நிறுவன வளம் திட்டமிடல்
நிறுவன வளம் திட்டமிடல் (enterprise resource planning அல்லது ERP) என்பது ஒரு வகை வணிக மேலாண்மை மென்பொருள். பொதுவாக இது,
- உற்பத்திப்பொருட் திட்டமிடல், கொள்வனவு
- உற்பத்தி அல்லது சேவை வழங்கல்
- சந்தைப்படுத்தலும் விற்பனையும்
- இருப்பு மேலாண்மை
- அனுப்புதலும் பணம் செலுத்தலும்
- நிதி
ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக நடவடிக்கைகள் தொடர்பிலான தரவுகளைச் சேகரித்தல், சேமித்தல், மேலாண்மை செய்தல், விளக்குதல் போன்றவற்றுக்காக ஒரு நிறுவனம் பயன்படுத்தக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த பயன்பாட்டு மென்பொருட் தொகுதி ஆகும். [1].
ஈஆர்பி அமைப்பு, ஒரு சேவை-சார்ந்த கட்டமைப்பு அளவான கனப்பொருள் கட்டமைப்பு மற்றும் மென்பொருள் அலகுடன் ஒருங்கிணைந்தது. அதன் உட்பகுதி வலைகட்டமைப்பில் (LAN)- தகவலை அளிக்கிறது. இதன் கூறு வடிவமைப்பு அலுவலின் தரவு முழுமையை காப்பதுடன் நிர்ணயித்த கூறில் சேர்க்க அல்லது மாறுதல் செய்ய (அநேக வித்தியாசமான தேவைகளுக்கு) ஒரு பகிர்ந்து கொள்ளும் தரவு அடிப்படை மையமாகவும் மற்றும் விநியோகத்திற்கும் இடமளிக்கிறது.
சொல்லின் தோற்றம்
[தொகு]தொடக்கத்தில் ஒரு எம்ஆர்பி (MRP) பொருள் தேவைகளின் திட்டமிடல் மற்றும் சிஐஎம்மின் (CIM) விரிவாக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. இது கார்ட்னர் (Gartner) ஆராய்ச்சி மற்றும் ஆய்வகமாக 1990 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஈஆர்பி வடிவமைப்புத் தொழிலின் கொள்கை அல்லது கோட்பாடு குறிப்பிட்ட துறை அல்லாது இப்போது ஒரு நிறுவனத்தின் அனைத்து மிக முக்கிய செயல்பாடுகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த அமைப்புகளை தயாரிப்புகள் அல்லாத, லாப நோக்கு இல்லாத மற்றும் அரசாங்க அமைப்புகளில் இப்போது காண்கிறோம்.
இந்த ஈஆர்பி அமைப்பை கருத்தில் கொள்ள, ஒரு மென்பொருளில் கண்டிப்பாக குறைந்தது இரண்டு அமைப்புகள் செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு மென்பொருள் பொட்டலத்தில் சம்பளப் பட்டியல் மற்றும் கணக்கு செயல்பாடுகள் இரண்டும் இணைக்கப்பட்டது ஒரு தொழில் நுட்பம் வாய்ந்த ஈஆர்பி மென்பொருளாக கருதப்படுகிறது.
முன்னதாக இருந்த ஈஆர்பி உள்ளடக்கிய தனிப்பட்ட பொருத்தமான உதாரணங்கள் பின்வருமாறு: பொருளின் காலநிர்ணயத்தை நிர்வகித்தல், தொடர் சங்கிலி மேலாண்மை (உதாரணமாக வாங்குதல், தயாரித்தல் மற்றும் விநியோகம் போன்றவை), பண்டசாலை நிர்வகித்தல், வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை(CRM), விற்பனையை நடைமுறைப்படுத்துதல், இணையதள விற்பனை, நிதி நிர்வாகம், மனித வளம், மற்றும் முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பு போன்றவை ஆகும்.
ஈஆர்பி தீர்வுகளில் மேற்பார்வை
[தொகு]சில நிறுவனங்களில் - போதுமான உள்ளமைப்புடன் தகவல் தொழில்நுட்பத் திறனை ஒருங்கிணைக்கும் பல தரப்பட்ட மென்பொருள் தயாரிப்பாளர்கள் - ஒரு பகுதி ஈஆர்பியை மட்டும் நிறைவேற்ற தேர்ந்தெடுத்து மற்றபடி அவர்களின் தேவைக்கேற்றபடி வெளி ஈஆர்பி செய்து அல்லது தனிப்பட்ட வடிவமைப்பை விரிவு செய்து கொள்கிறார்கள். உதாரணமாக, ஒருவர் மனித வளம் மேலாண்மை அமைப்பை வாங்கி அதை வைத்து தனக்குத் தேவையான இடைப்பட்ட வடிவமைப்பை அவர்களே பூர்த்தி செய்து கொள்ளலாம்.
சாதாரணமாக வியாபாரிகளிடையே[மேற்கோள் தேவை] இம்முறை பொதுவாக உள்ளது. இது நடுத்தர வியாபாரிகளிடமும் முரண்படும்போது விற்பனை செய்யும் இட(POS)த்தில் தயாரிப்பு மற்றும் நிதிநிலை பயன்பாடுகளைக் கையாள, பண்டசாலை நிர்வகித்தல், வருகைப் பதிவேடு, வியாபார ஈடுபாடு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றிற்கு பிரத்யேகமான அலுவல் முறை தேவைப்படுகிறது.
