நீர் அருந்தாத உயிரினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்நாள் முழுவதும் தண்ணீரே குடிக்காமல் உயிர் வாழும் விலங்குகளில் கங்காரு எலி என்ற ஒரு வகை பிரபலமானது . இது வட அமெரிக்காவில் காணப்படுகிறது. மணற்பாங்கான இடங்களில் வாழ்க்கை நடத்துகிறது. மணலில் ஒரு அடி  ஆழ த்திற்கு குழி தோண்டி அதில் வாழ்க்கை நடத்துகிறது . 

இது பசுமையான சாறு நிரம்பிய செடிகளை உணவாக கொள்கிறது .மேலும் பனித்துளி மூலமாக நிறைய ஈரத்தை பெற்றுக்கொள்கிறது. இது இரவில் தான் சுறுசுறுப்பாக வெளியே இரை தேட வருகிறது. நிலவொளியில் கூட இது வெளியே வருவதில்லை. இது சூரிய ஒளி பட்டு தன்  உடம்பு உலர்ந்து போகும்படி விடுவதில்லை.

இது தன் வலையின் வாசலைக்கூட கள்ளிச்செடிகளின் துண்டுகளை கொண்டு அடைத்து வைத்து கொள்ளும். இதனால் வளை யின் ஈரம் பாதுகாக்கப்படுகிறது. வளை முழுவதும் மணலால் நன்கு போர்த்தப்பட்டு இருப்பதால் இந்த எலி மேற்பரப்பில் நிலவும் கடுமையான தட்ப வெப்ப மறுபாடுகளில் இருந்து தன்னை நன்கு பாதுகாத்து கொள்கிறது. 

இந்த வகை எலி எப்போதும் வியர்வையை வெளியிடுவது இல்லை. இதன் சிறுநீரகங்கள் உடலின் கழிவை வெளியேற்ற மிகக் குறைந்த அளவு நீரையே பயன்படுத்துகிறது. 

ஆடக்ஸ் என்கிற ஒரு வகை மான் சகாராப்  பாலைவனத்தில்  உள்ளது. இது தாவரங்களில் உள்ள பனித்துளியில் இருந்தும், அடர்த்தியற்ற தாவரங்களில் இருந்தும் தனக்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொண்டு வாழ்கிறது. 

இந்த மானுக்குத் தேவையான பெரும்பாலான தண்ணீர் இதன் உடலிலேயே  மூச்சுக்   காற்றின் துணைப் பொருளாக உற்பத்தி செய்யப்படுகிறது .தண்ணீரையும் கரியமில வாயுவையும் வெளியிடுவதன் மூலம் குளுக்கோஸ் பிராணவாயுவுடன் சேர்ந்து அதற்கு சக்தியைத் தருகிறது.. 

பாம்புகள்,பல்லிகள் , போன்ற இன்னும் பல இதர மாமிசம் உண்ணும் உயிரினங்கள் தாங்கள் உண்ணும் பூச்சிகள், பிற உயிரினங்களின் உடலில் உள்ள ஈரத்தைப் பெற்றுக்கொள்கின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராம் குமார் (பிப்ரவரி 2001). உயிரின விந்தைகள். சங்கர் பதிப்பகம்.