நா. ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா. ஜோதி (N. Jothi)(பிறப்பு 30 சூலை 1945) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். ஜோதி தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர். ஜோதி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் படிப்பினையும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பினையும் முடித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த இவர் ஏப்ரல் 3, 2002ஆம் ஆண்டு முதல் மார்ச் 2008ஆம் நாடாளுமன்ற மேலவையான மாநிலங்களவையில் தமிழ்நாட்டிலிருந்து அதிமுக உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] ஜோதி மார்ச் 2008-ல் தனது பதவியிலிருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._ஜோதி&oldid=3689262" இலிருந்து மீள்விக்கப்பட்டது