நிக்கி சிம்மன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிக்கி சிம்மன்சு (Nikki Symmons (பிறப்பு: 2 ஆகஸ்ட், 1982) என்பவர் ஓர் முன்னாள் அயர்லாந்து பெண்கள் வளைகோற் பந்தாட்ட வீரர் மற்றும் அயர்லாந்து பெண்கள் அணித் துடுப்பாட்ட வீரர் ஆவார். 2001 மற்றும் 2003 ஆமான்டுகளில் நடைபெற்ற பெண்கள் வளைகோற் போட்டிகளில் இ9வர் 208 போட்டிகளில் விளையாடி 31 எண்ணியங்களை அயர்லாந்து அணிக்காக எடுத்துள்ளார்.

ஆறு ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் , மூன்று மகளிர் வளைகோற் பந்தாட்ட உலகக் கோப்பை தகுதிப்போட்டிகளின் போதும் ஆறு மகளிர் யூரோ ஹாக்கி வாகையாளர் போட்டிகளிலும் அயர்லாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.லோரெட்டோ அணிக்காக நான்கு முறை அயர்லாந்து மூத்தோர் வாகையாளர் கோப்பைகளில் விளையாடியுள்ளார். 2008-09 ஆம் ஆண்டில் கோப்பை வென்ற அணியில் இவர் விளையாடினார். மேலும் மூன்று முறை ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் மூன்று உலக பெண்கள் வளைகோற்பந்தாட்ட கோப்பைக்கான போட்டியிலும் இவர் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற யூரோ வளைகோற் பந்தாட்ட சங்க வாகையாளர் கோப்பை II வென்ற அணியில் இவர் விளையாடினார். 2015 ஆம் ஆண்டில் ஊரோ வளைகோற் பந்தாட்ட சங்கம் இவரை ஹால் ஆஃப் பேமாக அறிவித்தது. சர்வதேச வளைகோற் பந்தாட்ட கூட்டமைப்பின் மேலாளராக 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் அயர்லாந்து அணிக்காக நான்கு ஒருநாள் பன்னட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இரு பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

2010 ஆம் ஆண்டில் பன்னட்டுத் துடுப்பாட்ட அவை பெண்கள் வாகையாளர் கோப்பைக்கான தொடரில் இவர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமனார்.அக்டோபர் 6 இல் போட்செஃப்ஸ்ட்ரூமில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியில் 7 பந்துகளில் 3 ஓட்டங்களில் எடுத்து கன்வால் நஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் பெண்கள் அணி 7 இலக்குகளில் 104 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற்றது.[1]

2010 ஆம் ஆண்டில் பன்னட்டுத் துடுப்பாட்ட அவை பெண்கள் வாகையாளர் கோப்பைக்கான தொடரில் அக்டோபர் 12 இல் போட்செஃப்ஸ்ட்ரூமில் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் 13 ஆவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 10 பந்துகளில் 6 ஓட்டங்களில் எடுத்து சிறிவர்தனே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கைப் பெண்கள் அணி 2 இலக்குகளில் 24 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற்றது.[2]

பன்னாட்டு இருபது20[தொகு]

2010 ஆம் ஆண்டில் பன்னட்டுத் துடுப்பாட்ட அவை பெண்கள் பன்னாட்டு இருபது20 கோப்பைக்கான தொடரில் அக்டோபர் 14 இல் போட்செஃப்ஸ்ட்ரூமில் இலங்கைப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் 3 ஆவது பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 15 பந்துகளில் 8 ஓட்டங்களில் எடுத்து தி அல்விசு பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கைப் பெண்கள் அணி 11 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[3] அதே ஆண்டில் பன்னட்டுத் துடுப்பாட்ட அவை பெண்கள் பன்னாட்டு இருபது20 கோப்பைக்கான தொடரில் அக்டோபர் 16 இல் போட்செஃப்ஸ்ட்ரூமில் நெதர்லாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் 48 பந்துகளில் 86 ஓட்டங்களில் எடுத்து லன்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகி விருதும் பெற்றார். இந்தப் போட்டியில் அயர்லாந்து பெண்கள் அணி 42 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. [4]

சான்றுகள்[தொகு]

  1. "first odi".
  2. "இறுதி ஒருநாள் போட்டி".
  3. "முதல்பன்னாட்டு இருபது 20" (அக்டோபர் 13).
  4. "இறுதிபன்னாட்டு இருபது 20" (அக்டோபர் 13).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கி_சிம்மன்சு&oldid=2815156" இருந்து மீள்விக்கப்பட்டது