உள்ளடக்கத்துக்குச் செல்

நிதிமயமாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதிமயமாக்கம் (Financialization) பற்றி பின்வருமாறு பல்வேறு வரையறைகள் முன்வைக்கப்படுகின்றன.

  • நிதிமயமாக்கம் என்பது பண்டமாற்றப்படும் அனைத்தின் மதிப்பையும் நிதிக் கருவியாக அல்லது அதன் வழிப்பொருட்களாக ஆக்கும் முறைமையைக் குறிக்கிறது.
  • நிதிமயமாக்கம் என்பது நிதிச் சந்தைகள், நிதி நிறுவனங்கள், நிதி உயர் வர்க்கம் அரசியல் கொள்கைகள் தொடர்பாகவும் பொருளாதார விளைவுகள் தொடர்பாகவும் அதீத செல்வாக்கு அல்லது அதிகாரத்தைப் பெற்று இருத்தல் ஆகும். நிதிமயமாக்கம் நுண் மற்றும் பேரிய நிலைகளில் பொருளாதார முறைமையைப் பாதிக்கிறது.[1]
  • நிதிமயமாக்கம் என்பது மொத்த பொருளாதாரச் செயற்பாடுகளிலும், குறிப்பாக உற்பத்தி மற்றும் வேளாண் பொருளாதாரத்தின் மீதும் நிதிதுறையின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. [2]
  • நிதிமயமாக்கம் என்பது நிதியை அளவுக்கு மீறி நெம்பி 2007-2010 பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற செயற்பாடுகளைக் குறுக்கிறது.
  • நிதிமயமாக்கம் என்பது இலாபம் ஈட்டுவது என்பது உற்பத்தி அல்லது பண்டமாற்றால் இல்லாமல் நிதி ஊடகங்கள் ஊடாக அதிகமாக நிகழும் செயற்பாட்டைக் குறிக்கிறது.[3]

நிதிமயமாக்கத்தை விளங்கிக் கொள்ள பின்வரும் எடுத்துக்காட்டுக்கள் உதவும். அமெரிக்காவின் முப்பெரும் தானுந்து உற்பத்தியாளர்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனம் தனது இலாபத்தை தானுந்துக்களை விற்பதிலும் விட தானுந்துக்களை வாங்க கடன் கொடுப்பதில் இருந்தே பெற்றுக் கொள்கிறது.[4]

இரண்டாவது எடுத்துக்காட்டு ஐக்கிய அமெரிக்காவில் வீட்டு விலைகள் அதிகரித்துக்கொண்டு போன போது தொடர்ச்சியாக வீட்டு அடமானத் தவணைகளைக் கட்ட முடியாதவர்களுக்கும் அடமானம் கொடுக்கப்பட்டது. இத்தகையை பரிவார்த்தனைகளில் இருந்து நிதி அலோசகர்களும் நிதி நிறுவனங்களும் கட்டணம் பெற்றன. மேலும் இத்தகையை கடன்களை ஒன்று திரட்டி Collateralized debt obligation ஆக அல்லது Mortgage-backed security ஆக விற்றார்கள். இதிலும் இவர்கள் கட்டணம் பெற்றார்கள்.

வரலாறு[தொகு]

நிதிமயமாக்கம் என்பது பண்டைக் காலத்தில் இருந்து நிகழும் ஒரு செயற்பாடே. பொருட்களை நேரடியாக பண்டமாற்றுவதில் இருக்கும் சிக்கல்களால் பணம் ஏறத்தாழ கிமு 3000 ஆண்டுகள் அளவில் அறிமுகமானது. ஒன்றின் மதிப்பை துல்லியமாக அளக்க, மதிப்பைப் பாதுகாக்க, பண்டமாற்ற பணம் பயன்பட்டது. பணத்தின் நீட்சியாக பணத்துடன் தொடர்புடைய நிதிச் செயற்பாடுகள் நிகழ்ந்தன. எ.கா கடன், வட்டி, சீட்டு போன்றவை. இவற்றின் நீட்சியாக 14 ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் வங்கிகள் வளர்ச்சி பெற்றன. வங்கிகள் மூலம் பலரின் முதல்கள் ஒரு இடத்தில் குவிந்தன. இதை வங்கிகள் கடனாக நபர்களுக்கு அல்லது வணிகங்களுக்கு கொடுத்தன. இவ்வாறு வணிகங்கள் வங்கிகளிடம் முதலைக் கடனாகப் பெறும் முறை நவீனப் பொருளாதார முறைமையில் ஒரு முக்கிய திருப்பம் ஆகும். 1600 களில் வணிக நிறுவனங்கள் பங்குகளை விற்று முதலீட்டைத் திரட்டும் செயற்பாடுகளில் முதன்முதலாக ஈடுபட்டன. பலர் பங்கு போட்டு வணிகங்களையோ அல்லது பாரிய திட்டங்களை இவ்வாறு முன்னெடுப்பது ஐரோப்பாவின் எழுச்சிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அரசுகள் அரசர்கள் வரிகள் அல்லது கப்பம் ஊடாக நிதியைப் பெற்றுக் கொண்டன. மேற்சுட்டப்பட்ட விடயங்களை நிதிமயமாக்கம் எனலாம். எனினும் நிதிமயமாக்கம் என்று இன்று குறிப்பிடப்படுவது 1970 கள் தொடக்கம் ஐக்கிய அமெரிக்காவிலும், அதனைத் தொடருந்து உலகளாவிய அளவிலும் நிகழ்ந்த மாற்றங்களை ஆகும்.

