நியோவாஸ்குலர் கிளக்கோமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியோவாஸ்குலர் கிளக்கோமா, (Neovascular glaucoma) என்பது இரண்டாம் வகை கண் அழுத்த நோய்களில் ஒன்றாகும். கண்ணின் கோணம் "புதிய இரத்த நாளங்களால்" மூடப்பட்டிருக்கும். எனவே "நியோவாஸ்குலர்" என்று பெயர். "கோணம்" என்பது உங்கள் கண்ணின் வண்ணப் பகுதியை உருவாக்கும் கருவிழிக்கும், கண்ணின் முன் பகுதியான கருவிழிப்படலத்திற்கும் இடையே உள்ள கோணமாகும். விழித்திரைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவாக உள்ள நபர்கள், இந்நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. விழியின் கோணத்தில் புதிய அசாதாரணமான இரத்த நாளங்கள் உருவாகத் தொடங்கி, அதன் வடிகால் அடைபடும் போது நியோவாஸ்குலர் கிளக்கோமா ஏற்படுகிறது. இந்நிலையில் உள்ள நோயாளிகள் தங்கள் பார்வையை இழக்கும் அபாயம் உள்ளது.

சில நேரங்களில் குறிப்பாக கண்புரை அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு இந்த நோய் தோன்ற வாய்ப்புள்ளது. கண்ணில் கட்டி இருந்தாலும் கண்ணீர் அழுத்தம் அதிகரிக்கும். நோயின் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரின் பரிந்துரையின் பேரில் லேசர் சிகிச்சை எடுத்துக் கொண்டால் கண்ணின் உள் விழி அழுத்தம் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தலாம்.[1]

தடுப்பு முறைகள்[தொகு]

விழித்திரை நரம்பு அடைப்பு மற்றும் நீரிழிவு விழித்திரை நோய்கள் நியோவாஸ்குலர் கிளகோமாவின் பொதுவான அடிப்படைக் காரணங்கள் ஆகும். இந்த விழித்திரை நோய்களுக்கான ஆபத்து காரணிகளில் வயது, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவை அடங்கும். உண்மையில் சில வகையான நரம்பு அடைப்புகளுக்கு, உயர் கண் அழுத்த நோய்க்கு காரணி ஆகும். எனவே இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும், ஒவ்வொரு 1 முதல் 2 வருடங்களுக்கும் ஒரு விரிவான கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

வடிகால் கோணத்தில் வளரும் புதிய இரத்த நாளங்கள் வடு மற்றும் குறுகலை ஏற்படுத்தலாம். இது இறுதியில் கோணத்தை முழுமையாக மூடுவதற்கு வழிவகுக்கும். இந்த செயல்முறையானது கண்ணில் உள்ள திரவம் வடிகால் அமைப்பை அணுக முடியாததால் கண் அழுத்தத்தை அதிகரிக்கிறது. நியோவாஸ்குலர் கிளௌகோமாவின் நிகழ்வுகளில், கண் அடிக்கடி சிவப்பு மற்றும் வலியுடன் இருக்கும். மேலும் பார்வைத் திறன் குறையும்.

அறிகுறிகள்[தொகு]

நியோவாஸ்குலர் கிளகோமாவின் அறிகுறிகளில் கண் வலி, கண் சிவத்தல் மற்றும் பார்வைக் குறைபாடு ஆகியவை அடங்கும். இருப்பினும் நோயின் ஆரம்ப கட்டங்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம்.

சிகிச்சை முறைகள்[தொகு]

நியோவாஸ்குலர் கிளௌகோமாவின் சிகிச்சைக்கு மருந்துகள், லேசர் சிகிச்சை மற்றும் கண் அறுவை சிகிச்சைகள்[2] மூலம் கண் அழுத்தத்தைக் குறைக்கலாம். இஸ்கிமிக் விழித்திரைக்கான சிகிச்சையில் விழித்திரை லேசர் (பான்-ரெட்டினல் ஃபோட்டோகோகுலேஷன்) பயன்படுத்தப்படுகிறது. இது விழித்திரையின் அசாதாரன இரத்த நரம்பு நாளத்தில் திரவ உற்பத்தியை (VEGF) குறைக்கிறது.[3] உற்பத்தியைக் குறைக்கிறது மற்றும் அதற்கான எதிர்ப்பு மருந்துகளை கண்ணுக்குள் செலுத்தப்படுகிறது. இதனால் அசாதாரண இரத்த நாளங்கள் பின்வாங்கவும் அல்லது மறைந்துவிடும்.

மேற்கோள்கள்[தொகு]