நீரில்லா வெள்ளம்: பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீரில்லா வெள்ளம்: பட்டியல் (List of non-water floods) என்பது நீரில்லாமல் ஏற்பட்ட வெள்ளங்களின் பட்டியல் ஆகும். இந்த வெள்ளம் மண் பாய்ச்சல்கள், எண்ணெய் கசிவுகள் அல்லது எரிமலை சேற்றுப்பாவுகளால் நிகழ்ந்தவை ஆகும். இந்த வெள்ளம் சேமிப்பு வசதிகளில் ஏற்படும் திடீரென பாதிப்புக் காரணமாகச் சேமிப்பு திரவங்கள் வெளியேறுவது அல்லது தொழில்துறையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நச்சுக் கழிவு வெளியேற்றங்கள் அடங்கும். சேமிப்பு வசதி குறைபாடுகளினால் ஏற்படும் இச்சம்பவங்கள் பொதுவாக ஒரு சிறிய பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தினாலும், விழைவு நகரங்களில் பேரழிவாக உள்ளது. எடுத்துக்காட்டாக, 1919-ல் வெல்லப்பாகு தொட்டியில் ஏற்பட்ட செயலிழப்புக் காரணமாக உருவான வெல்லப்பாகு வெள்ளத்தினால் அமெரிக்காவின் மாசசூசெட்சில் உள்ள பாஸ்டனில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

தொழிற்சாலைகளின் நீர்மத்தேக்கங்கள் பெரும்பாலும் நச்சு கழிவுகளைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவற்றில் ஏற்படும் பாதிப்பு பெரிய பகுதியை வெள்ளத்தில் மூழ்கடித்து, சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்துகிறது. 2010ஆம் ஆண்டு அங்கேரியில் உள்ள அஜ்கா அலுமினா ஆலையில் உள்ள சேமிப்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அருகிலுள்ள சிறிய நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் பலர் உயிரிழந்தனர். 2008ஆம் ஆண்டு அமெரிக்காவின் டென்னசியில் கிங்ஸ்டன் புதைபடிவ ஆலை கசிவினைச் சுத்தம் செய்யப் பல ஆண்டுகள் ஆனதோடு, இதில் 40 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

பட்டியல்[தொகு]

நீரில்லா வெள்ளம்: பட்டியல்
வெள்ளம் நிகழ்வு நாள் வெள்ளம் ஏற்படுத்தியப் பொருள் இடம்
இலண்டன் பீர் வெள்ளம்[1][2][3] அக்டோபர் 1814 பீர் இலண்டன், இங்கிலாந்து
டப்ளின் விஸ்கி தீ.[4] சூன் 1875 விஸ்கி டப்லின், அயர்லாந்து
பெரும் வெல்லப்பாகு வெள்ளம்[5][6] சனவரி 1919 வெல்லப்பாகு பாஸ்டன், ஐக்கிய நாடுகள்
ராக்வுட் & ஆம்ப்; நிறுவனத்தின் கப்பல் துறை தீ[7] மே 1919 உருகிய சாக்லேட் மற்றும் வெண்ணெய் நியூ யார்க்கு சிட்டி, ஐக்கிய நாடுகள்
விஸ்கான்சின் வெண்ணெய் வெள்ளம்[8][9] மே 1991 வெண்ணெய், பாலாடைக்கட்டி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மேடிசன், ஐக்கிய நாடுகள்
கிங்ஸ்டன் புதைபடிவ ஆலை நிலக்கரி பறக்க சாம்பல் குழம்பு கசிவு திசம்பர் 2008 தண்ணீரில் கலக்கப்படும் நிலக்கரி உபதயாரிப்புகள் கிங்சுடன், தென்னேசி, ஐக்கிய நாடுகள்
அஜ்கா அலுமினா ஆலை விபத்து அக்டோபர் 2010 பாக்சைட் எச்சம் தண்ணீரில் கலக்கப்படுகிறது அஜ்க்கா, அங்கேரி
மரியானா அணை விபத்து நவம்பர் 2015 தண்ணீரில் கலந்த கூலக்கழிபொருள் மரியானா, பிரேசில்
பெப்சி பழச்சாறு வெள்ளம் ஏப்ரல் 2017 பல்வேறு சாறுகள் லெபெடியன், உருசியா
லெவிரா டிஸ்டில்லர் ஒயின் வெள்ளம் செப்டம்பர் 2023 சிவப்பு தேறல் சாவோ லூரென்சோ டோ பைரோ, போர்த்துகல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Beames, Thomas (1852). The Rookeries of London: Past, Present and Prospective. London: T. Bosworth. இணையக் கணினி நூலக மையம்:828478078. https://books.google.com/books?id=35hUAAAAcAAJ&pg=PR3. 
  2. Brinch Kissmeyer, Anders; Garrett, Oliver (2012). "Fermentation vessels". in Garrett, Oliver. The Oxford Companion to Beer. New York: Oxford University Press. doi:10.1093/acref/9780195367133.001.0001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-536713-3. https://books.google.com/books?id=Ga4MYyZq-RMC&pg=PP1. 
  3. Clarkson, Janet (2014). Food History Almanac: Over 1,300 Years of World Culinary History, Culture and Social Influence. Lanham, MA: Rowman & Littlefield. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4422-2715-6. https://archive.org/details/foodhistoryalman0000clar/page/n5. 
  4. Hopkins, Frank (June 2008). Hidden Dublin: Deadbeats, Dossers, and Decent Skins. Mercier Press Ltd.. பக். 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781856355919. https://books.google.com/books?id=pgWPrxwoI2cC&q=dublin+whiskey+fire&pg=PA189. பார்த்த நாள்: 7 June 2020. 
  5. Hinrichsen, Erik (8 September 2010). "The Boston Molasses Disaster: Causes of the Molasses Tank Explosion". Bright Hub (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் March 5, 2019.
  6. "'Molasses Disaster' Featured at Evening at 74". Beacon Hill Times. பார்க்கப்பட்ட நாள் March 5, 2019.
  7. "Gutters Run Fudge; Urchins Run Miles to Chocolate Fire". The Brooklyn Daily Eagle: p. 3. May 12, 1919. https://www.newspapers.com/clip/31468896/rockwood-chocolate-spill-1919/. 
  8. "Top News Stories of 1991". Madison Capital Times. December 28, 1991. https://www.newspapers.com/article/the-capital-times/133627013/. 
  9. Brueck, Dana (2011-05-03). "20 Years Ago Today: Central Storage & Warehouse Fire" (in en). NBC15 இம் மூலத்தில் இருந்து October 3, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231003184700/https://www.nbc15.com/content/news/20_Years_Ago_Today_Central_Storage__Warehouse_Fire_121153104.html.