நுஸ்லி வாடியா
Appearance
நுசுலி வாடியா Nusli Wadia | |
---|---|
பிறப்பு | 15 பெப்ரவரி 1944 மும்பை, இந்தியா |
பணி | வணிகர் |
பெற்றோர் |
|
வாழ்க்கைத் துணை | மௌரின் வாடியா |
பிள்ளைகள் | நெஸ் வாடியா இயகாங்கீர் வாடியா |
நஸ்லி வாடியா (Nusli Wadia) ஒரு இந்தியத் தொழிலதிபர். பாம்பே டையிங், பிரிட்டானியா இண்டஸ்ட்ரியஸ் ஆகிய குழுமங்களின் தலைவரான நஸ்லி வாடியா பார்சி சமூகத்தைச் சேர்ந்த நெவில் வாடியா மற்றும் டினா வாடியா என்ற இணையரின் மகன் ஆவார். பாகிஸ்தானின் தலைவரான முகமது அலி ஜின்னா, இவருடைய தாய் வழி பாட்டனார் ஆவார்.
டாடா கெமிக்கல்ஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ் ஆகிய குழுமங்களின் இயக்குநராகவும் உள்ளார்.[1] [2] நஸ்லி வாடியா பாரதிய ஜனதா கட்சியின் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானியின் நெருங்கிய நண்பர் ஆவார்.
சான்றாவணம்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
- ↑ http://tatachemicals.com/About-Us/Leadership-team/Nusli-N-Wadia