நிகிதா சந்தக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிகிதா சந்தக் மகேசுவரி
அழகுப் போட்டி வாகையாளர்
நேபாள அழகி 2017
பிறப்புசெப்டம்பர் 5, 1995 (1995-09-05) (அகவை 28)
ஊர்லாபரி, மொரங் மாவட்டம், நேபாளம்
கல்வி நிலையம்ஜேடி இன்ஸ்டிட்யூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, பெங்களூர், இந்தியா
உயரம்1.68 m (5 அடி 6 அங்)
எடை45 கிகி
தலைமுடி வண்ணம்அடர் பழுப்பு
விழிமணி வண்ணம்பழுப்பு
பட்ட(ம்)ங்கள்நேபாள அழகி 2017
Major
competition(s)
நேபாள அழகிப் போடடி 2017
(வெற்றியாளர்)
உலக அழகிப் போட்டி 2017
(முதல் 40 பேரில் ஒருவர் - 31 ஆவது நபர்)
நேருக்கு நேர் சவால் குழு 3 - வெற்றியாளர்
பியூட்டி வித் எ பர்பஸ் - சிறந்த 10
சிறந்த விளம்பரத்தாரகை - முன்னணி 30
பல்ஊடக விருது - இரண்டாவது வெற்றியாளர்
மக்களின் தேர்வு
சிறந்த 10

நிகிதா சந்தக் (Nikita Chandak, நேபாளி: निकिता चाण्डक्, பிறப்பு: செப்டம்பர் 5, 1995) ஒரு நேபாளி விளம்பரத் தாரகையும், நடிகையும், அழகிப் போட்டி வெற்றியாளரும் ஆவார். இவர் நேபாள அழகி 2017 உலகப் பட்டத்தை வென்றார்.[1][2] [3] இவர் பாப்புலர் சாய்ஸ் அழகி மற்றும் கான்ஃபிடன்ட் அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.[4] சீனாவின் சான்யா சிட்டி அரங்கில் நடைபெற்ற 2017 உலக அழகிப் போட்டியில் நேபாளத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். சந்தக் 2020 திரைப்படமான சாங்லோவில் கதாநாயகியாகவும் நடித்து திரைத்துறையில் இறங்கினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

நிகிதா சந்தக்கின் சொந்த மொராங்கில் உள்ள ஊர்லாபரி ஆகும். இவர் அனில் மற்றும் சுஷ்மா சந்தக் ஆகியோருக்கு 5 செப்டம்பர் 1995 இல் பிறந்தார். இவர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர். கலாச்சாரம் மற்றும் நடைமுறைகளால் செறிவூட்டப்பட்டவர் ஆவார். ஒரு குழந்தையாக, இவர் ஒரு உள்முக சிந்தனையாளராக இருந்தார். இவருடைய பள்ளி நாட்களில், இவர் எல்லா விதிகளுக்கும் கட்டுபாடுகளுக்கும் கீழ்ப்படிந்த மாணவியாக இருந்தார். இதன் காரணமாக, இவருடைய ஆசிரியர்களின் விருப்பமான மாணவர்களில் ஒருவராக ஆனார்.

கல்வி[தொகு]

சந்தக் பசுபதி போர்டிங் மேல்நிலைப் பள்ளியில் தனது கல்வியை முடித்தார். இவர் தனது உயர்நிலைப் பள்ளியை எல்.கே. சிங்கானியா கல்வி மையம், கோட்டனில் இருந்து முடித்தார்.

அவர் பெங்களூருவில் உள்ள ஜேடி ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆடைத் தகவல் தொடர்பு பாடப்பிரிவில் பயின்ற மாணவி ஆவார்.[5]

தொழில்[தொகு]

நேபாள உலக அழகி 2016 போட்டியில் டிஜிஐஎஃப் ஆடை அலங்கார வாரத்தில் தான் முதன் முதலாகக் கலந்து கொண்ட போது சந்தக் தனது மனத்தை எவ்வாறு சந்தக் வெற்றி கொண்டார் என்பதைக் குறித்து அஸ்மி ஷ்ரேஸ்தா தனது முகநூல் பதிவில் எழுதியிருந்தார். நிகிதா சந்தக் பெங்களூருவில் படிக்கும் போது கேரள ஒப்பனைக்காட்சி அணிவகுப்பு, புனே ஒப்பனைக் காட்சி வாரம் 2016 மற்றும் “தி வின்னிங் ஹவுஸ் ஷோ“ ஆகிய நிகழ்வுகளில் பங்கு பெற்றிருந்தார். மேலும், இவர் சில விளம்பரத் திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

ஒப்பனைக் காட்சி அணிவகுப்புகள்[தொகு]

2017 ஆம் ஆண்டில் நேபாள அழகிப் போட்டி 2017 இல் வென்றபோது சந்தக் தனது முதல் பட்டத்தை 20 வயதில் வென்றார்.2017 உலக அழகி போட்டியில், சிறந்த விளம்பரத் தாரகைப் போட்டியில் இடம் பெற்ற முதல் நேபாள அழகி இவர்தான். சிறந்த விளம்பரத் தாரகைப் போட்டியில் முதல் 30 அழகிகளில் ஒருவராக இடம் பிடித்தார். மல்டிமீடியா விருதில் 2-வது இடத்தைப் பிடித்தார். இவர் மக்கள் தேர்வு விருதில் முதல் 10 இடங்களைப் பிடித்தார். ஒரு நோக்கத் திட்டத்துடன் இவர் 20 இடங்களில் ஒருவராக வந்தார். இவர் தொகுதி -3 இல் இருந்து நேருக்கு நேர் சவாலை வென்றார். இது போட்டியின் முதல் 40 இடங்களில் ஒன்றைப் பெற உதவியது. 2017 ஆம் ஆண்டில் பிஜிஆர் நேபாள் ஒப்பனைக் காட்சி வாரம் நிகழ்விலும் இவர் பங்கு பெற்றிருந்தார். உலக அழகிப்போடடியில் வென்ற பிறகு, டபிள்யு டபிள்யு எஃப் நேபாள் மற்றும் பிரபலமான பானமான ஃபான்டா ஆகியவற்றிற்கு ஓராண்டிற்கு விளம்பரத் தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[6]

நடிப்பு அறிமுகம்[தொகு]

சந்தக் ஒரு நேபாளத் திரைப்படமான "சாங்லோ" என்ற திரைப்படத்தில் பிரஜ் பாட்டாவுடன் இணைந்து நடித்தார். பிரஜ் பாட்டா இத்திரைப்படத்தின் இயக்குநரும் ஆவார். இத்திரைப்படம் 7 பிப்ரவரி, 2020 அன்று வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nikita Chandak Biography". Lumbini Media.
  2. "Nikita Chandak Crowned Miss Nepal 2017". The Kathmandu Post. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
  3. "Nikita Chandak crowned Miss Nepal 2017". 2 June 2017.
  4. "निकिता चन्दक भइन मिस नेपाल वर्ल्ड २०१७" SancharNepal.com. Retrieved 3 June 2017.
  5. "Nikita Chandak Biography- Miss Nepal World 2017". www.inheadline.com. 4 June 2017 இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170814222019/https://www.inheadline.com/news/36341. பார்த்த நாள்: 16 July 2017. 
  6. "Nikita Chandak | Biography, Boyfriend, Family, Age, Height". Bio Famous. 2017-06-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிகிதா_சந்தக்&oldid=3404581" இலிருந்து மீள்விக்கப்பட்டது