நிகர் அகமது
நிகர் அகமது Nigar Ahmed | |
---|---|
தாய்மொழியில் பெயர் | نگار احمد |
பிறப்பு | பிப்ரவரி 16, 1945 பாக்கித்தான் |
இறப்பு | பிப்ரவரி 24, 2017 |
பணி | கல்வியாளர்,பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் |
அறியப்படுவது | பெண்கள் நடவைக்கை மன்றம், அவுரத் அறக்கட்டளை |
நிகர் அகமது (Nigar Ahmed) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார். இவர் பெண்கள் நடவடிக்கை மன்றம் மற்றும் அவுரத் அறக்கட்டளையை நிறுவினார். [1] [2] [3] [4] [5] 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று தன்னுடைய 72 ஆவது வயதில் இறந்தார். [6] [7]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]நிகர் அகமது 1945 ஆம் ஆண்டு லாகூரில் ரியாசுதீன் அகமது மற்றும் அக்தர் ஆகியோருக்கு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று மகளாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை இயேசு மற்றும் மேரி கன்னி மடம் பள்ளியில் பெற்றார். லாகூர் நகரிலுள்ள அரசு கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அரசுக் கல்லூரி நாடகக் கழகத்தின் உறுப்பினராகவும் பின்னர் பிரபல பத்திரிகையான இராவியின் ஆசிரியராகவும் இருந்தார். பின்னர் பொதுநலவாய உதவித்தொகையில் கேம்பிரிட்ச்சில் உள்ள நியூ ஆல் கல்லூரிக்குச் சென்றார். அங்கிருந்து திரும்பி வந்த பிறகு, இவர் குவாய்ட்-இ-அசாம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தார்.
பெண்ணியம்
[தொகு]1981 ஆம் ஆண்டு கராச்சியில் பெண்கள் செயல் மன்றத்தை உருவாக்கிய உடனேயே, நிகர் அகமது 1982 ஆம் ஆன்டில் இசுலாமாபாத்து மற்றும் லாகூர் அத்தியாயங்களைத் தொடங்கினார் ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள் இசுலாமாபாத்தில் வாழ்ந்தபோது, பெண்கள் இயக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டார். சியா உல் அக்கின் சர்வாதிகார சகாப்தத்தில் மறைந்த செக்லா சியாவுடன் இணைந்து 1986 ஆம் ஆண்டு அவுரத் அறக்கட்டளையை நிறுவினார். [8]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]நிகர் அகமது தாரிக் சித்திக்கி என்ற அரசு ஊழியரை சுவாட் நகரத்தில் மணந்தார். இவர்களுக்கு பிலால் மற்றும் அகமத் என்ற இரு மகன்கள் இருந்தனர். [9] இவரது கணவர் மற்றும் இரு மகன்களும் முனைவர் பட்டம் பெற்றவர்களாவர்.
இறப்பு
[தொகு]2001 ஆம் ஆண்டு நிகர் அகமதுவுக்கு பார்கின்சன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2017 ஆம் ஆண்டில், மார்பு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இவர் லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். [10]
விருதுகள்
[தொகு]2005 ஆம் ஆண்டில் இவரது பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. [11]
2010 ஆம் ஆண்டில் இவர் மொக்தர்மா பாத்திமா சின்னா வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tributes paid to Nigar Ahmad – Business Recorder". https://fp.brecorder.com/2017/03/20170331160763/.
- ↑ "Women rights activist Nigar Ahmed passes away in Lahore – The Express Tribune". 24 February 2017.
- ↑ "Rich tribute paid to Nigar". https://www.thenews.com.pk/print/195876-Rich-tribute-paid-to-Nigar.
- ↑ "Remembering the struggle for women’s rights". 19 September 2016. https://tribune.com.pk/story/1184467/remembering-struggle-womens-rights.
- ↑ "Aurat Foundation needs support for women’s empowerment". 11 January 2020. https://nation.com.pk/11-Jan-2020/aurat-foundation-needs-support-for-women-s-empowerment.
- ↑ "Women rights activist Nigar Ahmed passes away".
- ↑ "We won’t cry over Nigar Ahmed’s death, says Mahnaz Rahman". 26 March 2017. https://tribune.com.pk/story/1366059/wont-cry-nigar-ahmeds-death-says-mahnaz-rahman.
- ↑ Jalil, Xari (25 February 2017). "Nigar Ahmed passes away".
- ↑ Web, South Asia Citizens (2019-06-08). "Pakistan: Tributes to Nigar Ahmad". South Asia Citizens Web (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-08.
- ↑ "Women rights activist Nigar Ahmed passes away | SAMAA". Samaa TV. https://www.samaa.tv/news/2017/02/women-rights-activist-nigar-ahmed/.
- ↑ "29 women named for Nobel Peace Prize" (in en). DAWN.COM. 30 June 2005. https://www.dawn.com/news/145725.