ஈஆர்பி பல மென்பொருள் தரவுகள் அடங்கிய ஒரே தரவு அடிப்படையை தருகிறது, அதில் அடங்குவன:
- தயாரித்தல்
- இயந்திரக்கலை, பொருளடக்கப் பட்டியல், கால நிர்ணயம், கொள்திறன், வேலை இயங்கும் நிலைப்பாடு, அடக்க விலை, தயாரிப்பு முறை, செயல்முறை தயாரிப்பு மற்றும் தயாரிப்பு இயங்குதல்
- தொடர் சங்கிலி மேலாண்மை
- ரொக்க ஆணை, சரக்குப் பட்டியல், ஆணை குறித்தல், வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள், தொடர் சங்கிலி திட்டமிடல், வழங்குபவர்கள் காலம் நிர்ணயித்தல், சரக்குகள் ஆய்வு, உரிமைகள் நடைமுறை மற்றும் தரகு கணக்கீடு
- நிதி நிர்வாகம்
- பொது கணக்குப் புத்தகம், ரொக்க நிர்வகிப்பு, செலவு கணக்கீடு, வரவு கணக்கீடு, அசையா சொத்துக்கள்
- செயல் முறை நிர்வாகம்
- விலையடக்கம், விலையிடுதல், நேரம் மற்றும் செலவினங்கள், செயல்திறன் அளவீடு மற்றும் நடவடிக்கைகள்
- மனித வளம்
- மனித வளம், சம்பளப் பட்டியல், பயிற்சி, நேரம் மற்றும் வருகைப் பதிவேடு, வேலை அட்டவணை, சலுகைகள்
- வடிக்கையாளர் தொடர்பு
- விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல், தரகுகள், சேவைகள், வடிக்கையளர் தொடர்பு, அழைப்பு நிலைய உதவி
தரவு பண்டசாலை மற்றும் பல சுய உதவி வாடிக்கையளர், வழங்குபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைப்புகள் ஆகியவற்றுடன் சேர்ந்தது
கையாளும் அதிகாரம் செயலை முடிக்கத் தேவையான உபயோகிப்பாளர் நிலைக்கு ஏற்ற உரிமை
தனிப்பயனாக்குதல் - செயல்முறை விரிவாக்கம், கூடுதல் மற்றும் மாறுதல்களை சரி செய்தல்
நிறுவன வளம் திட்டமிடல் என்கிற சொற்றொடர் தயாரித்தல், வளம் திட்டமிடல் (எம்ஆர்பி II) பின்னர் பொருள் தேவைகளின் திட்டமிடல் (MRP) ஆகியவற்றை மூலமாகப் பெற்றது. மென்பொருள் கட்டமைப்பு நிர்வாகத்தின் பெரும்பகுதியை வரிசைபடுத்தி கொள்திறன் திட்டமிடல் போன்ற செயல்களும் மென்பொருள் செயல் திட்டமாக மாறியதனால் [8]எம்ஆர்பியின் மறு தோற்றமாக ஈஆர்பி உருவானது. [9]ஈஆர்பி அமைப்பு ஒரு நிறுவனத்தின் தயாரித்தல், லாஜிஸ்டிக்ஸ், விநியோகம், சரக்குப் பட்டியல், அனுப்புதல், விலை விவரங்கள், மற்றும் கணக்கிடுதல் போன்றவற்றை பொருத்தமாக கையாளுகிறது. மென்பொருள் தொழில் முறையில் விற்பனை, விளம்பரப்படுத்தல், அனுப்பி வைத்தல், விலையிடுதல், தயாரித்தல், சரக்குப் பட்டியலை நிர்வகித்தல், தர நிர்ணயம் மற்றும் மனிதவள மேலாண்மை ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்க ஈஆர்பி உதவுகிறது.
21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சந்தித்த ஒய்2கெ [Y2K] என்ற சட்ட சிக்கலை சரி செய்ய 1990 –ஆம் ஆண்டுகளில் ஈஆர்பி அமைப்பு பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டது. பல நிறுவனகள் இந்தச் சந்தர்ப்பத்தில் சட்ட திட்டங்களுக்கு ஏற்றபடி ஈஆர்பி அமைப்புக்கு மாறின. ஒய்2கெ [Y2K] சிக்கலை சமாளிக்க பல நிறுவனங்கள் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி விட்டதால், அதிவேக வளர்ச்சி கண்ட ஈஆர்பி 1999-ஆம் ஆண்டு சரிவு கண்டது. [2]
வாடிக்கையாளர்களும் பொது மக்களுக்கும் நேரடியான தொடர்பு இல்லாததால் ஈஆர்பி ஒரு பின்புற அலுவல் அமைப்புகள் என தவறாக எப்போதும் சொல்லப்பட்டது. நேரடியாக வாடிக்கையாளருடன் தொடர்பை நிர்வகிக்கும் வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை முன்புற அலுவல் அமைப்பு (CRM) அல்லது ஈ-வணிகம், ஈ-அரசாங்கம், ஈ-தொலைத்தொடர்பு, ஈ-நிதி மற்றும் வழங்குபவர்கள் தொடர்பு மேலாண்மை (SRM) போன்ற மென்பொருளிலிருந்து இது மாறுபட்டு காணப்படுகிறது.
அகன்ற தொழில் முனைப்பும் உள்கட்ட செயல்பாடுகளையும் ஈஆர்பி கொண்டுள்ளது. செயற்பாட்டிற்கும் தயாரிப்பிற்கும் ஒருங்கிணைந்த அனைத்து வித செயல் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பு இதுவாகும். தயாரித்தல், பண்டசாலை, லாஜிஸ்டிக்ஸ், மற்றும் தகவல் தொழில்நுட்பம் மட்டுமின்றி கூடுதலாக கணக்கிடுதல், மனித வளம், விளம்பரப்படுத்தல் மற்றும் எதிர் கொள்ளும் மேலாண்மை போன்றவற்றை இது உள்ளடக்கியுள்ளது.
ஈஆர்பி 2 என்பது வெளிப்படையான ஈஆர்பி பகுதிகளின் கட்டமைப்பை உள்ளடக்கியது. பழைய அமைப்பு ஈஆர்பி பகுதியின் ஒரே ஒருங்கிணைப்பை உள்ளடக்கியது.[12]
ஈஏஎஸ் - நிறுவனப் பயன்பாட்டு தொகுதியின் புதிய பெயர் கொண்ட முன்னதாக வெளியிடப்பட்ட ஈஆர்பி அமைப்பு, தொழிலின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய, சாதாரண இணையதள உபயோகத்தில் சிறியதாக இருந்தது.[13]
ஈஆர்பி வழங்கும் மென்பொருட்களில் சிறந்த செய்முறைகள் பெரும்பாலும் இணைக்கப்பட்டுள்ளது. ஈஆர்பி வடிவமைப்பை தீர்மானிக்கும் பொது நிறுவனங்கள் தேவைக்கு உரிய மென்பொருளையோ அல்லது அவர்களது தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளவோ சிறப்பான செய்முறைகளை வெளிப்படுத்தக் கூடிய மென்பொருள் அடங்கிய ஒரு பொட்டலத்தை தேர்ந்தெடுக்கலாம்.
