நிறுவனப் பண்பாடு
நிறுவனப் பண்பாடு என்பது ஒரு நிறுவனத்துக்குள் தோன்றும் பண்பாட்டினைக் குறிக்கும்.(இதை Organizational culture என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.) ஒரு சமுதாயத்துக்கு பண்பாடு என்று ஒன்று இருப்பது போலவே, ஒரு நிறுவனத்துக்கும் உண்டு. நிறுவனத்தில் இருப்பவர்கள் அந்த சூழ்நிலைக்கென்றே ஒரு சில பழக்க வழக்கங்களையும், அணுகு முறைகளையும், சிந்தனை வழக்கத்தையும் வளர்த்துக் கொண்டு இருப்பார்கள். இதுவே நிறுவனப் பண்பாடாக பின் மலர்கின்றது. [1] நிறுவனப் பண்பாடு பல உட் கூறுகளைக் கொண்டிருக்கும். அவற்றில், ஒரு சிலயாவன: அனைவருக்கும் பொதுவான கருத்துக்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், ஒழுக்க விதிகள், தொழில் நுட்பக் கூறுகள், ஆளுமை முறைகள், மற்றும் இனக் கோட்பாடுகள். [2]
ஒரு வணிக நிறுவனத்தில் (business organization) நிலவும் சமூக, உளவியல் சூழலை நிறுவனப் பண்பாடு (Organizational culture) என்று கூறலாம். பணி புரியும் பணியாளர்கள்(employees) எவ்வாறு தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள், நடந்து கொள்கிறார்கள், என்ன புரிந்து கொள்கிறார்கள், புரிந்து கொண்டதை எப்படிப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பனவற்றை அனைத்தையும் உள்ளடக்கியது நிறுவனப் பண்பாடு எனலாம். கூட்டுச் சான்றாண்மை (collective values), கூட்டு நம்பிக்கைகள், கொள்கைகள் ஆகிவை நிறுவனப் பண்பாட்டை உருவாக்குகின்றன.
உரோசார் (Bernard L. Rosauer (2013)) அவர்கள் கூற்றுப்படி நிறுவனப் பண்பாடு என்பது கீழ்க் கண்ட மூன்று கூறுகளைக் கொண்டது[3]:
- நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள்
- செய்யும் பணி
- நுகர்வோர்
தோற்றம்
[தொகு]நிறுவனப் பண்பாடு என்ற கருத்து முதன் முதலில் சாக்காசு (Dr. Elliot Jaques ) என்பவரால் அறிமுகப் படுத்தப் பட்டது.[4]
பயன்பாடு
[தொகு]நிறுவனப் பண்பாடு என்பது வாழ்வில் பல இடங்களில் காணக் கிடைக்கின்றது. எடுத்துக் காட்டாக, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசாங்க அலுவலகங்கள், கடைகள் ஆகியன தங்களுக்கென ஒரு பண்பாட்டை வளர்த்துக் கொள்கின்றன.
வலியதும் எளியதும்
[தொகு]ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் தெளிவாக அதன் பண்பாட்டை அறிந்து செயலாற்றுவார்களானால் அது வலிய பண்பாடாக இருக்கும். அன்றேல், அது வலிமை குறைந்த எளிய பண்பாடாக இருக்கும்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Business Dictionary. Organizational culture.[1] பரணிடப்பட்டது 2019-08-28 at the வந்தவழி இயந்திரம் Accessed June 22, 2015
- ↑ Needle, David (2004). Business in Context: An Introduction to Business and Its Environment. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1861529923.
- ↑ ""Three Bell Curves: Business Culture Decoded"". Archived from the original on 2019-08-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.
- ↑ Jo., Hatch, Mary. Organization theory : modern, symbolic, and postmodern perspectives. Cunliffe, Ann L. (Third ed.). Oxford, United Kingdom. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199640378. இணையக் கணினி நூலக மைய எண் 809554483.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Flamholtz and Randle, 2011, p. 9