நாவல்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வார்ப்புரு:Use Indian English

சு. நாவல்பாக்கம்
கிராமம்
ஜம்பூபுர க்ஷேத்ரம்
Country இந்தியா
Stateதமிழ்நாடு
Districtதிருவண்ணாமலை
பரம்பரைஸ்ரீ. உவே. அய்யா குமரா தாத தேசிகன்
                                   ஸ்ரீ. உவே. அண்ணயரிய மஹா தேசிகன் 
                                   ஸ்ரீ. உவே. வலயபேட்டை வேதாந்த மஹா தேசிகன்
                                   ஸ்ரீ. உவே. ஸ்ரீனிவாஸ தாத மஹா தேசிகன் 
                                   ஸ்ரீ. உவே. ந்ருஸிம்ஹ தாதயாரிய மஹா தேசிகன் 
                                   ஸ்ரீ. உவே. நாராயணா தாதயாரிய மஹா தேசிகன் 
ஸ்ரீ. உவே.அய்யா தேவநாத தாதயாரிய மஹா தேசிகன்

"காசி முதலான நன்னகரெல்லாம் கார்மேனியருளாளரது கச்சிக்கொவ்வா" என்று ஸ்வாமி தேசிகன் புகழ்ந்து பேசிய காஞ்சீபுரத்திற்கு சமீபத்தில் விளங்கும் சுரோத்ரியம் நாவல்பாக்கம் என்று ப்ரஸித்த மான அக்ரஹாரத்தில் விஷ்ணு வ்ருத்தகணத்தைச் சேர்ந்த சடமர்ஷண கோத்ரத்தில் இப்பாரத தேசத்தில் மிக்க புகழுடன் விளங்கியவர்களும், தூய்மை நிறைந்தவர்களும், குண புருஷ தத்வ ஸ்திகளை அறிந்தவர்களும், இயற்கையிலேயே பகவானது திருவடிகளிலேயே நிலைநின்ற மனமுடையவர்களுமான நாத, யாமுன, ஸ்ரீசைல பூர்ண, குருகாதீசர் போன்ற உத்தமர்களான ஆசார்யர்கள் அவதரித்த திருவம்சத்தினர் இவ்வூரினர்

அய்யா குமரா தாத தேசிகன்[தொகு]

ஸ்ரீநிவாஸதாதாசாரியர் ஸ்வாமியின் திருக் குமாரரான ஸ்ரீவேங்கட தேசிகனுக்கு அய்யா குமார தாததேசிகன் குமாரராக அவதரித்தார். உரியகாலத்தில் குமாரதாததேசிகன் பிதாவினிடத்திலேயே உபநயநாதி ஸம்ஸ்காராதிகளைப் பெற்றார். அங்கமாறு ஐந்து வேள்வி நால் வேதமருங்கலை பயின்று எரி மூன்றும் செங்கையால் வளர்க்கும் துளக்க மில் மனத்தோர்" என்று ஆழ்வார் அருளிச்செய்தபடி வாழும் திருவம்சத்தில் அவதரித்ததற்கு ஏற்ப அங்கங்களுடன் நான்கு வேதங்களையும், நால்வகை சாஸ்த்ரங்களையும், ஸம்ப்ரதாய க்ரந்தங்களையும் தன் பிதாவின் அரு நிழலிலேயே கற்றார். தங்களுக்கு அரசர்களால் ச்ரோத்ரியமாகக் கொடுக்கப்பட்ட நாவல் பாக்கம் என்னும் அக்ரஹாரத்தில் எழுந்தருளியிருந்த திம்மயாசாரியர் ஸ்வாமி (குமார தாததேசிகனின் பிதாமஹன்) காஞ்சீபுரத்தில் ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஸந்நிதி நிர்வாஹம் போன்ற காரணங்களால் சிலகாலம் பெருமாள் கோவிலிலேயே எழுந்தருளியிருக்க நேர்ந்தது. இவர்களுக்குக் குலக்ரமமாக வந்த வாஸஸ்தானமான திருப்பதியிலேயே நியதமாக வஸிக்காமல் அவ்வப் போது வந்து மலையப்பனை ஸேவித்துப்போவதாக இவர்கள் இருந்தனர். அதி லும் திம்மயாசாரியர் ஸ்வாமி ப்ரதிஸம்வத்ஸரமும் தவறாமல் ஸ்ரீநிவாஸனை ஸேவித்துப் போவது வழக்கம். ஒரு சமயம் திம்மயாசாரியர் ஸ்வாமி திருமலைக்கு எழுந்தருளி வேங்கடவனை மங்களாஸாசனம் செய்துகொண்டிருந்தபோது எம்பெருமானுக்குக் கைங்கர்யம் புரிந்துகொண்டிருந்த ஸ்ரீசேஷதீக்ஷிதர் என் னும் பட்டரை அணுகி அடியேன் சற்று கர்ப்பக்ரஹத்தில் ஏகாந்தமாக எம்பெருமானை ஸேவிக்க அவகாசம் ஸாதித்தருள வேண்டும் என்று விஜ்ஞா பித்தார். அர்ச்சகர் ஸ்வாமி தேவரீர் ஏகாந்தத்தை விரும்புவானேன் என்று

வினவவும், "அடியேன் இம்மண்ணுலகிலிருந்து வெகுசீக்கிரம் விண்ணுலகடைந்து அங்கு எம்பெருமான் திருவடிகளில் அப்ரதிஹத கைங்கர்யம் புரிய ஆர்த்த ப்ர பத்தி செய்யப்போகிறேன் என்று திம்மயாசாரியர் விடையிறுத்தார். இதைக் கேட்ட அர்ச்சகஸ்வாமி "அடியேனுக்கும் சீக்கிரம் நிரந்தர கைங்கர்யம் ப்ராப்த மாகும்படி திருவேங்கடமுடையான் திருவடி வாரத்தில் ஓர் அஞ்சலி செய்யவேண்டும்" என்று ப்ரார்த்திக்க, திம்மயாசாரியரும் அப்படியே என்று அங்கீகரித்து பட்டர் ஸ்வாமிக்காகவும், தனக்காகவும் ஏழாவது நாளன்று அபிஜித் வேளையிலே தேஹவியோகம் ஏற்படும்படி ப்ரார்த்தித்தார். அந்த ஏழாவது நாளுக்குள் காஞ்சீபுரம் சென்றுவிட வேண்டும் என்பது ஸ்வாமியின் திருவுள்ளம். அந்தப்படிக்கு மலையப்பனிடம் நியமனம் பெற்று காஞ்சிக்கு எழுந்தருளும் வழியில் ஒருநாள் தடைபட்டதன் காரணமாக ஆழ்வான் அவதரித்த ஸ்தலமான கூரத்தில் தங்கும்படி நேரிட்டது. அப்போது தனக்குத் தன்னடி சோதிக்கு எழுந்தருளும் காலம் ஸமீபித்துவிட்டதை அறிந்து உடனி ருந்த புத்ர, சிஷ்யர்களுக்கு அர்ச்சிராதி மார்க்கத்தை உபதேசித்துக்கொண்டி ருக்கும்போதே ப்ராணவியோகமாகிவிட்டது. அதே ஸமயம் சேஷதீக்ஷித பட்டரும் பரமபதமடைந்தார். பிறகு இதனை அறிந்தவர்கள் ஆச்சரியமடைந்த னர். இவ்வர்த்தத்தை वन्दे तिम्मयतातार्यं स्वेच्छया प्राप यः स्वयम्। अर्थिराद्युपदेशान्ते वैकुण्ठं पादचारतः।। என்று