நியாமான நீதிவிசாரணைக்கான உரிமை
Appearance
நியாமான நீதிவிசாரணைக்கான உரிமை என்பது சட்டத்தை மதித்து ஆட்சி நடக்கும் நாடுகளில் மிக முக்கியாமன ஒரு அடிப்படை மனித உரிமை ஆகும். இத உலக மனித உரிமைகள் சாற்றுரை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை உட்பட்ட பல்வேறு அனைத்துலக உடன்படிக்கைகளாலும் சட்டங்களாலும் உறுதிசெய்யப்பட்ட உரிமை ஆகும். நீதி முறையாக வழங்கப்படுகிறது என்பதை உறுதிசெய்வதே நியாமான நீதிவிசாரணைக்கான உரிமையின் நோக்கமாகும்.
நியாய நீதிவிசாரணை உரிமைகள்
[தொகு]பின்வரும் உரிமைகள் நியாய நீதிவிசாரணை உரிமைகளில் அடங்கும்:[1]
- சுதந்திரமான, பக்கசார்பற்ற, தகுதிவாந்த தீர்ப்பாயத்தால் நீதி வழங்கப்படுவதற்கான உரிமை.
- வெளிப்படையான வழக்குக்கான உரிமை.
- காலம் தாமதியாமல், பொறுப்பான நேரத்திற்குள் வழக்கு நடைபெறுவற்கான உரிமை.
- வழக்குரைஞர் வைத்துக் கொள்வதற்கான உரிமை.
- மொழி பெயர்ப்பு அல்லது பொரு விளக்கம் பெறுவதற்கான உரிமை.