உள்ளடக்கத்துக்குச் செல்

நூறு மைல் உணவுக் கட்டுப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
100-மைல் உணவுக்கட்டுபாடு
The 100 Mile Diet:
A Year of Local Eating
நூலாசிரியர்அலிசா ஸ்மித், ஜே. பி. மேக்கினான்
நாடுகனடா
பொருண்மைஉணவு
வகைஅபுனைவு
வெளியிடப்பட்டதுமார்ச் 2007 (ரேண்டம் ஹவுஸ்)
ஊடக வகைஅச்சு (கடின அட்டை & மெல்லிய அட்டை)
பக்கங்கள்272
ISBN0-679-31482-2
OCLC74028846

நூறு மைல் உணவுக் கட்டுப்பாடு, (The 100-Mile Diet) என்பது புகழ் பெற்ற கனடிய எழுத்தாளர்கள் இருவரால் எழுதப்பெற்ற நூலாகும்.

நூலும் நூலாசிரியரும்

[தொகு]

இந்நூல் கனடிய எழுத்தாளர்களான அலிசா சிமித் மற்றும் ஜே. பி. மேக்கினான் ஆகியோர்களால் எழுதப்பட்ட உண்மைச் சம்பவ உணவுக் கட்டுப்பாட்டு முறை நூல் ஆகும்.

மார்ச் 2005 முதல் ஒரு தம்பதியினர் தங்களது வாழிடத்திலிருந்து நூறு மைல் தூரத்தில் விளைந்த பொருள்களை மட்டும் வாங்கிப் பயன்படுத்தினார்கள். பலசரக்கு கடைகளைத் தவிர்த்து உழவர் சந்தையில் கிடைக்ககூடிய காய்கறிகள், கிழங்குகள், கடல் உணவுகள் மற்றும் பருப்பு வகைகளை வாங்கிப் பயன்படுத்தினர். சமையல் எண்ணெய், அரிசி, சர்க்கரை ஆகிய உணவு பொருட்களைத் தனது அன்றாட உணவுகளிலிருந்து தவிர்த்திருக்கிறார்கள். பனிக்காலத்திற்குத் தேவையான உணவுகளையும் சேமித்து வைத்துள்ளார்கள்.

அந்தத் தம்பதியினர் அவர்களது உணவுக்கட்டுப்பாட்டையும் அவர்களது அனுபவங்களையும் சமுக வலைத்தள இதழான தி டை என்ற இதழில் பகிர்ந்திருக்கிறார்கள். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதனால் இந்த எழுத்தாளர்கள் இருவரும் தங்கள் அனுபவங்களை 12 இயல்களாக புத்தகம் எழுதினார்கள். இந்தப் புத்தகம் கனடிய புத்தக சந்தையில் அபாரமாக விற்பனையானது.

பின்னணி

[தொகு]

அருகாமையில் கிடைக்கும் உணவுப்பொருள்களை உட்கொள்ளும் உணவுப் பழக்கம் தொடர்பான ஆலிசா இசுமித்து மற்றும் ஜே. பி. மேக்கின்னன் ஆகியோரது இந்தக் கருத்தியலானது 2004 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் வடக்கு பிரித்தானிய கொலம்பியாவில் இவர்களது தனி வசிப்பறையில் சந்தித்த போது தொடங்கியது. [1] இவர்களின் உணவு வழங்குதல் களங்கள் கிட்டத்தட்ட தீர்ந்து போன நிலையில் இரவு தங்களைச் சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு உணவளிக்கும் பொருட்டு இவர்கள் தங்கள் அருகாமை நிலப்பகுதிகளில் உணவுத் தேவைகளுக்காக தேடிச் சேகரித்தனர். டோலி வார்டன் ட்ரவுட், காட்டு காளான்கள், டேன்டேலியன் இலைகள், ஆப்பிள்கள், புளிப்பு செர்ரிகள் மற்றும் ரோஸ் ஹிப்ஸ், தோட்டத்தில் இருந்து உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு ஆகியவற்றைக் கொண்ட அவர்களின் இரவு உணவு தம்பதிகளை மிகவும் கவர்ந்தது. வீடு திரும்பியவுடன், வான்கூவரில் உள்ள கிட்சிலானோ குடியிருப்பில், உள்ளூர் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் தொடர்ந்து பின்பற்றினர்.[2][3] அவர்கள் இறுதியில் ஒரு வருடத்திற்கு தங்கள் வீட்டில் இருந்து 100 மைல்களுக்குள் வளர்க்கப்பட்ட உணவை உண்ணும் பழக்கத்தை முயற்சி செய்ய முடிவு செய்தனர். அவர்கள் வசந்த காலத்தின் முதல் நாளான மார்ச் 21 அன்று அடையாளமாக இவ்வகை உணவுப் பழக்கத்தைத் தொடங்கினர்.[4] ஜூன் மாதம் தொடங்கி, அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பற்றி தி டையில் கட்டுரைகளை எழுதினர். 30 வயதிற்குட்பட்ட தம்பதியர், ஒவ்வொருவரும் எழுத்தில் அனுபவம் பெற்றவர்கள்: ஸ்மித் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிக்கையாளராகவும், புனைகதை அல்லாத எழுத்தை கற்பித்தவராகவும், மெக்கின்னன் விருது பெற்ற வரலாற்று புனைகதை அல்லாத புத்தகமான டெட் மேன் இன் பாரடைஸின் ஆசிரியராகவும் இருந்தார். [5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Irving, Pamela (10 October 2007). "Worldwide phenomenon began with one simple meal". Edmonton Journal: p. E10. 
  2. Murrills, Angela (19 April 2007). "Alisa Smith and J.B. MacKinnon". The Georgia Straight (Vancouver Free Press). https://www.straight.com/article-86371/alisa-smith-and-j-b-mackinnon. 
  3. Coppard, Patricia (6 May 2007). "Green grow the markets; Kitsilano couple determined to eat only locally produced food find they cannot live by kale alone, and they longed for a bit of bread". Times-Colonist (Victoria, B.C.): p. D10. 
  4. Giese, Rachel (11 April 2007). "Home cooking: Alisa Smith and J.B. MacKinnon talk about The 100-Mile Diet". cbc.ca இம் மூலத்தில் இருந்து 2008-07-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080702003138/http://www.cbc.ca/arts/books/100_mile_diet.html. 
  5. Simonds, Merilyn (5 May 2007). "Food for thought about what we eat". The Gazette (Montreal): p. J6. 

வெளியிணைப்புகள்

[தொகு]