ஐக்கிய அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட வைப்பு நிறுவனங்களின் விதிநீக்கம் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் (1980, Depository Institutions Deregulation and Monetary Control Act), ஃகார்ன் இசுரீட். யேர்மேன் வைப்பு நிறுவனங்கள் சட்டம் (1982, Garn-St. Germain Depository Institutions Act), கிராம்-லீச்-ஃபெய்லி சட்டம் (1999, Gramm–Leach–Bliley Act) ஆகிய சட்டங்கள் நிதிமயமாக்கத்து உதவின. உலகளாவிய அளவில் 1980 களில் சீனாவில் அரச முதலாளித்துவமும், 1990 இந்தியாவில் தாராண்மைப் பொருளாதாரச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவால் முதலாளித்துவ தாராண்மைவாத சார்புக் கொள்கைகள் உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், ஐ.அ நிதித்துறை ஊடாக வளர்முக நாடுகளுக்கு அமுல்படுத்தப்பட்டது. இதை வாசிங்டன் இணக்கப்பாடு என்பர்.

கருத்தியல்கள்[தொகு]

வேளாண்/மீன்பிடிப்பு -> உற்பத்தி -> நிதிமயமாக்கம்[தொகு]

சில பொருளியலாளர்களால் நிதிமயமாக்கம் என்பது ஒரு பொருளாதாரத்தின் முதிர்ச்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வேளாண்மை மற்றும் மீன்பிடிப்பு போன்றவற்றில் முதல் நிலையாகவும், உற்பத்தி அடுத்த நிலையாகவும், சேவைகள் அடுத்த நிலையாகவும், நிதிமயமாக்கம் அடுத்த நிலையாகவும் பார்க்கப்படுகிறது. நிதிமயமாக்கத்தால் முதல் மற்றும் முதலீடு திறமையாக நெறிப்படுத்தப்படும் என்று இந்தக் கொள்கை கூறுகிறது.

உலகமயமாதல், புதிய தாராளவாதம்[தொகு]

நுகர்வுச் சமூகம், கடன் பொருளாதாரம்[தொகு]

வளர்ந்த நாடுகளில் நுகர்வின் அளவும் விருப்பமும் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது. நுகர்வு போற்றத்தக்க செயற்பாடாக நிதிநிறுவனங்களாலும் சில வேளைகளில் அரசுகளாலும் முன்நிறுத்தப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தித் துறை வீழ்ச்சி கண்ட போதும் நுகர்வு வளர்ந்து கொண்டே போனது. இது கடன் பொருளாதாரத்தால் சாத்தியமானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Financialization is a process whereby financial markets, financial institutions and financial elites gain greater influence over economic policy and economic outcomes. Financialization transforms the functioning of economic system at both the macro and micro levels." Thomas I. Palley, “Financialization: What It Is and Why It Matters” [PDF 500 Kb], Political Economy Research Institute, Working Paper No. 153, November 2007.
  2. Financialization may be defined as: "the increasing dominance of the finance industry in the sum total of economic activity, of financial controllers in the management of corporations, of financial assets among total assets, of marketised securities and particularly equities among financial assets, of the stock market as a market for corporate control in determining corporate strategies, and of fluctuations in the stock market as a determinant of business cycles" (Dore 2002)
  3. Greta Krippner of the University of California, Los Angeles has written that financialization refers to a “pattern of accumulation in which profit making occurs increasingly through financial channels rather than through trade and commodity production.”
  4. Ford Motor Company, the quintessential American manufacturing company, has in recent years generated its profits primarily by selling loans to purchase cars rather than through the sale of cars themselves (Four et al. 2006)[1]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதிமயமாக்கம்&oldid=1365476" இலிருந்து மீள்விக்கப்பட்டது