நூற்றொகை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூற்றொகை விளக்கம் என்பது 1888 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் நூல் ஆகும். இந்த நூலை பேராசிரியர் பெ. சுந்தரனார் எழுதினார். இந்த நூலில் "இவ்வுலக வாழ்க்கைக்கு மனிதனின் அறிவு வளர கணிதம், இரசாயணம், உயிரியல் உளநூல், வானவியல், சோதிடம், புவியியல், இலக்கணம், அறம், சிற்பம், கடற்பயணம், போர்க்கலை, மருத்துவம் என்று பல்வேறு துறைகளை அக்காலத்தில் வழங்கிய சொற்களைக் கொண்டு விளக்குகிறார்."[1] அக்காலத்தில் வளர்ச்சி பெற்ற பல் துறை அறிவியல் துறைகளைப் பற்றிய விளக்கங்களை தொகுத்து வகுத்து தருவதில் இது ஒரு முன்னோடி நூல்.

அமைப்பு[தொகு]

இந்த நூல் 38 சூத்திரங்களைக் கொண்டது. ஓவ்வொரு சூத்திரமும் ஒரு துறையைப் பற்றியது. இந்த நூலில் பல புதிய கலைச்சொற்கள் எடுத்துக் கையாளப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. மனோன்மணியம் சுந்தரனாரின் நூற்றொகை விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூற்றொகை_விளக்கம்&oldid=2746004" இலிருந்து மீள்விக்கப்பட்டது