் கற்றார். பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த காலத்திலே இவர் ஸ்பிக் மெக்காயின் பிரதிநிதியாக இருந்தார். கிர்பால் பட்டம் பெற்றவுடன் சந்தைப்படுத்தல் குறித்துப் படிக்க இலண்டன் சென்றார். இவர் இலண்டன் கலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து முதுகலைப் பட்டம் பெற்றார்.[1]

2008-ல் கிர்பால் இந்தியக் கலை தொடர்பான மாநாட்டைத் தொடங்கினார். பின்னர் இந்த மாநாடானது இந்தியா கலை திருவிழா என்ற வருடாந்திர நிகழ்வாக உருவானது.[2]

2015ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளில்நாரி சக்தி விருதைப் பெற்றார். இவரது தலைமைத்துவத்திற்காகவும் சாதனைக்காகவும் ஒரு வருடத்திற்கு முன்பு சக்திமிக்க முதல் எட்டுப் பெண்களில் ஒருவராக இருந்தார். [3] அனைத்துலகப் பெண்கள் நாளன்று இந்த விருதை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து பெற்றுக்கொண்டார்.[4]

கிர்பால் ஒரு ஆலோசகர் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு "கலைகளுக்கான தேசிய ஆலோசனைக் குழுவில்" பணியாற்றியுள்ள அனுபவ மிக்கவர்.

பத்து வருடங்கள் இந்தியக் கலை கண்காட்சியை நடத்திய பிறகு, கிர்பால், தனது பொறுப்பினை எம். சி. எச். பாசலிடம் விட்டுவிட்டு தன் மன ஆரோக்கியத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.[5]

விருது[தொகு]

கிர்பால், போர்ப்சின் "40 வயதிற்குட்பட்ட 40" மற்றும் பிசினஸ் டுடேயின் இந்தியாவின் "மிகவும் சக்திவாய்ந்த பெண்கள்" பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Neha Kirpal". asia.wowawards.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-07-03. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  2. "Neha Kirpal | Art Business Conference" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-07-18. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  3. "Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar presented to 6 and 8 Indian women respectively". India Today (in ஆங்கிலம்). 9 March 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  4. "Nari Shakti Puraskar awardees full list". Best Current Affairs. 9 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  5. "User Profile". AGLN - Aspen Global Leadership Network (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
  6. "Neha Kirpal". World Economic Forum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_கிர்பால்&oldid=3886277" இலிருந்து மீள்விக்கப்பட்டது