நிலைகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரைக்காட்டி

நிலைகாட்டி (ஆங்கிலம்: Cursor) என்பது கணினித் திரை அல்லது ஏனைய காட்சிச் சாதனங்களுள் ஒன்றில் அமைவிடத்தைக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும்.[1] விட்டு விட்டுத் தோன்றும் உரைக்காட்டியானது சில சந்தர்ப்பங்களில் விடுபடல் சுட்டுக்குறி என்றும் அழைக்கப்படும். அதே போல சுட்டி நிலைகாட்டியானது சுட்டி என அழைக்கப்படும்.[2]

உரைக்காட்டி[தொகு]

பெரும்பாலான கட்டளைக் கோட்டு இடைமுகங்களிலும் உரை திருத்திகளிலும் உரைக்காட்டியானது கீழ்க் கோடு, செவ்வகம், கிடைக் கோடு என்பனவற்றுள் ஏதேனுமொன்றால் காட்டப்படும். உரைக்காட்டியானது விட்டு விட்டுத் தோன்றக் கூடியதாகவோ நிலையாகவோ இருக்கும். பயனரால் இடப்படும் உரை உரைக்காட்டி தோன்றும் இடத்தில் இடப்படும்.

சுட்டி[தொகு]

புள்ளித் துணையுறுப்பின் (பெரும்பாலும் சுட்டியின்) அசைவுகளைத் திரையில் செயற்படுத்துவதற்குச் சுட்டி பயன்படுத்தப்படும்.[3] சுட்டி பல வகைப்படும்.[4] வெவ்வேறு இயங்குதளங்களில் வெவ்வேறு சுட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைகாட்டி&oldid=3733007" இருந்து மீள்விக்கப்பட்டது