தனியன் பத்யத்துடன் சேர்த்து அனுஸந்திக்கத் தொடங்கினார். பிறகு திம்மயதாதாசாரியர் குமாரரான ஸ்ரீநிவாஸதாதாசாரியரும் ப்ரதி ஸம்வத்ஸரம் பிதாவைப்போல் ஸ்ரீநிவாஸனை ஸேவித்துவந்தார். முதுமையால் மலைக்கு எழுந்தருள முடியாமல் போய் சிஷ்யர்களின் ஸஹாயத்துடன் எழுந் தருளி ஸ்ரீநிவாஸனை மங்களாஸாசனம் செய்து இனி மலையப்பனின் ஸேவை அடியேனுக்கு எப்படிக் கிடைக்கும் என்று அனுசோசித்து நிற்க அப்போது எம்பெருமான் அர்ச்சகமுகேந தேவரீர் இருக்குமிடத்திலேயே நாம் அவதரிக்க ஸங்கல்பம் கொண்டோம். எனவே சோகிக்கவேண்டாம் என்று நியமித்தருள வும் ஸ்வாமியும் நாவல்பாக்கம் எழுந்தருளி ஸ்ரீநிவாஸனின் சுபாச்ரயதிருமே னியை எழுந்தருளப்பண்ணி தனக்கு நியமித்த கோவிந்த தீக்ஷிதபட்டர் மூலம் ப்ரதிஷ்டை செய்துவைத்து காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவிலில் தீர்த்த பரிக்ரஹம் செய்து ஸகல கைங்கர்யங்களையும் செய்துகொண்டு ஆனந்தப் பரவசரானார். ஸ்ரீநிவாஸனிடத்தில் இவருக்கிருந்த அபரிமிதமான பக்தியை பின்வரும் இவரது தனியனே காட்டும். श्रीशैलपूर्णकुलवारिधिपूर्णचन्द्र श्रीवेङ्कटेशचरणाम्बुजचञ्चरीकम् । श्रीतिम्मयार्यतनयं विनयकभूमिं श्रीश्रीनिवासगुरुमन्वहमानतोस्मि।।

என்று நாவல்பாக்கத்தில் திருவேங்கடமுடையான் அவதரித்த பிறகு அவன் திருவடிவாரத்தில் நித்யாராதனம் செய்து கொண்டும் அவன் முக்கோல்லாஸார்த் தமாக யஜ்ஞாதிகளைச் செய்துகொண்டும் பஞ்சகால பராயணராக எழுந்தரு ளியிருந்தார். இவரது குமாரரான ஸ்ரீவேங்கட தேசிகனின் புண்ய பரிபாகமாக அவதரித்த ஸ்ரீகுமாரதாததேசிகன் தம் தகப்பனாரால் உபதேசிக்கப்பட்ட ஸுதர்சனமந்த்ரோபாஸனத்தால் அநிதர ஸாதாரண ஜ்ஞானானுஷ்டானங்களை யும் விலக்ஷணப்ரஹ்ம தேஜஸ்ஸையும் பெற்றிருந்தார். இவருக்குத் தகுந்த காலத்தில் மௌக்திகாம்பா என்கிற கன்னிகையை ஸ்ரீவேங்கட தேசிகன் விவாஹம் செய்துவைத்தார். ஸ்ரீகுமாரதாததேசிகனும் அதுமுதல் அக்னி பரிசர்யை செய்துகொண்டும், ரமாநிவாஸனை ஆராதித்துக்கொண்டும் நாவல் பாக்கத்திலேயே எழுந்தருளியிருந்தார். இதைக் குமாரதாததேசிகனின் குமாரர் வேங்கடாசாரியர் பார் என்ற க்ரந்தத்தில் योगेन यागनिवहैरपि नाथवंश्या: त्यागेन चाभिमुखयन्ति यमेव नित्यम् । कम्बूपमानगलमम्बुजवक्त्रनेत्रं जम्बूपुरालयमुपैमि रमानिवासम् ।। என்று