உள்ளடக்கத்துக்குச் செல்

நிமல்கா பெர்னாண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2015 ஆம் ஆண்டில் நிமல்கா பெர்னாண்டோ

நிமல்கா பெர்னாண்டோ (Nimalka Fernando) இலங்கையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மாற்று வளர்ச்சி முன்னுதாரணங்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளும் மக்கள் இயக்கங்களுடன் கூட்டணி சேர்ந்து செயல்படும் இலங்கையின் சனநாயக மக்கள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார். அனைத்து வகையான பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான பன்னாட்டு இயக்கத்திற்கும் இலங்கையில் அமைதிக்கான பெண்கள் மன்றத்திற்கும் தலைவராக இருந்தார். புதிய மாற்றங்களுக்கான ஆசிய பிராந்திய பரிவர்த்தனையின் நிறுவன உறுப்பினராகவும் 1994 - 1997 ஆம் ஆண்டுகால நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

2018 ஆம் ஆண்டின் மார்ச்சு மாதத்தில் நிமல்கா பெர்னாண்டோவை இலங்கை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்களில் ஒருவராக நியமித்தார்.[1] இவரது நியமனத்தை உலகளாவிய இலங்கை மன்றம் எழுத்து மூலாமாக கோரிக்கை வைத்து எதிர்த்தது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Lanka appoints commissioners to OMP as HRC37 commences | Tamil Guardian". www.tamilguardian.com. பார்க்கப்பட்ட நாள் 2020-11-02.
  2. "GSLF wants Dr.Nimalka Fenando removed from OMP". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2020-11-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

புற இணைப்புகள்

[தொகு]
 .
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமல்கா_பெர்னாண்டோ&oldid=3857430" இலிருந்து மீள்விக்கப்பட்டது