ஈஆர்பி முறைக்கு முன்னர் இருந்த மென்பொருள் அனைத்தும் தனிப்பட்ட செயல்முறை அலுவல்கள் அமைப்பிற்கு பொருந்தின. கடும் சிக்கலான அமைப்பு கொண்ட அநேக ஈஆர்பி மற்றும் மாறான விளைவுகளினால் புறக்கணிக்கப்பட்ட ஈஆர்பி முறையை சரி செய்து "சிறப்பான செய்முறைகள்" கொண்டதாக வழங்கப்பட்டது. நிறுவனம் முழமையான பலன் பெரும் அடிப்படையுடன் இந்தச் சிறந்த செய்முறைகளுடன் கூடிய ஒரு அலுவல் செய்ய தகுதி வாய்ந்த ஒன்றை நிறைவேற்றுவது வழியென வழங்குபவர்கள் கருதினார்கள். லுக்விக்ஷபின் பிரயோக அறிவியல் பல்கலைக்கழகம் [14] நுண்ணாய்வு நடத்திய 192 நிறுவனங்களில் மேற்கொண்ட சிறந்த செய்முறைகளின் மூலம் தொழிற்சாலைகளின் செயல் வடிவம், ஆவணங்கள், சோதனைகள் மற்றும் பயிற்சிகள் அனைத்தும் குறிக்கோள் அடிப்படையிலான செயல் முறைகளில் சுமையை குறைத்துள்ளது என்ற முடிவை அறிந்துகொள்ள முடிந்தது. மேலும், இந்தச் சிறந்த செயல்முறைகள் 71 சதவிகித அபாய நிலையை மற்ற மென்பொருட்கள் நடைமுறைப்படுத்தியதைக் காட்டிலும் குறைத்தன. [3]
சிறந்த செயல்முறைகளின் உபயோகம் என்பது [[ஐஎப்ஆர்எஸ் [IFRS] |ஐஎப்ஆர்எஸ்]], சர்பேன்ஸ்-ஆக்ஸ்லி அல்லது பாசெல்-II (IFRS, Sarbanes-Oxley or Basel II) போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு உடன்பட்டு சுலபமாக அமைகிறது. மின்னணு பணப் பரிமாற்றம் என்பது வாணிப செயல்பாட்டு முறைகளிலும் உதவியாக இருக்கிறது. முறையாக வகைப்படுத்துதல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை அல்லது சரக்குகளை குறியீடு செய்தல் ஈஆர்பி மென்பொருளில் தயாராக இருப்பதனால், பல அலுவல்களின் தேவை ஒரே மாதிரியாக இருக்கும் பட்சத்தில் ஈஆர்பியை உறுதியுடன் மறுபதிவு செய்ய முடிகிறது.[16]
செயல்படுத்துதல்
[தொகு]அலுவலகங்களுக்கான அகன்ற நோக்க செயல்களும் செயல்முறைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக பணியாளர் வேலை முறையில் வழக்கமாக முக்கிய மாறுதல்களை புகுத்த வல்ல ஈஆர்பி மென்பொருள் அமைப்பை தயாரிப்பது என்பது சிக்கலான ஒன்று. [4]எடுத்துகாட்டாக ஈஆர்பி மென்பொருளை உள் பணியாளர்களை வைத்து நடைமுறைப்படுத்துவது மிகவும் சிக்கலானதால், அதற்கென தொழில்முறை பயிற்சி பெற்ற வெளி ஆலோசகர்களை வாடகை முறையில் அமர்த்தி இந்த அமைப்பை நடைமுறைப்படுத்துவது விரும்பத்தக்கது. இது ஒரு செலவினங்கள் குறைந்த முறையுமாகும். ஆலோசனை, தனிப்பயனாக்குதல் மற்றும் ஆதரவு-ஆகிய மூன்றிற்கும் வெளிப்புறச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். [18]ஈஆர்பி அமைப்பு நடைமுறைப்படுத்த எடுத்துக் கொள்ளும் காலம் அலுவல்களின் அளவு, கூறுகளின் எண்ணிக்கை, விரிவான தனிப்பயனாக்குதல், மாற்றங்களுக்கான நோக்கம் மற்றும் தன் திட்டத்தை உரிமையாக்கிக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர் ஆகியவற்றைப் பொறுத்தது. ஈஆர்பி அமைப்பு கூறுகளைக் கொண்டதால் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் நடைமுறைப்படுத்த தேவையில்லை என்பதுடன், அவற்றை பல பாகங்களாகப் பிரிக்கலாம். ஒரு திட்டத்தை முடிக்க 14 மாதங்களு ஆலோசகர்கள் தேவைப்படுகின்றனர். [19] ஒரு சிறிய திட்டத்திற்கு (உதாரணமாக, 100 பணியாளர்களைக் கொண்ட நிறுவனத்திற்கு) வடிவம் கொடுத்து அதைச் செயல்படுத்த மூன்றிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை ஆகலாம். எப்படியும் பெரிய, பல இடங்கள், பல தேசங்கள் சம்மந்தப்பட்ட ஒன்றை நடைமுறைப்படுத்த வருடக் கணக்கில் ஆகும். [20] தனிப்பயனாக்குதல் தேவையைப் பொறுத்து நடைமுறைப்படுத்தும் காலம் வெகுவாக மாறுபடுகிறது. [5]
ஈஆர்பி அமைப்புகளை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் அடிக்கடி ஒரு ஈஆர்பி வழங்குபவரையோ பிற ஆலோசனை வழங்கும் நிறுவனங்களையோ உதவிக்கு அழைக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் தொழில்ரீதியான சேவைகளை ஆலோசனை, தனிப்பயனாக்குதல் மற்றும் ஆதாரம் ஆகிய மூன்று துறைகளில் சிறப்பாக வழங்குகிறார்கள். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சமயத்தில் இந்த நிறுவனங்கள் செயல் திட்ட மேலாண்மை, அலுவல்களை ஆய்வு செய்தல், மாற்று மேலாண்மை மற்றும் யுஏடி (UAT) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு அலுவல் தேவைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்படி ஏற்பாடு செய்கிறது.
