நீராறு அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீராறு அணை
அமைவிடம்கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு
திறந்தது1975

நீராறு அணை என்பது இந்திய ஒன்றியம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும். நீராற்றின் குறுக்கே 1975 ஆம் ஆண்டு மேலணை, 1982 ஆம் ஆண்டு கீழணை என இரண்டு இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின்[1] கீழ் வரும் இந்த அணைகளின் மொத்தக் கொள்ளளவு முறையே 0.04 டி.எம்.சி மற்றும் 0.17 டி.எம்.சி ஆகும்[2].


இடைமலையாற்றின் துணையாறு[தொகு]

கேரளாவில் உருவாகி தமிழ்நாட்டிற்குள் பயணித்து மீண்டும் கேரள எல்லைக்குள் பாய்ந்து இடைமலையாறு பேரியாற்றுடன் கலக்கின்றது. இடைமலையாற்றின் துணையாறாக நீராறு தமிழ்நாட்டின் இடைமலைக்குடி அருகே இணைகின்றது.[3]

சுற்றுலாத் தளம்[தொகு]

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களுள் ஒன்று வால்பாறை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவறாமல் காணச் செல்லும் இடங்களில் ஒன்று நீராறு அணை. நீராறு அணைப் பகுதியைச் சுற்றி இருக்கும் வனப்பகுதி யானைகள் வழித்தடமாக இருப்பதால் யானைக் கூட்டத்தின் நடமாட்டம் இப்பகுதியில் மிக அதிகமாகக் காணப்படும். யானைகள் நடமாட்டம் காரணமாக நீராறு அணைக்குச் செல்லும் சாலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான போக்குவரத்து அடிக்கடி நிறுத்தப்படுவது உண்டு. [4]

மேலும் பார்க்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
நீராறு அணை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்".
  2. "தமிழ்நாட்டு அணைகளின் கொள்ளளவு விபரம்" (PDF).
  3. "நீராறு தென்மேற்காக பாய்ந்து தமிழ்நாட்டிற்குள்ளேயே இடைமலையாற்றில் கலக்கின்றது".
  4. "நீராறு அணைப்பகுதியில் வாகனங்கள் செல்லத் தடை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீராறு_அணை&oldid=3760995" இலிருந்து மீள்விக்கப்பட்டது