நிதேந்திர சிங் ராவத்
![]() | |
தனிநபர் தகவல் | |
---|---|
சுட்டுப் பெயர்(கள்) | நித்தின் |
தேசியம் | இந்தியன் |
பிறப்பு | 29 செப்டம்பர் 1986 காரூர், உத்தராகண்டம் |
வசிப்பிடம் | காரூர், உத்தராகண்டம் |
உயரம் | 5' 8 (5 feet 8 inches) |
எடை | 58 கிலோ |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | மாரத்தான் |
நிதேந்திர சிங் ராவத் (Nitendra Singh Rawat) ஓர் இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீரராவார். இவர் 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று பிறந்தார். உத்தராகண்டம் மாநிலத்தின் பாகேசுவர் மாவட்டத்திலுள்ள காரூர் நகரத்தில் இவர் வசித்து வருகிறார்.
நிதேந்திர சிங், இரியோ டி செனிரோவில் நடைபெற்ற 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்காக தேர்வு செய்யப்பட்டார்[1] ஆகத்து 21, 2016 அன்று நடந்த ஒலிம்பிக் மாரத்தானில் 2 மணி 22 நிமிடங்கள் 52 வினாடிகளில் நிறைவு செய்து 84ஆம் இடத்தை எட்டினார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Nitendra Singh". rio2016.com. 6 ஆகஸ்ட் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 August 2016 அன்று பார்க்கப்பட்டது.