ஈஆர்பி நடைமுறைப்படுத்திய வெற்றியை தீர்மானிப்பதில் தரவு இடமாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. தரவு இடமாற்றத்திற்கு முன்னர் அதிக முடிவுகள் கட்டாயம் எடுத்தாக வேண்டிய நிலையில் குறிப்பிடத்தக்க திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும். ஈஆர்பியை நடைமுறைப்படுத்துவதில் உற்பத்தி பகுதியின் தரவு இடமாற்றம் முக்கியமற்றதாகக் கருதப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும். பின்வரும் படிகள் தரவு இடமாற்ற உபாயம் ஈஆர்பியை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த உதவும்.[23]
- தரவு இடமாற்றம் செய்ய வேண்டியவைகளை அடையாளங்காணுதல்
- தரவு இடமாற்றம் செய்யப்பட நேரத்தை தீர்மானித்தல்
- தரவு படிமங்களை உருவாக்குதல்
- தரவு இடமாற்றக் கருவிகளை முடக்குதல்
- இடமாற்றம் சம்பந்தமான நிறுவல்களை தீர்மானித்தல்
- தரவு காப்பாக இருக்க முடிவெடுத்தல்
செயல்முறை
[தொகு]ஈஆர்பி வழங்குபவர்கள் அனைத்து வகையிலும் தரமான அலுவல் முறைகளை, சிறந்த அலுவல் செயல் முறைகளின் அடிப்படையில் வடிவமைப்பு செய்துள்ளார்கள். வழங்குபவர்கள் பலராக இருந்தாலும், பல வகைகளில் இருந்தாலும் செயல் முறைகள் அனைத்தும் ஒரே தரமானதாக, இயல்பான கூற்றுடன் இருக்கும். தரமான செயல்முறைக்கு ஏற்ப நடைமுறையில் ஈஆர்பியை மாற்ற நிர்பந்தித்ததன் விளைவாக ஏற்கெனவே நிறுவனங்களில் இருந்த செயல்முறையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. [24] அலுவல் செயல்முறைகள் ஈஆர்பியை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும் முன்னர், நிகழ்கால முறை புறக்கணிக்கப்படுவது தோல்வியுற்ற ஈஆர்பி முறைக்கான முக்கிய காரணமாக இருக்கிறது. [25]அதனால் நிறுவனங்களில் அலுவல்களை முற்றிலும் செய்து முடிப்பது ஈஆர்பி வழங்குபவர்களை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தும் முன்னர் அவசியமாகிறது. இந்த ஆய்வில் அனைத்து விதமான தற்கால இயங்கும் செயல்முறைகளை விரிவாக்கம் செய்வதனால் ஒரு ஈஆர்பி வழங்குபவரின் தரமான கூற்றுகள் நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்றவாறு அமைகிறது. பின்னர் ஈஆர்பியை மறுவடிவாக்கம் செய்து செயல்முறையோடு ஒன்றிப்போகுமாறு செய்யலாம். ஆராய்ச்சிகள் உணர்த்தும் முரண்பட்ட அலுவல்களின் செயல்முறை இடர்களை குறைக்க:
- ஒவ்வொரு நிறுவனத்தின் செயல்முறைகளை அந்நிறுவனத்தின் நடவடிக்கையுடன் இணைப்பது;
- ஒவ்வொரு செயல்முறையையும் தற்போதைய அலுவலுடன் தொடர்புடைய செயல் வல்லமையின் பலன்களை ஆய்வு செய்வது;
- தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படும் தன்னியக்க சாரம்சத்தை புரிந்து கொள்வது. [6] [7]
கிட்டத்தட்ட தனித்து அலுவல்களை மேற்கொள்ளும் கட்டமைப்பு கொண்ட நிறுவனங்களில், ஒவ்வொருவரும் அவர்களின் லாப நஷ்டங்களுக்கு பொறுப்பாகிறார்கள், அத்துடன் செயல்முறைகள், அலுவல் விதிகள், தரவு சார்ந்தவைகள், அதிகாரம் வழங்கும் தலைமைகள் மற்றும் முடிவு மையங்கள் ஆகியன ஈஆர்பி நடைமுறைப்படுத்துவதை கடினமாக்குகிறது. [29] சாராம்சங்கள் உள்ளடக்கிய தேவைகள் ஒத்துப்போக உள் வல்லுநர்களுடன் கலந்து பேசி மாற்று மேலாண்மை அல்லது தளர்ந்த நிகழ்வுகளை நடைமுறைப்படுத்தலாம் உதாரணமாக, முதன்மைத் தரவு மேலாண்மையை முறையாக இணைப்பது பிரத்யேகமாக உருவாக்குதல் மற்றும் / அல்லது அவசியத்திற்கு உட்பட்ட தனிப்பயனை பூர்த்தி செய்வது.
அலுவல்கள் நடைமுறையில் தரமான ஈஆர்பி கூற்றுகளை மறுவடிவம் செய்வதால், ஈஆர்பி அனுகூலம் பெறாததற்கான காரணத்தை நம்மால் உணர்நதுகொள்ள முடிகிறது. இது மாதிரியான நேரீடுகளுக்கான படிவ ஆதாரம் இருந்தபோதிலும், செயல்முறை ஈஆர்பி அமைப்புகள் உண்மையில் தங்களுக்கான அனுகூலத்தை மேம்படுத்திக்கொண்டன. [8] [9]
வடிவமைப்பு (Configuration)
[தொகு]ஈஆர்பியை வடிவமைப்பதன் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் எப்படி அந்த அமைப்பு வேலை செய்யும் என்று நினைக்கிறோமோ அதே போல அந்த அமைப்பு நம்மை வேலை செய்ய அனுமதிக்கும். நிறுவ வேண்டிய கூற்றை தேர்ந்தெடுத்து, பின்னர் வரையறுக்கப்பட்ட அட்டவணைகளை உபயோகித்து நிறுவனங்களின் செயல்முறைக்கு ஏற்ற சிறந்த வேலையமைப்பை பொருத்தமாக செய்து முடிக்கலாம்.
