நாவூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாவூறு என்பது இந்து சமயத்தில் வழக்கில் உள்ள நம்பிக்கையாகும். நாவூறு என்பதற்கு ஈழத்து மொழி அகராதியில் "நாத்தோஷம்" என்றே விளக்கப்படுகின்றது.[1] வளமான ஒருவரை கண்டு வியந்து சொல்லப்படுகின்ற சொல்லால் ஊறு விளையலாம் என அஞ்சுகின்றனர். அதனால் நாவூறு கழிக்கும் சடங்குகளை செய்கின்றனர்.

பாதிப்புகள்[தொகு]

வளமான ஒருவரைக் கண்டு பொறாமையால் இவ்வளவு நல்ல வாழ்வு வாழ்கின்றாரே என யாரேனும் வியந்தால் நாவூறு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு, ஒரு பிரச்சினை தீருவதற்குள் அடுத்த பிரச்சினை , பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன் -மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருக்கும். சுப நிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உண்டாகும்.[2]

சொல்லிலக்கணம்[தொகு]

நா+ ஊறு = நாவூறு

நாவூறு கழிக்கும் முறை[தொகு]

பொறாமையால் நாவூறு ஏற்படும் வண்ணம் பேசியவரின் காலடி மண்ணை எடுத்து சுற்றி மூன்று தெருக்கள் இணையும் முச்சந்தியில் போடுகின்றனர். சிலர் எலுமிச்சையை திருஷ்டி சுத்தும் வழக்கத்தை கையாளுகிறார்கள்.

ஆதாரங்கள்[தொகு]

  1. தமிழ் இலக்கிய அகராதி ஆசிரியர்- பாலூர் கண்ணப்ப முதலியார் பதிப்பகம்-சென்ட்ரல் பதிப்பகம், சென்னை பதிப்பு- 1957 மார்ச்சு - பக்கம் 245
  2. https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2019/01/11153918/Eye-thristy--remedy.vpf.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவூறு&oldid=3711865" இலிருந்து மீள்விக்கப்பட்டது