நிதி மூலதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதி மூலதனம் என்பது தொழில் முனைவோர்கள், வணிகர்கள், பணம் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் தயாரிப்புகளை தயாரிக்க அல்லது அவற்றின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை கொண்டு தங்கள் சேவைகளை வழங்க, அதாவது சில்லறை விற்பனை, பெருநிறுவனகள், முதலீட்டு வங்கிகள் , முதலியன.

IFRS ஆல் அங்கீகரிக்கப்பட்ட மூலதன பராமரிப்பு பற்றிய மூன்று கருத்துக்கள்[தொகு]

நிதித் துறையில் நிதி முலதனம் என்பது ஒரு முலதனம் மட்டுமே. கண்க்கியல் மற்றும் பொருளாதாரதத்தில், ஒரு நிறுவனத்தால் உருவாக்கப்படும் உள் வருவாய் அல்லது உண்மையான மூலதன உபகரணங்களை வாங்குவதற்காக வணிகர்களுக்கு (மற்றும் முதலீட்டாளர்கள்) வழங்கிய நிதிகளால் வழங்கப்படும் நிதி அல்லது புதிய பொருட்கள் / சேவைகளை உற்பத்தி செய்வதற்கான சேவைகள்.

உண்மையான மூலதனம் அல்லது பொருளாதார மூலதனம் என்பது பிற பொருள்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் உதவுகின்ற மூலப்பொருட்களில் உள்ளது, எ.கா. கல்லறை அமைப்போருக்கு மணல்வெட்டிகள், தையல்காரர்களுக்கு தையல் இயந்திரங்கள், அல்லது தொழிற்சாலைகள் இயங்க தேவைப்படும் கருவிகள் ஆகியவை மூலதனத்தின் அடிப்படைகளாகும்,.

நிதி மூலதன பராமரிப்பானது, நிலையான நாணய அலகுகளில் அல்லது நிலையான வாங்கும் சக்தியின் அலகுகளில் அளவிட முடியும்.[1][2] சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள்(IFRS) அடிப்படையில் பின்வரும் மூன்று மூலதன பராமரிப்பு முறைகள் உள்ளது.

  • பொருட்கள் சார்ந்த மூலதன பராமரிப்பு.
  • நிலையான நாணய அலகுகளை கொண்டு மூலதன பராமரிப்பு.
  • நிலையான வாங்கும் சக்தியின் அலகுகளை கொண்டு மூலதன பராமரிப்பு.[1][3]

மூலதன ஆதாரங்கள்[தொகு]

  • நீண்ட கால மூலதனம் - வழக்கமாக 7 ஆண்டுகளுக்கு மேலாக
 * பங்குகளின் மூலதனம்
 * ஈட்டுக்கடன்
 * இலாபத்தை தக்கவைத்தல்
 * கூட்டு துணிகர முயற்சி மூலதனம்
 * ஈட்டு ஆவணம்
 * திட்ட நிதி 

  • நடுத்தர கால மூலதனம் - வழக்கமாக 2 மற்றும் 7 ஆண்டுகளுக்குள்
 * கால கடன்கள்
 * குத்தகை
 * கொள்முதல்
  • குறுகிய கால - வழக்கமாக 2 ஆண்டுகளுக்குள்
 * வங்கி மிகைப்பற்று
 * வர்த்தக கடன்
 * ஒத்திவைக்கப்பட்ட செலவுகள்
 * காரணப்படுத்துதல்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதி_மூலதனம்&oldid=2524295" இலிருந்து மீள்விக்கப்பட்டது