கூறுகள் — அமைப்புகள் கூறுகளைக் கொண்டது, சில இயக்கங்களை நடைமுறைப்படுத்தும் போது இது சாதரணமாக இருக்கிறது. ஆனால் மற்றவைகளில் கூறுகள் இல்லை. நிதி மற்றும் கணக்கு போன்ற சில பொதுவான கூறுகள் அனைத்தும் நிறுவன அமைப்பை நடைமுறைப்படுத்த விழைகின்றன; அவசியம் இல்லாததாக காரணம் கூறி மனித வள மேலாண்மை போன்ற கூறுகளை சில நிறுவனங்கள் தவிர்த்துவிட்டன. உதாரணத்திற்கு ஒரு சேவை செய்யும் நிறுவனத்திற்கு தயாரிப்புகளுக்கான கூறு நிச்சயம் தேவைப்படாது. அதே சமயம் சில நிறுவனங்கள் கூறுகளை மாற்றம் செய்வதில்லை. பொதுவாக பேசும்போது அதிக எண்ணிக்கையில் கூறுகளை தேர்ந்தெடுத்தால் அதிக அளவிலான முழு நன்மைகளும் கிடைக்கும் ஆனால் அதிகமான விலைகள், அபாயங்கள் மற்றும் மாற்றங்களும் ஏற்படும்.
வடிவமைப்பு அட்டவணைகள் – வடிவமைப்பு அட்டவணை ஒரு நிறுவனத்தின் அலுவல்களுக்கு ஏற்ப குறிப்பான நோக்குடன் பொருத்தமான அமைப்புகளை உள்ளடக்கியிருப்பதால் தேவைக்கேற்ப அதனைத் தேர்ந்தெடுக்க முடியும். உதாரணமாக, நிறுவனங்கள் – [[எப்ஐஎப்ஒ [FIFO] மற்றும் எல்ஐஎப்ஒ [LIFO] கணக்கு |எப்ஐஎப்ஓ (FIFO) அல்லது எல்ஐஎப்ஓ (LIFO)]] – கையாளும் விதம் அல்லது பூகோள அடிப்படை, தயாரிப்பு அடிப்படை அல்லது விநியோக அடிப்படை போன்றவைகளில் வருமான அங்கீகரிப்பைப் பொருத்து சரக்குகளின் பட்டியல் கணக்கு தேர்வு செய்யப்படும்.
அப்படி அமைப்பிற்குள் அனுமதி செய்யப்பட விருப்பங்கள் தேவையை பூர்த்தி செய்யாவிட்டால் என்ன நடக்கும்? இந்தச் சமயத்தில் நிறுவனத்திற்கு இரண்டு வழிகள் உள்ளன, ஆனால் அவை இரண்டுமே அர்த்தமற்றது. நிறுவன அமைப்பின் குறியீடுகளை மாற்றி எழுதலாம், அல்லது இருக்கும் அமைப்பைத் தொடர்ந்து உபயோகித்துப் புதிய நிறுவன அமைப்பை உருவாக்கி இணைத்துக் கொள்ளலாம். இரண்டு விருப்பங்களும் செயல்முறைப்படுத்தும் போது கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. மேலும் கூடுதலாக அமைப்பின் ஒருங்கிணைப்பு நன்மைகளை குறைவடையச் செய்கிறது. அமைப்பை அதிகமாக தனிப்பயனாக்கினால் வழங்குபவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையிலான தெரிவிக்கும் இணைப்பு குறைந்து விடுகிறது.
ஆலோசனை சேவைகள்
[தொகு]அநேக நிறுவனங்கள் ஈஆர்பி திட்டத்தை நடைமுறைப்படுத்த போதுமான உட்புற செயல்திறனை கொண்டிருக்கவில்லை. இதன் பலனால் ஈஆர்பி நடைமுறைப்படுத்தும் ஆலோசனை சேவையை பல நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்தன. எடுத்துக்காட்டாக, ஒரு ஈஆர்பி ஆலோசனை குழுமத்தின் பொறுப்புகள் திட்டமிடல், பயிற்சி அளித்தல், பரிசோதனை, நடைமுறைப்படுத்துதல் மற்றும் தனிப்பயனளிக்கும் கூறுகளை கொடுப்பது என்ற அனைத்தையும் உள்ளடக்கி இருந்தன. கூடுதலான தயாரிப்பு பயிற்சியை அளித்தல், விரைவுபடுத்தும் செயல் முறையை தோற்றுவித்தல் மற்றும் அலுவல்களை நடைமுறைப்படுத்துதல், ஈஆர்பியை உபயோகித்து அலுவல்களை மேம்படுத்த பிரத்யேகமான அறிவுரைகளை அல்லது அமைப்பை உகந்ததாக்குதல் மற்றும் அறிக்கைகள் எழுதுவதில் உள்ள சிக்கலை தரவு வடித்தெடுத்தல் அல்லது நடைமுறைப்படுத்த அறிவுத்திறன் உள்ள அலுவலுக்கு துணையாக இருத்தல் போன்றவை தனிப்பயனாக்குதலின் உதாரணங்களாகும்.
இதை அநேக நடுத்தர நிறுவனங்களுக்கு நடைமுறைப்படுத்த ஆகும் செலவு ஈஆர்பி உபயோகிப்பாளர் உரிமத்தின் தோராய பட்டியல் விலையிலிருந்து (தனிப்பயனாக்குதல் தேவையைப் பொறுத்து) இருமடங்காக ஆகலாம். பெரிய நிறுவனங்கள் முக்கியமாக பல இடங்களிலும் பல நாடுகளிலும் இருக்கும் நிறுவனங்களில் இதை அடிக்கடி நடைமுறைப்படுத்துவதால் உரிமத்துக்கு ஆகும் செலவைவிட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக செலவாகும். [மேற்கோள் தேவை]
வளர்ச்சி அடிப்படையிலான ஈஆர்பி பொட்டலக் குறியீடுகளை ஈஆர்பி வழங்குபவர்கள் அளிக்கிறார்கள். ஆரம்ப காலங்களில் ஈஆர்பி வழங்குபவர்கள் தங்களது சாராம்சங்களின் அடிப்படையில் ஈஆர்பியை உருவாக்கும்போது, உட்கட்ட செயல்பாடுகளுடன் நல்ல உத்திகளை ஒருங்கிணைத்து தீர்வு காணும் வகையில் உருவாக்கினர், இதனால் ஈஆர்பியின் விற்பனை குறிப்பிடும் அளவில் இருந்தது.
