நாலடியார் மதிவரர் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாலடியார் மதிவரர் உரை என்பது நாலடியாருக்கு மதிவரர் என்ற உரையாசிரியர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு உரையாகும். ஆனால் இவ்வுரை இன்றுவரை கிடைக்கவில்லை. நாலடியார் உரை எழுதப்பட்ட ஏடுகளில் இந்த உரையைக் குறிப்பிடும் பாயிரப் பாடல் ஒன்று உள்ளது. அப்பாயிரத்தின் மூலமாகவே இதன் இருத்தலை அறிகிறோம். இது அரும்பதவுரையாக இருந்தது. இதன் காலம் 13 ஆம் நூற்றாண்டு.

நல்லோர் அருள்செய் நாலடி நானூற்றின்
சொல்லோர் பொருளனைத்தும் தோன்றியதே – கல்வி
வரும்பத நூல்கொண்ட மதிவரன்தன் வாக்கால்
அரும்பதம் இட்ட அழகு.

‘அரும்பதமிடல்’[1] என்பது வைணவர்களால் பெரிதும் போற்றப்பட்ட தொடர்.[2]

இந்த உரைநூல் கிடைக்கவில்லை எனினும் இதன் பாயிரப்பாடல் பதிவை மதிப்பிடும்போது இந்த மதிவரர் தருமரைப் போலவே பதுமாசிரியர் மாணவர் எனக் கொள்ளத்தகும்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாடலில் உள்ள அரிய சொற்களை எடுத்துக்காட்டி அவற்றிற்கு விளக்கம் கூறுதல்
  2. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005