நிசிதா நிர்மல் மாத்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிசிதா நிர்மல் மத்ரே (Nishita Nirmal Mhatre) இந்தியாவின் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். இவர் திசம்பர் 1, 2016 அன்று பணியில் சேர்ந்தார். 18 செப்டம்பர் 2017 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்றார். இவர் தற்காலிகத் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில், நாரதா வழக்கு என்று பிரபலமாக அறியப்படும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு தலைவர்களின் முக்கிய வழக்கில் தலைமை தாங்கி, அந்த வழக்கில் நடுவண் புலனாய்விற்குஉத்தரவிட்டார்.

இளமை[தொகு]

மத்ரே 20 செப்டம்பர் 1955இல் பிறந்தார். தனது இரண்டாம் நிலைக் கல்விக்காக, மத்ரே மும்பையில் உள்ள சோபியா மகளிர் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு நுண்ணுயிரியலில் பட்டம் பெற்ற பின்னர், மும்பை அரசு சட்டக் கல்லூரியில் sஅட்டம் பயின்றார்.[1]

சட்டத் தொழில்[தொகு]

1978ஆம் ஆண்டில், மர்டே தீர்ப்பாயங்களில் பணியாற்றுவதற்கு முன்பு மகாராட்டிரா மற்றும் கோவாவின் வழக்கறிஞர் மன்றத்தில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார். 2000 முதல் 2010 வரை பம்பாய் உயர்நீதிமன்றம் மற்றும் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். 2016இல் கல்கத்தாவில் பணிபுரிந்தபோது, தலைமை நீதிபதி கிரிஷ் சந்திர குப்தா ஓய்வு பெற்ற பிறகு, மத்ரே தலைமை நீதிபதியானார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Calcutta High Court". Archived from the original on 17 September 2017. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017.
  2. "Justice Nishita Nirmal Mhatre to become Acting Chief Justice of Calcutta HC". LiveLaw.in. 25 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசிதா_நிர்மல்_மாத்ரே&oldid=3894808" இலிருந்து மீள்விக்கப்பட்டது