உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்மவுலோகமாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீர்மவுலோகமாதல் (Hydrometalation ) என்பது ஒரு வகையான கரிமவுலோக வேதியியல் வேதிவினையாகும். இவ்வினையில் ஐதரசனுடன் ஒரு உலோகம் இணைந்துள்ள அதாவது ஒரு உலோகவைதரைடு (M-H, உலோகவைதரைடு) பிணைப்புள்ள வேதிச்சேர்மம் ஆல்கீன் போன்ற நிறைவுறா பிணைப்புள்ள (RC=CR) ஒரு சேர்மத்துடன் சேர்ந்து கார்பனுடன் ஒரு உலோகம் இணைந்துள்ள (RHC-CRM)[1] ஒரு புதிய சேர்மம் உருவாகிற வினையைக் குறிக்கிறது. இவ்வினையில் ஈடுபடும் உலோகம் ஐதரசனை விட எலக்ட்ரான் கவர்திறன் குறைவாகப் பெற்றிருக்கும். பீட்டா – ஐட்ரைடு நீக்க வினை இதற்கு எதிரான வினையாக கருதப்படுகிறது. அமைப்பு ரீதியாக நீர்மவுலோகமாக்கல் வினை கார்போவுலோகமாதலுடன் தொடர்பு கொண்டது. அடி மூலக்கூறு அல்கைனாக இருக்கும்போது வினைல்கரிமவுலோகம் உண்டாகிறது.

Hydrometalation of an alkene

நீர்மபோரானாதல், நீர்மசிலைனாதல் மற்றும் நீர்மசர்கோனாதல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Elschenbroich, C. ”Organometallics” (2006) Wiley-VCH: Weinheim. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-29390-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்மவுலோகமாதல்&oldid=2746745" இலிருந்து மீள்விக்கப்பட்டது