ஸூசிப்பித்தார். இக்குமார தாததேசிகனுக்கு பத்னிமார் இருவர். இவருக்குக் குமாரர்கள் எழுவர். அவர்களுள் முதல்வர் நீலமேக தாததேசிகன். இவருடைய பரம்பரை யைச் சேர்ந்தவர்களே நாவல்பாக்கத்தில் இருப்பவர்கள். கடைசி குமாரரான வேங்கடாசாரியர் பாட்டராசாரியர் எனப்படுபவர். இவரது ஸந்ததியினரே கும்பகோணத்திலுள்ள பாட்டராசாரியர் வீதியில் இருப்பவர்கள். மூன்றாமவ ரான ரகுநாதாசாரியரின் ஸந்ததியினர் திருச்சேரை திவ்யதேசத்திலுள்ள பாட்டராசாரியர்கள். மற்றொரு குமாரரான ஸ்ரீனிவாஸாசாரியரின் வம்சத்தவர் கள் த்வார் என்னும் ஊரில் உள்ளனர். ஸச்சரித்ரஸுதாநிதி என்னும் தர்மசாஸ்த்ர க்ரந்தத்தைச் செய்தருளியவரும், நைத்ருவ வம்சஸ்தரும், ஸ்ரீஅஹோபிலமடத் தில் 11-ஆம் பட்டத்தில் மூர்த்தாஷிக்தராய் எழுந்தருளியிருந்தஸ்ரீநிவாஸ சடகோப யதீந்த்ர மஹாதேசிகனின் சிஷ்யருமான ஸ்ரீவீரராகவாசாரியர் ஸ்வாமி மேற்படி ஸ்ரீநிவாஸதாதாசாரியரிடம் சாஸ்த்ரங்கள் வாசித்ததாகவும், அவர் நியமனப்படியே இக் க்ரந்தத்தைச் செய்ததாகவும் எழுதியுள்ளார். மற்ற குமாரர் களது வம்சத்தவர்கள் ஆந்திரதேசத்தில் ஆங்காங்குள்ளனர். நாவல்பாக்கத்திற்கு ஸமீபத்தில் நெடுங்குன்றம் என்றொரு க்ராமம் உண்டு. அதனருகிலுள்ள வேப்பம்பட்டு என்ற ஊரிலுள்ளவரனைவரும் ஸ்ரீகுமாரதாத தேசிகனது சிஷ்யர்கள். அவர்களுள் நாயகர் குலத்தைச் சேர்ந்த நான்கு ஸஹோ தரர்கள் இருந்தனர். அந்நால்வருள் அச்சுதநாயகர் என்பவரும் ஒருவர். இவரே பிற்காலத்தில் தஞ்சையை ஆண்டார். அச்சுதநாயகருக்கு தம் வீட்டில் ஏற்பட்ட

மனக்கசப்பால் வீட்டைவிட்டு வெளியேறி நடக்கத்தொடங்கினார். வெயிலா லும், பசியாலும், நீர்வேட்கையாலும் துயருற்ற அவர் நாவல்பாக்கம் குளத்து ரையை அடைந்து நீர் விடாயைத் தீர்த்துக்கொண்டு, மரத்தின் நிழலில் படுத்து றங்கிவிட்டார். ஸ்வாமி ஸ்ரீகுமாரதாததேசிகன் மாத்யாஹ்னிக ஸ்நாநத்திற்காக குளத்திற்கு எழுந்தருளும்போது ஒருவன் படுத்துறங்குவதையும், பெரிய ஸர்ப் பம் ஒன்று தன்படத்தைப் பரப்பி அவன் மீது வெயில் படாதவாறு குடை பிடிப்பதையும் கண்டு வியந்து கருட மந்த்ரத்தை ஜபித்து ஸர்ப்பத்தை வெளியேறச்செய்து, அச்சுதநாயகன் மீது குளிர்ந்த நீரைத் தெளித்து அவன் துயிலை நீக்கி, களைப்பையும் போக்கி அவனைப்பற்றி விசாரித்தார். அவன் தம் சீடன் என்பதையும், அவனுக்கு