ஈஆர்பி அமைப்பு, கருத்தளவில் துறையில் சிறந்த நடைமுறைகளை அடிப்படையாக கொண்டவை மற்றும் பரவலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
"அமைப்பின் கரு" தனிப்பயனாக்குதல் மற்றும் வடிவமைத்தல்
[தொகு]ஈஆர்பி வழங்குபவர்கள் தனிப்பயனாக்குவதைக் குறைக்க முன்னேற்பாடான கட்டமைப்புடன் "வடிவமைப்புக்" கருவிகளைக் கொண்டு வாடிக்கையாளர்களின்' தேவைக்கு ஏற்ப அமைப்பின் கரு எப்படி செய்வது என்பதில் அதிக கவனம் செலுத்தினர். தனிப்பயனாக்குதல் மற்றும் வடிவமைத்தல் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட முக்கிய வித்தியாசங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியவை:
- தனிப்பயனாக்குதல் எப்போதும் விருப்பத்திற்கு உட்பட்டது, ஆனால் சில நிலைகளில் வடிவமைப்பு முதலிலேயே (உதாரணமாக நிர்மாணிக்க ஆகும் செலவு/லாபகரமான அமைப்புகள், நிறுவனத்தின் பாரம்பரியம், வாங்குதலுக்கான ஒப்புதல் விதிகள் ஆகியவை அடங்கும்) மென்பொருள் வேலை செய்ய அவசியமாக கருதப்படுகிறது.
- வடிவமைப்பு எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், ஆனால் தனிப்பயனாக்குதல் வடிக்கையளரின் தனிப்பட்ட உரிமைக்குட்பட்ட வியாபார-போட்டிக்கு இடமளிக்கும் செயல்முறைகளைப் பொறுத்தது.
- வடிவமைப்பில் செய்யும் மாறுதல்கள் வழங்கப்பட்ட தரவு அட்டவணைகளில் குறிப்பாக பதிவு செய்யப்படும், ஆனால் தனிப்பயனாக்குதல் வழக்கமாக அட்டவணை கட்டமைப்பில் சில மூல செயல்கள் மற்றும்/அல்லது மாறுதல்களை செய்யத் தேவைப்படுகிறது.
- வடிவமைப்பு மாற்றங்களின் விளைவாக அமைப்பின் செயல்திறனை தொடர்புபடுத்தி சொல்ல முடியும், இதன் பெரும் பொறுப்பு ஈஆர்பி வழங்குபவர்களைச் சார்ந்ததாகும். தனிப்பயனாக்குதலின் விளைவை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது மற்றும் பரிசோதனை மேற்கொள்ள குழுமத்திற்கு கால அவகாசம் தேவைப்படலாம்.
- வடிவமைப்பு மாற்றங்கள் அனைத்திலும் மென்பொருள் மேம்படுத்தப்பட்டாலும், புதிய கூறுகள் நிலைத்து நிற்கும். சில தனிப்பயனாக்குதல் (உதாரணமாக உபயோகக் குறியீடுகள் முன்-வரையறுக்கப்பட்ட "கொக்கிகள்" முன்னரும்/பின்னரும் தரவு திரைகளில் தோன்றும்) மேம்படுத்தலில் நிலைக்கு ஆனாலும் அவைகளை மறுபரிசீலனை செய்தாக வேண்டும். அதிக நீட்டித்த தனிப்பயனாக்குதல் (உதாரணமாக மாறுதல் செய்யப்பட அந்த அடிப்படையான தரவு கட்டுமானங்கள்) மேம்படுத்தலில் மறைந்து விடும் அபாயம் உள்ளது அதனால் அவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த ஆய்வினால், தனிப்பயனாக்குதலில் ஒரு ஈஆர்பி பொட்டலம் எதிபாராத விதமாக விலை உயர்ந்தும் சிக்கலாகவும் இருக்க நேரிடும் போது, அமைப்பின் முழுமையான பலன்கள் கிடைப்பது தாமதமாகிறது. எப்படி இருந்தாலும், தனிப்பயனாக்குதலில் ஒரு ஈஆர்பி தொகுதியால் இரகசிய விருப்பத்தை குறிப்பிட்ட வகையில் மிகையாக்கி தொழிற்சாலையின் சிறந்த செயல் முறைகள் மூலம் குறைந்த உணர்திறன் பகுதியில் நோக்கங்களை நிறைவேற்ற முடிகிறது.
விரிவாக்கம்
[தொகு]இந்த இடத்தில் "விரிவாக்கம்" என்பது வழிமுறைகளுடன் ஒப்படைக்கப்பட்ட ஈஆர்பி நிலைகளை வெளியாட்கள்[third-party] உதவிகொண்டு விரிவுபடுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்ப முறையில் வெளியாட்கள் செயலுடன் அநேக ஈஆர்பி அமைப்பை செயற்படுத்துவது என்பது சுலபமே.
- காப்பகத்தில் பதியும் குறிப்புகள், எடுத்துரைத்தல் மற்றும் மறு வெளியீடுகள் (சுலபமாக முயன்று பெற முடியும், ஏனெனில் அவைகள் பெருமளவு நிலையான தரவு);
- செயற்படுத்தும் தரவு குறிப்புகளை கைப்பற்றுகிறது, உதாரணமாக ஊடுருவி, பணப்பெட்டிகள் அல்லது ஆர்எப்ஐடியை, உபயோகிப்பது சுலபமாகும் (ஏனெனில் அவைகள் இருக்கின்ற தரவை அளிப்பதாலே);
....எப்படியானாலும் ஈஆர்பி செயலினிகளின் செயற்கையான விதிகளுடன் இருப்பதால் கட்டுப்பாட்டுடன் முதன்மைத் தரவை ஏற்படுத்தவோ அல்லது மாற்றவோ முடியும், சில குறிப்பீடுகள் மிகவும் நிறைவேற்ற கடினமானதாக இருக்கிறது.
