உள்ளடக்கத்துக்குச் செல்

நூர் பானோ (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூர் பானோ
இயற்பெயர்நூர் பானோ கோபாங்
பிறப்பு1942
மிதூ கோபாங் கிராமம், பாதின் மாவட்டம், சிந்து மாகாணம்
இறப்பு14 பிப்ரவரி 1999
தல்ஹார், பாதின் மாவட்டம்.
இசை வடிவங்கள்சிந்தி இசை
தொழில்(கள்)நாட்டுப்புறப் பாடகர்
இசைத்துறையில்1970–1990

நூர் பானோ (Noor Bano) (1942 - 14 பிப்ரவரி 1999) பாக்கித்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் ஆவார். இவரது சிறந்த மற்றும் இனிமையான குரல் காரணமாக, இவர் சிந்து முழுவதும், குறிப்பாக கிராமப்புற சிந்தில் பிரபலமாக இருந்தார்.

சுயசரிதை[தொகு]

நூர் பானோ 1942ஆம் ஆண்டில் பாதின் மாவட்டத்திற்கு அருகிலுள்ள மிதூ கோபாங் என்ற கிராமத்தில் பிறந்தார். பின்னர், இவர் தல்ஹார் என்ற பகுதிக்குச் சென்றார். இவரது தந்தையின் பெயர் சுலைமான் கோபாங், ஒரு ஏழை விவசாயியாவார். இவர் எந்தப் பள்ளிக்கும் செல்லவில்லை. அருகிலுள்ள கிராமங்களில் திருமணப் பாடல்களைப் பாடி வந்தார். [1] ஹயாத் கோபாங் மற்றும் உஸ்தாத் மிதூ கச்சி ஆகியோரிடமிருந்து இசையில் பயிற்சி பெற்றார்.

வானொலியில் பாடுதல்[தொகு]

பிரபல அறிஞர்கள் பிர் அலி முகம்மது ஷா ரசிதி, பிர் ஹசாமுதீன் ஷா ரசிதி ஆகியோர் சிந்துவின் இசை மற்றும் கலாச்சாரத்தில் பிரபலமானவர்கள். தல்ஹாரில் உள்ள சையத் வாடல் ஷா ரசிதியின் இல்லத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு இசை நிகழ்ச்சியில் பாட நூர் பானோ அழைக்கப்பட்டார். விருந்தினர்கள் இவரது இயல்பான இனிமையான குரலால் மிகவும் ஈர்க்கப்பட்டனர். மேலும், பாக்கித்தான் வானொலியில் பாடுமாறு அறிவுறுத்தினர். சையத் வாடல் ஷாவின் மகன் பிர் ஜமான் ஷா ரசிதி 1960களின் பிற்பகுதியில் வானொலியில் இவரை அறிமுகப்படுத்தினார். [2] பாக்கித்தான் வானொலியில் இவரது முதல் பாடல் மூலம் சிந்துவின் ஒவ்வொரு கிராமத்திலும் இவர் பிரபலமடைந்தார். 1970கள் மற்றும் 1980களில் சிந்துவின் மிகவும் பிரபலமான பெண் நாட்டுப்புற பாடகர்களில் ஒருவராக இருந்தார்.

பாடல்[தொகு]

பாக்கித்தானில், இவர் ஒரு தனி பாடகியாக பெரும்பாலான பாடல்களைப் பாடினார். இருப்பினும், பிரபல பாடகர்களான மாஸ்டர் முஹம்மது இப்ராஹிம், மிதூ கச்சி, ஜரினா பலோச் , அமினா ஆகியோருடனும் இவர் பாடினார். "லாடா" அல்லது "சஹெரா "என்று அழைக்கப்படும் சிந்தி திருமண பாடல்களுக்கும் இவர் பிரபலமாக இருந்தார். இவரது சில பாடல்கள் பாக்கித்தான் வானொலியின் இசை நூலகத்தில் கிடைக்கின்றன.

இறப்பு[தொகு]

இவர் 1999 பிப்ரவரி 14 அன்று தல்ஹாரில் இறந்தார், ஹைதர் ஷா லக்கியாரி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். [3] இவரது மகள் ஹுமிரா கோபாங்கும் ஒரு பாடகி, ஆனால் அவரால் தனது தாயின் புகழை அடைய முடியவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rahookro Usman; Noor Bano Gopang, Sona Sarekhiyoon Sartiyoon (In Sindhi), pp. 145, Samroti Publication, Tharparker, 2017.
  2. "Mai Noor Bano Sindhi Folk Music Singer". Media Music Mania (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-05-19. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  3. Chandio, Khadim Hussain; Noor Bano, Maroo Jay Malir Ja (in Sindhi), pp. 242, Ganj Bux Kitab Ghar, 2002.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நூர்_பானோ_(பாடகர்)&oldid=3704695" இலிருந்து மீள்விக்கப்பட்டது