நில உச்சவரம்புச் சட்டம் (தமிழ்நாடு)
நில உச்சவரம்பு சட்டம்[சான்று தேவை]
[தொகு]தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு)நிர்ணய சட்டம் 1961 . இச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் 15.2.1970.
- இதன் படி 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு 15 தர ஏக்கர்.
- கூடுதல் உறுப்பினர்களுக்கு 5 ஏக்கர்.
- மொத்த உச்சவரம்பு 30 ஏக்கர்.
- பெண்களுக்கு சீதனமாக தர 10 தர ஏக்கர் நிலம் தனியே அனுமதி உண்டு.
- தமிழகத்தில் ஜென்மம் நிலம்-நீலகிரி மாவட்டம்.
- பாதாம் நிலம்-கன்னியாகுமாரி.
- பண்னையாள் நிலம்-தஞ்சாவூர்.
மதராஸ் குடியானவர்கள் பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு)நிர்ணய சட்டம் 1961
சட்டத்திற்கு எதிரான இயக்கங்கள்
[தொகு]அன்றைய காங்கிரஸ் அரசு சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்திய நில உச்ச வரம்பு திருத்த சட்டமசோதா நிலப்பிரபுக்களை காப்பாற்றும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டிய விவசாயிகள் , அதனை எதிர்த்து மசோதாவில் திருத்தம் கொண்டுவரக்கோரி பி. சீனிவாசராவ் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழகம் முழுவதும் மக்களிடம் கோரிக்கையை கொண்டு செல்ல மாபெரும் பாதயாத்திரையை மேற்கொண்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அப்போதைய மாநில தலைவராக இருந்த பி.சீனிவாசராவ் தலைமையில் கோவையிலிருந்து ஒரு அணி யும் அப்போதைய பொதுச்செயலாளர் தோழர் மணலி கந்தசாமி தலைமையில் மதுரையி லிருந்து ஒரு அணியுமாக இரண்டு பகுதிகளி லிருந்து சென்னை நோக்கி நடைப் பயண பிரச்சார இயக்கம் புறப்பட்டது. இரண்டு குழுக்களும் 600 மைல் தூரம் 37 நாட்கள் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் பிரச்சாரம் செய்தனர். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மனித உரிமைப் போராளி தோழர் பி.சீனிவாசராவ்". தீக்கதிர்: p. 4. 30-09-2019. http://www.theekkathir.in/epaper#.