பராமரித்தல் மற்றும் ஆதரவு சேவைகள்
[தொகு]பராமரித்தல் மற்றும் ஆதரவு சேவைகள், இயக்கங்களில் உள்ள ஈஆர்பி அமைப்பை கண்காணிப்பதிலும், நிர்வகிப்பதிலும் ஈடுபடுகிறது. இந்த செயல்களை நிறுவனத்தினுள் தகவல்நுட்பப் பிரிவை சேர்ந்த பணியாளர்கள் செய்கிறார்கள் அல்லது வெளிப்புற ஆலோசனை மற்றும் சேவை நிறுவனங்களின் வல்லுநர்களைக் கொண்டும் நிர்வகிக்கப்படுகிறது.
அனுகூலங்கள்
[தொகு]ஒரு ஈஆர்பி அமைப்பைக் கொண்டிருக்காத சமயத்தில், பெரிய தயாரிப்பாளர்கள் பல்வேறு மென்பொருள் செயல்களின் அறிவிப்புகள் அல்லது இணைப்புகள் ஒன்றுகொன்று திறம்பட செயல்படாது போவதைக் காண்கிறார்கள். ஒன்றுக்கொன்று இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைகளின் உள்ளடக்கம் பின்வருமாறு:
- பல தரப்பட்ட செயல்பகுதிகளுக்கு இடையில் தக்க அறிவிப்பு, உற்பத்தி, திறனாற்றல் போன்றவற்றை முழுமையாக உறுதி செய்வது
- வடிவமைப்பு இயந்திரக்கலை (சிறந்த முறையில் தயாரிப்பது எப்படி என்பதைத் தெளிவுபடுத்துதல்)
- ஆணை செயல்படும் தடம், ஒப்புகொண்டது முதல் நிறைவேற்றும் வரையிலுமான கால அளவு
- வருமான சுழற்சி, விலை விவரம் முதல் பணம் வரவு வரையிலும்
- பிணைந்துள்ள செயல் முறைகள் சிக்கலைச் சமாளிப்பது
- மூன்று-வழி இடையேயான பொருந்தியானது செயல்படும் தடம் வாங்குதற்கான ஆணை(ஆணையிட்டது), சரக்குகளின் பட்டியலைப் பெறுதல் (வந்து சேர்ந்தது), மற்றும் அடக்கவிலை (வழங்குபவர்கள் விலை விவரம்) ஆகியவற்றை உள்ளடக்கியது
- செயல்படும் தடம் வருமானம், அடக்கம் மற்றும் லாபம் இவற்றிற்கு எல்லாமான சிறிய அளவிலான கணக்கு
ஈஆர்பி அமைப்புகளின் தரவு ஒரு இடத்தில் மையமாக இருக்கிறது. இதன் உள்ளடக்கிய நன்மைகள் பின்வருமாறு:
- பல அமைப்புகளின் இடையே மேற்கொள்ளப்படும் மாறுதல்களைப் பரிமாற சிக்கலை நீக்குகிறது
- அலுவல் முறைகளின் செயல்கள் வரம்பை கடக்கும்போது பாதுகாப்பிற்கு இடமளிக்கிறது.
- நிறுவனத்தை மேலிருந்து கீழாக பார்க்கும் வசதி உள்ளது. ("தகவல் தீவுத்திடல்" இல்லை)
- பல அனுமதிகளையும் பாதுகாப்பு வகைகளையும் ஒரு தனி கட்டமைப்பில் சேர்த்து ஒன்றாக்கும்போது தரவு உணர்திறன் இழக்கும் அபாயத்தை குறைக்கிறது
ஈஆர்பி அமைப்பினுள் சில பாதுகாப்புப் பகுதிகள் அடங்கியுள்ளதனால் வெளியாட்கள் அத்துமீறி நுழைவது தடைசெய்யப்படுகின்றனர், அதாவது தொழிற்சாலையை வேவுபார்த்தல், மற்றும் உள்ளேயே நடக்கும் குற்றம், இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமாயின் நம்பகத்தன்மையில் மோசம் செய்வதாகும். தரவு-மறைமுக மாற்றம்/குறிப்பெடுத்தல், உதாரணமாக ஏமாற்றமடைந்த பணியாளர் உள்நோக்கத்துடன் விலையை மாற்றியமைத்து நிறுவனத்தின் லாபம் அல்லது நாச வேலை முயற்சியில் ஈடுபடலாம். ஈஆர்பி அமைப்புகள் பொருத்தமான உள் அதிகாரங்களை நடைமுறைப்படுத்தி இது மாதிரி செயல்களை தவிர்க்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வகைத் தகவல் பாதுகாப்பு கருவிகளுடன் ஈஆர்பி வழங்குபவர்களும் முழுமையான மேம்பாட்டை நோக்கி செயல்பட்டு வருகிறார்கள். [10]
அனுகூலமின்மைகள்
[தொகு]தொடர்ந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலர், மாற்றங்களை நடைமுறைப்படுத்த மற்றும் பரிசோதனை செய்ய ஆகும் செலவு ஆகியவற்றிற்கு போதுமான முதலீடு இல்லாததாலும் அதே நேரத்தில் நிறுவனம் ஈஆர்பி அமைப்பிலும் அதனை உபயோகப் படுத்தும் விதத்திலும் தரவு முழுமையை பாதுகாக்கும் கொள்கை இல்லாமையுமே ஈஆர்பி அமைப்பில் முக்கிய சிக்கலாகக் கருதப்படுகிறது.
- அனுகூலமின்மைகள்
- தனிப்பயனாக்குதல் ஈஆர்பி மென்பொருளில் குறைவாக உள்ளது.
- மாற்று-இயந்திர நுணுக்கமான அலுவல் செயல்முறைகள் "தொழிற்சாலை தரத்தில்" குறிப்பிட்டபடி பொருத்தி ஈஆர்பி அமைப்பில் உருவாக்கினால் அதன் விளைவாக போட்டிகளுக்கு அனுகூலமின்றி நஷ்டம் ஏற்படும்.
- ஈஆர்பி அமைப்பு மிகவும் விலை உயர்ந்தது (இதனால் மெல்லிய ரக புது ஈஆர்பி(லைட்) {விரிவு பகுதியாக} பிரச்சினைக்கு தீர்வானது.)
