நீட்டுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீட்டுமை கொண்ட தாமிரம்

நீட்டுமை (Ductility) எனும் இயற்பியற் பண்பு ஒரு பொருள் எந்த அளவுக்கு நீடித்த நிலையான வடிவமாற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதைக் குறிக்கிறது. பொதுவாக இது உலோகங்களின் கம்பியாக நீட்ட வல்ல திறன் என்றும் சொல்லலாம்.

சறுக்குப் பெயர்ச்சித் தகைவு (shear stress) தரும் போது எந்த அளவு ஒரு பொருள் தாங்குகிறதோ அந்த அளவு அதன் நீட்டுமை அதிகம் ஆகும். தங்கம், செம்பு, அலுமினியம் ஆகியவை நல்ல நீட்டுமை உடையவை.

தகடாகும் தன்மை உள்ள தங்கம்

தகடாகும் தன்மை என்பது ஒரு பொருளை உடைக்காமல் எந்த அளவு தட்டையாக வடிவமைக்க முடியும் என்பதாகும். உலோகங்கள் தகடாகும் தன்மை பெற்றவை. அலோகங்களோ தகடாகும் தன்மை அற்றவை. தங்கம், இரும்பு, அலுமினியம், காரீயம் போன்றவை தகடாகும் தன்மை உடையவற்றுக்கு உதாரணங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்டுமை&oldid=1766185" இருந்து மீள்விக்கப்பட்டது