நுண்வட்டு
![]() | |
---|---|
ஊடக வகை | காந்தவொளியியல் வட்டு |
கொள்திறன் | 80 நிமிடங்கள் (சாதாரண நுண்வட்டு), 45 மணித்தியாலங்கள் வரையிலான ஒலிதம் (ஒரு ஜிகாபைற்றுக் கொள்ளளவு) |
வாசித்தல் தொழிநுட்பம் | 780 நனோமீற்றர் சீரொளி |
பதிவுத் தொழிநுட்பம் | காந்தப் புலப் பண்பேற்றம் |
கண்டுபிடித்தவர் | சோனி |
பயன்பாடு | ஒலிதச் சேமிப்பு, தரவுச் சேமிப்பு |
நுண்வட்டு (MiniDisc) என்பது காந்தவொளியியல் சேமிப்புச் சாதனமாகும்.[1] சாதாரண நுண்வட்டில் 80 நிமிடங்கள் நீளமான ஒலிதக் கோப்பைப் பதிவு செய்ய முடியும்.
நுண்வட்டானது 1992ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நுண்வட்டு அதே ஆண்டு நவம்பரில் சப்பானிலும் திசம்பரில் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விற்பனைக்கு விடப்பட்டது.
வடிவமைப்பு[தொகு]
நுண்வட்டானது மில்லிமீற்றர் அளவிலான பொதியுறையில் வைக்கப்படுகின்றது.[2] இது 3.5 அங்குல நெகிழ் வட்டின் உறைப் பெட்டியை ஒத்தது. அத்தோடு, நுண்வட்டானது தரவுகளைச் சேமித்து வைக்கதற்கு மீள எழுதக்கூடிய காந்தவொளியியல் தேக்ககத்தைப் பயன்படுத்துகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ["நுண்வட்டு அறிக்கை (ஆங்கில மொழியில்)" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305124527/http://studygalaxy.com/ordinaryview2.php?rep=180. நுண்வட்டு அறிக்கை (ஆங்கில மொழியில்)]
- ↑ நுண்வட்டுக் கைந்நூல் (ஆங்கில மொழியில்)