- ஈஆர்பி முறை குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள ஸ்திரமாகவும், கடினமாகவும் இருப்பதனால் வேலை இயங்குதல் மற்றும் அலுவல் செயல்முறை சில நிறுவனங்களில் தோல்வி அடையக் காரணமாக குறிப்பிடப்பட்டது.
- அதிக முழுமையான தொடர்புகளுக்கு உயர்ந்த நுணுக்க மாற்று செயல்களில் திறம்பட வேலை செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனம் குறைந்தபட்ச தரத்துடன் இருக்கலாம், பிறகு காலப்போக்கில் "கெட்ட தரவு" நம்பகத்தன்மையை சில செயல்களில் குறைத்து விடும்.
- ஒரு முறை அமைப்பும் நிலைநாட்டப்பட்டால், மாற்றத்திற்கான செலவினங்கள் எந்த ஒரு பங்கு கொள்பவற்கும் மிக அதிகமாகும் (இணைக்கப்பட்ட நிலையில் வளைந்து கொடுத்து, எதிர் கொள்ளும் கட்டுப்பாடு குறைகிறது).
- நிறுவன வரம்பு, தெளிவின்மையாக இருந்தால் தணிக்கை கணக்கு, தவிர்க்க இயலாத கடமை பொறுப்பு மற்றும் பணியாளர் மனஉறுதி ஆகியவற்றில் சிக்கல்கள் ஏற்படும்.
- உணர்திறன் தகவல்களை துறைகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ள எதிர்ப்பாக இருப்பதால் பயனுள்ள மென்பொருளின் உபயோகம் குறைகிறது.
- சில பெரிய நிறுவனங்கள் பற்பல துறைகளாகப் பிரிக்கப்பட்டு, தனிப்பட்ட வளமை, குறிக்கோள், உத்தரவு சங்கிலி, இன்னும் பல ஒரே நிறுவனத்தில் ஒன்றுபடுத்தினால் அது குறைவான பலனையே கொடுக்கும்.
- வாடிக்கையாளர்களின் உண்மையான தேவையை அளவாக கொண்டால் இந்த அமைப்பு சிக்கலானதாக தோன்றும்.
- ஈஆர்பி அமைப்பில் மையப்படுத்தப்பட்ட தரவு ஒரே இடத்தில் இருக்கும். இதனால் பாதுகாப்பு அத்துமீறினால் அபாயம் அதிகரித்து உணர்திறன் தகவலுக்கு அதிக இழப்பு ஏற்படக்கூடும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ எச்டேவேஸ், ஜ [Esteves, J]., மற்றும் {Pastor, J] பஸ்தர், நிறுவன வளம் திட்டமிடல் அமைப்பின் ஆராய்ச்சி: An Annotated Bibliography, Communications of AIS, 7(8) pp. 2-54.
- ↑ Monk, Ellen; Wagner, Bret (2006), Concepts in Enterprise Resource Planning (Second ed.), Boston: Thomson Course Technology, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-619-21663-8
- ↑ [15] ^ "என்அன்செட் ப்ராஜெக்ட் சக்செச்ஸ் Through எஸ்ஏபி [SAP] பெஸ்ட் பிரக்டிசெஸ் – இன்டர்நேஷனல் பெஞ்ச்மர்கிங் ஸ்டடி, ஐஎஸ்பிஎன் [ISBN] 1-59229-031-0.
- ↑ [17] ^ வாட் இஸ் ஈஆர்பி[ERP]?, http://www.tech-faq.com/erp.ஷ்ட்ம்ல்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [21] ^ கிரிடிகல் இசுஸ் அபிக்டிங் அன் ஈஅர்பி [ERP] இம்ப்ளிமேண்டசன், http://carl.sandiego.edu/gba573/critical_issues_affecting_an_erp.htm பரணிடப்பட்டது 2013-01-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ [26] ^ கிங்.W[King.W] "என்சுரிங் ஈஆர்பி [ERP] இம்ப்ளிமேண்டசன் சக்சஸ்," இன்பர்மாசன் சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட் , சம்மர் 2005.
- ↑ உஸுப், Y [Yusuf,Y], .,குணசேகரன், A [A.Gunasekaran] A. , மற்றும் அப்தொர்பே, M [M.Abthorpe M.] , "எண்டெர்ப்ரைஸ் இன்பர்மாசன் சிஸ்டம்ஸ் ப்ராஜெக்ட் இம்ப்ளிமேண்டசன்: ஏ கேஸ் ஸ்டடி ஒப் ஈஆர்பி [ERP] in [ரோல்ல்ஸ்-ராய்ஸ்]Rolls-Royce ," இன்டர்நேஷனல் ஜர்னல் of ப்ரடக்சன் எகனாமிக்ஸ் , 87(3), பெப்ரவரி 2004.
- ↑ டுர்பன் et al. 2008). இன்பர்மாசன் டெக்னாலஜி பார் மேனேஜ்மென்ட், டிரன்ச்பர்மின்க் ஆர்கனைசெசன்ஸ் இன் தி டிஜிட்டல் எக்கானமி . மச்சசுசெட்ட்ஸ்: ஜான் விலி & சன்ஸ் , இன்க்., p. 320. ஐஎஸ்பிஎன் [ISBN]978-0-471-78712-9
- ↑ [31] ^ தேனிங், B ;Dehning,B] ,B. and ஸ்டர டோபோலாஸ் T.Stratopoulos, to 'டெடேர்மிநந்ட்ஸ் of ஏ சச்டைனபில் காம்பெடிடிவ் அட்வான்டேஜ் டியு to அன் IT-எநெபில்ட் ஸ்ட்ரடேஜி,' ஜர்னல் of ஸ்ட்ரடேஜிக் இன்பர்மாசன் சிஸ்டம்ஸ், வால். 12, 2003
- ↑ Walsh, Katherine (2008). "The ERP Security Challenge". CSOonline. CXO Media Inc. பார்க்கப்பட்ட நாள் 2008-01-17.
{{cite web}}
: Unknown parameter|month=
ignored (|date=
suggested) (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- சிஐஒ [CIO மேகசின்'s ஏபிசி ABCs of ஈஆர்பி] பரணிடப்பட்டது 2007-07-14 at the வந்தவழி இயந்திரம்