நெப்டியூனியம்(IV) பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூனியம்(IV) பாசுபைடு
Neptunium(IV) phosphide
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/3Np.4P
    Key: BLKYGPPFNRPFDX-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Np].[Np].[Np].[P].[P].[P].[P]
பண்புகள்
Np3P4
வாய்ப்பாட்டு எடை 834.90 g·mol−1
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

நெப்டியூனியம்(IV) பாசுபைடு (Neptunium(IV) phosphide) என்பது Np3P4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நெப்டியூனியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

750 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடமாக்கப்பட்டு முத்திரையிடப்பட்ட குவார்ட்சு குழாயில் நெப்டியூனியம் மற்றும் சிவப்பு பாசுபரசு தனிமங்கள் விகிதாச்சார அளவுகளில் இணைத்து நெப்டியூனியம்(IV) பாசுபைடை உருவாக்கலாம்:[2][3]

3Np + 4P -> Np3P4

பண்புகள்[தொகு]

இயற்பியல் பண்புகள்[தொகு]

நெப்டியூனியம்IV) பாசுபைடு தண்ணீரில் கரையாது.

I 43d என்ற இடக்குழுவில் கனசதுரப் படிக வடிவமாக நெப்டியூனியம்(IV) பாசுபைடு கருப்புநிறத்துடன் படிகமாகிறது. Th3P4 சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பில் நெப்டியூனியம்IV) பாசுபைடு உள்ளது.[4]

வேதிப் பண்புகள்[தொகு]

நெப்டியூனியம்(IV) பாசுபைடு அடர் ஐதரோ குளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து பச்சைநிற கரைசலைத் தருகிறது:[5]

Np3P4 + 12HCl -> 3NpCl4 + 4PH3

மேற்கோள்கள்[தொகு]

  1. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3671. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=Neptunium+phosphide+NpP&pg=PA3671. பார்த்த நாள்: 5 March 2024. 
  2. (in en) Isotopic Power Sources ...: A Compendium : Property and Processes Review. Martin Nuclear Division. 1961. பக். 2-170. https://books.google.com/books?id=-9S294GXQtMC&dq=Neptunium(IV)+phosphide+Np3P4&pg=SA2-PA170. பார்த்த நாள்: 19 March 2024. 
  3. Morss, L. R.; Edelstein, Norman M.; Fuger, Jean (31 December 2007) (in en). The Chemistry of the Actinide and Transactinide Elements (3rd ed., Volumes 1-5). Springer Science & Business Media. பக். 743. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-3598-2. https://books.google.com/books?id=KyHyM0ObXrAC&dq=Neptunium(IV)+phosphide+Np3P4&pg=PA743. பார்த்த நாள்: 19 March 2024. 
  4. Koch, Günter (5 October 2013) (in de). Transurane: Teil C: Die Verbindungen. Springer-Verlag. பக். 249. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-11547-3. https://books.google.com/books?id=WCi2BgAAQBAJ&dq=Neptunium(IV)+phosphide+Np3P4&pg=PA249. பார்த்த நாள்: 19 March 2024. 
  5. Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3671. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://books.google.com/books?id=9eJvoNCSCRMC&dq=Neptunium(IV)+phosphide+Np3P4&pg=PA3671. பார்த்த நாள்: 19 March 2024.