அவன் வீட்டாரிடம் ஏற்பட்ட மனக் கசப்பையும் அறிந்து அவனுக்கு அறிவுரை கூறி மன அமைதி ஏற்படுத்தினார். மேலும் அவனது ஜாதகத்தையும், சரீரத்திலுள்ள சில உத்தம லக்ஷணங்களை யும், ஸர்ப்பம் குடைபிடித்த பாக்கியத்தையும் சிந்தித்துப் பார்த்த ஸ்வாமி அவனுக்கு விரைவில் நல்ல பதவி கிட்டப்போகிறது என்று கூறினார். பின்னர் அச்சுதநாயகரது ப்ரார்த்தனைக்கு இணங்க அவருக்கு தப்தசக்ராங்கத்தைச் செய்து வைஷ்ணவ தத்வங்களையும் உபதேசித்தார். நாயகரும் ஒருவருஷ காலம் நாவல்பாக்கத்திலேயே இருந்து பல உபதேசங்களையும் பெற்றார். பிறகு அச்சுத நாயகர் ஆசார்யரது நியமனம் பெற்று தஞ்சை சென்று அரச வேலை ஒன்றில் அமர்ந்தார். பூர்வஜன்ம புண்ய விசேஷத்தால் பல சோதனைகளிலும் வெற்றிபெற்று மன்னனது அபிமானத்தைப் பெற்றார். அரச னும் தனக்கு மகன் இல்லாத குறையை எண்ணி அச்சுதநாயகரும் தனக்குப் பழைய பந்துவர்க்கத்தைச் சேர்ந்தவராதலால் அவரை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டார். இளவரசனாக முடிசூடப்பட்டதும் தம் ஸ்வீகாரத் தந்தையான மன்னர் சேவுகப்ப நாயகரை அச்சுதநாயகர் தம் திறமைமிக்க செயல்களால் மகிழச் செய்தார். மன்னர் மறைந்ததும் அச்சுதநாயகர் மன்னராக முடிசூடப் பட்டார். - அச்சுதநாயகர் தாம் தஞ்சை மன்னராக முடிசூட்டப்பட்ட செய்தியை விரைவில் ஆசார்யரான குமாரதாததேசிகனுக்குத் தெரிவித்து, அவரையும் அவரது குடும்பத்தாரையும் பல்லக்கில் எழுந்தருளச்செய்து நகர வாஸத்தை விரும்பாத ஆசார்யனை வெண்ணாற்றங்கரையில் நீலமேகப் பெருமாள் திருவ டிவாரத்தில் நிலையாகத் தங்கச்செய்து ஏராளமான பொருள்களை காணிக் கையாக்கினார். அந்தப் பொருள்களின் உதவியால் உத்தம ரித்விக்குகளைக் கொண்டு பலவகையான யாகங்களைச் செய்ய விரும்பிய குமாரதாததேசிகன் அவ்வாறே செய்துமுடித்தார். எல்லா யாகங்களிலும் யஜ்ஞபீடத்தில் நீலமேகன் எழுந்தருளி ஹவிர்பாகங்களை ஸ்வீகரித்தது விசேஷம். இதனால் அக்காலத்தி லிருந்த மஹான்கள் ஸ்வாமிக்கு "சதுர்வேத சதக்ரது" என்ற விருதை அளித்தனர். -க்காக

