நெய்வேலி வடக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெய்வேலி வடபாதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் கிராமமும், ஒரு பெரிய ஊராட்சியும் ஆகும். அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, பாலர் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (24மணிநேர சேவை), விவசாய கூட்டுறவு வங்கி, நடுவண் அரசுடைமையுடைய அஞ்சல்நிலையம் உள்ளன.

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5134 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2563 ஆண்கள், 2571 பெண்கள் ஆவார்கள். நெய்வேலி வடபாதி மக்களின் சராசரி கல்வியறிவு 56.63% ஆகும்


நெய்வேலிவடபாதி தன்னுள் 4 வார்டுகளையும் 15 தெருக்களை கொண்டுள்ளது

வார்டு-1

  • பள்ளத்தான் மனை
  • நரிப்பத்தை
  • கட்டுவாம்பிறை
  • நாச்சியான் தெரு
  • குயவர் தெரு

வார்டு-2

1-தோட்டத்தார் தெரு
2-நடுத் தெரு
3-மழவமாடிக்கொல்லை
4-செங்கொல்லை

வார்டு-3

1-செட்டித்தெரு
2-துலுக்கமனை
3-கணக்கர் தெரு
4-ஆவணாண்டிகொல்லை

வார்டு-4

1-வடத்தெரு
2-வடக்கு ஆதிதிராவிடர்தெரு
3-கள்ளர் தெரு
4-பூச்சிகன் தோப்பு

தொழில்

இப்பகுதி மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.அதுவே அவர்களில் வாழ்வாதாரம்.இங்கு நெல், மற்றும் பல வகையான பயிர் வகைகள்(உளுந்து, பாசிபயர், துவரை) போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது நிலத்தடிநீர் மட்டமானது 110 அடி வரை சென்றுள்ளது.சில பகுதிகள் வானம் பார்த்த பூமி்யாக இருந்தது. ஆனால் இப்பகுதி தற்போது பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மி்க அதிகம் இப்பகுதிக்குத்தான், விவசாயத்தில் அதிகப்படியான ஈடுபடுகிறார்கள். காய்கறிகள் குறைந்த அளவே பயிரிடபடுகின்றன , சோளம், மிளகாய், கேழ்வரகு, தென்னை, முருங்கை, மருந்துவ வெள்ளரிக்காய், ஆர் எஸ் பதி, சவுக்கு அதிகமாக இங்கு பயிரிடப்படுகிறது , கரும்பு சொற்ப பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது

நீர் ஆதாரம்:

காவிரி பாயும் இடம் மிகவும் சொற்ப பகுதிகளே, இருப்பினும் 1970-களில் இருந்து 15 அடி முதல் 35 அடி கிணறுகள் தோண்டி ஏற்றம் இறைத்து விவசாயம் செய்து வந்தனர், காலப்போக்கில் 1986 ஆம் ஆண்டு முதல் ஆழ்குழாய் கிணறு தோண்டி எண்ணெய் இயந்திரங்கள் வைத்தும் மின்சார இயந்திரம் வைத்தும் விவசாயம் செய்ய ஆரம்பித்து வைத்தார்கள். அதனால் நிலத்தடி நீர் மேலும் கீழே சென்று கிணறுகளில் நீர் இல்லாமல் கிணறுகள் வற்றி குழிகளாக மாறிவிட்டன.

விவசாயத்தை நம்பி வாழ்ந்தவர்கள் அயல்நாடு சென்றும் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள், 1950 முதல் சிங்கபூர் சென்று சம்பாதித்தவர்களும் உண்டு. இப்போது பலதுறைகளில் முத்திரை பதித்து, ஆசிரியர்களாகவும், கணிப்பொறி வல்லுனர்களாகவும், காவலர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் சிறந்து விளங்குகிறார்கள்.

பயிரிடப்படும் வகைகள்

வாழை,பலா,மா, கொய்யா போன்ற பழவகைகளும் வெண்டைகாய், கத்தரிக்காய், வெள்ளைமுள்ளங்கி, கொத்தவரை, வெங்காயம் மற்றும் கீரைவகைகளும் குறிப்பிடத்தக்க காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.

மத நம்பிக்கை

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் இந்து சமயத்தையே பின்பற்றுகின்றனர்.இருந்தும் இந்துசமய சடங்குகளை குறிப்பாக திருமண சடங்குகளில் பின்பற்றப்படும்

கல்வி
P.Balaji Teacher
கல்வி தற்போது தாய்மொழியிலும், ஆங்கில மொழியிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு இளநிலை, முதுநிலை, பொதுக்கல்வி, தொழிற்கல்வி மற்றும் பொறியாளர் பட்டம் பெற்று உள்ளனர்.மருத்துவர்களும் உள்ளனர். உலகத்தரம் வாய்ந்த கணிப்பொறியியல் வல்லுனர்கலாகவும்
Babu Natesan Manager Nokia
பணியாற்றுகின்றார்கள்.

விழாக்காலங்கள்

பொதுவாக பங்குனி சிந்திரை வைகாசி மாதங்களில் இங்கு எல்லா கோவில்களிலும் சிறப்பாக விழா எடுப்பார்கள், குறிப்பாக அய்யனார் கோவில் மிக சிறந்த கோவில் திருவிழாவாக பார்கின்றனர், இந்த விழாவில் இன்றும் மாட்டுவண்டி பூட்டி குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு வந்து செல்கின்றனர். திருவிழாவின் போது வானவேடிக்கை சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்

குறிப்பிடத்தக்க நபர்கள்:

மிராசு.ராமலிங்க மழவராயர் (அறங்காவல் தலைவர்) ()
மிராசு.மருதப்ப மண்ணவேளார்(காலம் 1940
மிராசு.நல்லபெரியான் மன்னவேளார்(ஊராட்சி மன்ற தலைவர்)
மிராசு. குஞ்சப்ப கலியிராயர் (ஊராட்சி மன்ற தலைவர்)
மிராசு.முனியைய்யா கலியிராயர் (ஒன்றிய குழு தலைவர்)
மிராசு.ரெ நடேசன் (ஊராட்சி மன்ற துணை தலைவர், கல்வி குழு தலைவர்)

அண்டை கிராமங்கள்:

இடையாத்தி, சென்னியவிடுதி, நரங்கியபட்டு

பேரூராட்சி: கறம்பக்குடி

நகராட்சி: பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, ஆலங்குடி

நகரங்கள்: பட்டுக்கோட்டை · தஞ்சாவூர் - புதுக்கோட்டை - திருச்சி - ராமேஸ்வரம் - ராமநாதபுரம் - மதுரை

விமான நிலையம் : திருச்சி [2 மணி நேரம் ], மதுரை: [2 மணி நேரம் ]

ஆறுகள்: காவிரி ஆறு

வழிபாட்டு இடங்கள்: தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் · மனோரா · இராமேஸ்வரம், வேளாங்கண்ணி, நாகூர் தர்க்கா,

கல்வி, நூலகம், பிற: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள், தஞ்சை சரசுவதிமகால் நூலகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்வேலி_வடக்கு&oldid=3823765" இலிருந்து மீள்விக்கப்பட்டது