நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூர்-திருவாரூர் நெடுஞ்சாலையில் தஞ்சாவூருக்குக் கிழக்கே 10 கிமீ தொலைவில் உள்ளது.

காக்கும் தெய்வம்[தொகு]

காக்கும் தெய்வம் காத்தாயி என்று உள்ளூர் மக்களால் போற்றப்படும் அம்மன் நெல்லித்தோப்பில் நெல்லி மரங்களுக்கு இடையே இருக்கிறார். காத்யாயனி தேவியை காத்தாயி என்று வழிபடுகின்றனர்.[1]

மூலவர்[தொகு]

வலது கரத்தில் தாமரை மலரும், இடது கரத்தில் குழந்தையை அணைத்த கோலத்திலும் உள்ளார். அமர்ந்த கோலத்தில் அம்மன் காட்சி தருகிறார்.[1]

திருச்சுற்று[தொகு]

வெளிச்சுற்றில் சப்தமுனீசுவரர், லாட முனி, முத்துமுனி, செம்முனி, வாழ்முனி, கருமுனி, கும்பமுனி, சடைமுனி உள்ளனர். பேச்சாயி காத்தவராயன், மதுரைவீரன் பாவாடைராயன், பாம்பாட்டி வீரன் சன்னதிகளும் இங்கு உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014

வெளி இணைப்புகள்[தொகு]