साग्निचित्यपौण्डरीकसर्वपृष्ठविश्वजित् द्वादशाहवाजपेयसर्वतोमुखादिभिः ।। प्रीणयन्तमम्बुजाक्षमर्चयन्तमुक्तिभिः तातयार्यमस्मदीयतातपदमाश्रये ।। என்று இந்த ஸ்வாமி செய்த யாகங்களைப்பற்றி அவரது குமாரரே அருளிச் செய்துள்ளார். அச்சுத நாயகர் தன் ஆட்சியில் உள்ள எல்லா விஷ்ணு தேவாலயங்களி லும் குமாரதாததேசிகனுக்கே முதல் தீர்த்த கௌரவமும், புராண படனத்தி லும், அருளிச்செயல், வேதபாராயணங்களிலும் அதிகாரமும், தர்மாதிகாரி பதவி ஆகியவற்றையும் அளித்து எல்லாம் ஸ்வாமியின் நியமனப்படியே நடை பெறும்படி உத்தரவிட்டார். ஸ்வாமியும் அப்பதவியை ஏற்று பல தேவாலயங் களை ஜீர்ணோத்தாரணம் செய்தும், அவற்றில் உத்ஸவாதிகளும், நித்ய ஆராத னங்களும் குறைவின்றி நடைபெறவும் ஏற்பாடு செய்ததோடு ஆங்காங்கு தம் குமாரர்களை இருக்கச்செய்தார். தாமும் அவ்வப்போது சென்று மேற்பார்வையிட்டு வந்தார். அச்சுதநாயகருக்கு குமாரதாததேசிகன் ஆஸ்தான வித்வானாக இருந்து பல கலைகளை வளர்த்தார். மேலும் தற்போது ஸரஸ்வதி மஹால் எனப்படும் நூல்நிலயத்தை விரிவாகச் செய்தார். நாயக அரசர் ஆஸ்தானத்தில் தேசிக ஸம்ப்ரதாய ஸித்தாந்தமான ப்ரபத்தியைப்பற்றி கந்தாடை சிங்கராசாரியரோடு ஏற்பட்ட வாக்யார்த்தத்தில் மூன்று நாட்கள் வாதிட்டு ப்ரபத்தியுபாயத்தை ஸ்தாபித்தார். அதனால் "தேசிக ஸித்தாந்த விஜயத்வஜ" என்ற விருதைப்பெற்றார். இதுவும் அவரது தனியனில் சேர்க்கப் பட்டு அனுஸந்திக்கப்படுகிறது. திருக்குடந்தை ஆராவமுதன் ஸந்நிதியில் கோமளவல்லித் தாயாருக்கி ருந்த தனிக்கோவிலை மாற்றித் தாயாரைப் பெருமாள் ஸன்னிதியிலேயே எழுந்தருளப்பண்ணி அப்பகுதியை தேவதாந்த்ரத்திற்கு அளித்துவிட்டனர் முன்னரிருந்த சைவமன்னர்கள். நம் குமார தாததேசிகன் மீண்டும் தாயாருக்குத் தனிக்கோவில் ஏற்படுத்தி எழுந்தருளப்பண்ணுவித்தார். இதன் காரணமாக கோமளவல்லித்தாயாரின் நியமனப்படி நாயக அரசரும் குமாரதாததேசிகனுக் குத் தாயார் ஸன்னிதிக்கு எதிரில் ஸன்னிதி ஏற்படுத்தினார். குமாரதாததேசிகன் நாவல்பாக்கத்தில் ஸ்ரீநிவாஸன் ஆலயத்தைவிரிவாக் கினார். அச்சுத நாயகரது ஜன்மபூமியான நெடுங்குன்றத்தில் ஸ்ரீராமனுக்கு திவ்யாலயம் ஏற்படுத்தினார். அதற்கருகில் ரகுநாதஸமுத்ரம் என்ற க்ராமத்தை ப்ரதிஷ்டை செய்து ஸ்ரீராமசந்த்ரனையும் எழுந்தருளப்பண்ணி அவ்வூரை ச்ரோத்ரியர்களுக்கு தானம் செய்வித்தார். நெடுங்குன்றக்கோயிலில் தஞ்சையை ஆண்ட அச்சுதநாயகரது குமாரர் ரகுநாதராஜாவின் கல்வெட்டும், விஜயநகர மன்னர்களின் சிலாஸாசனமும் உள்ளன. தஞ்சை மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் உறவினர்களாவர். ஸ்ரீகுமாரதாததேசிகன் அவ்வப்போது தாம்

செயத யாகங்களின் ஜ்ஞாபகார்த்தமாக பௌண்டரீகபுரம், ரகுநாதபுரம் முதலிய அக்ரஹாரங்களை ப்ரதிஷ்டை செய்தார். ஸர்வதோ முகம் என்னும் மஹாயாகத்தை தேவாதிராஜன் திருவடிவா நாத நாயக மன்னர் தமக்களித்த நீல ரத்தில் ஸ்வாமி அனுஷ்டித்தபோது ரகுநாத நாயக மன நாயகக்கல் மோதிரத்தை அவப்ருதத்தன்று யஜ்ஞசாலைக் கெழுந்தருளிய தேவராஜனுக்கே ஸ்வாமி ஸமர்ப்பித்துவிட்டதாகவும், அக்கல்லைப் பேரருளா ளன் திலகமாக சாத்திக்கொண்டான் என்றும் பெரியோர் பகர்வர். மேலும் தென்னாட்டில் பல கோவில்களுக்கும் திருவாபரணாதிகளை ஸமர்ப்பித்து அர்ச்சையில் வெகு ஈடுபாட்டுடன் விளங்கினார். நீலகண்ட தீக்ஷிதர் தம் க்ரந் தத்தில் "ஷட்தர்சன ப்ரவீண குமாரதாதாசாரியர் என்று ஸ்வாமி திருநாமத்தை எடுத்துள்ளார். இவர் வாஜபேய சாமரங்களுடனும், அரச பரிவாரங்களுட னும் ஆங்காங்கு சென்று வாதம் செய்து சோழ நாட்டில் ஸ்ரீவைஷ்ணவத்தை நிலைநாட்டினார். அச்சுத நாயகர் காலம் A.D. 1572 - 1614 ரகுநாத நாயகர் A.D. 1614 - 1633 விஜயராகவ நாயகர் A.D. 1633 - 1673 இம்மூன்று மன்னர்கள் காலத்திலும் ஸ்வாமி ராஜகுரு பதத்தை அலங்கரித்தார். இறுதியில் குமாரதாததேசிகன் திருக்குடந் தைக்குச்சென்று அனவரதமும் ஆராவமுதனுக்குக் கைங்கர்யங்கள் செய்து கொண்டு பரமபதத்தை அடைந்தார். அம்மஹானின் கைங்கர்யத்தில் 11 வது நாளில் அளிக்கப்பட்ட பொருளைக் கொண்டு லக்ஷ்மீநாராயணஸ்வாமி என்பவர் ஆராவமுதனின் வாயிற் கோபுரத்தை 11 நிலைகளுடன் கட்டி முடித்தார். குமாரதாத தேசிகன் அருளிய க்ரந்தங்களுள் சில. 1. பாரிஜாதாபஹரண நாடகம், 2. நிக்ஷேபரக்ஷா வ்யாக்யா, 3. ஸ்ரீபாஷ்ய வ்யாக்யா விசிஷ்டாத்வைதஸரணி, 4. பஞ்சகால ப்ரதீபிகா , 5. உஷா நிருத்த சரிதம், 6. ராமாயண கதாஸாரம், 7. ஸூத்ரகல்ப பாஷ்யம், 8. வ்யாகரண தீபிகா, 9. கணாதபரிபாடி, 10. கபிலதந்த்ரஸாரம், 11. அபயப்ரதான ஸாரவ்யாக்யா, 12. அச்யுதேந்த்ராப்யுதயம். இவரது தனியன்கள் வருமாறு: सुदर्शनकृपालब्ध वेदतत्वार्थसागरम् । अनुष्ठितक्रतुशतं वन्देऽस्मत्त्पितरं गुरुम् ।। कुमारतातयाचार्यं सदाचारपरं सदा । वेदान्ताचार्य सिद्धान्त विजयध्वजमाश्रये ।।

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாவல்பாக்கம்&oldid=3585742" இலிருந்து மீள்விக்கப்பட்டது