பதுமனார் (உரைநூல் ஆசிரியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதுமனார் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியர்களில் ஒருவர். இவரைப் பதுமாசாரியர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நாலடி நானூறு என்னும் நூலை ‘நாலடி’ எனச் சுருக்கி வழங்கி, பின்னர் சிறப்பு கருதி ‘நாலடியார்’ என வழங்குமாறு செய்தவர்.

பதுமனார் உரைச்சிறப்பு
 • நாலடியார் பாடல்களை அதிகார அடைவு செய்துள்ளது. திருக்குறள் அதிகார அடைவுப் பாங்கைப் பின்பற்றி அதிகாரத்துக்கு 10 பாடல் எனத் தொகுத்துக் கொள்கிறது.
 • கால் நிலம் தோயாக் கடவுள் என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் தொடருக்கு
  • நினைப்பவர் உள்ளங்களில் கடவுள் இருப்பதால் அவரது காலடி நிலத்தில் படுவதில்லை என விளக்குவது மிகச் சிறப்பாக உள்ளது.
 • குருடனுக்கு நிறத்தைக் காட்ட முடியாதது போன்றது அறிவு
 • கற்பு – தந்தை, தாய் போலக் கணவனும் ஒருவன் எனக் கொள்வது
 • நாலடியார் பாடல் (216) நட்பில் கடை, இடை, தலை நட்புகளுக்கு – கமுகு, தென்னை, பனை மரங்களை உவமை காட்டுகிறது. இதற்கு இந்த உரை தரும் விளக்கம்
  • கமுகு என்னும் பாக்கு மரத்தில் பட்ட காயம் ஆறாது. அதுபோல நட்பில் கடைப்பட்டவர் நண்பர் தவறிச் செய்த தீங்கை நினைத்துக்கொண்டே யிருப்பர்
  • தென்னை வண்டு குத்திப் பேணினால்தான் காய்க்கும். அதுபோல இடைப்பட்ட நண்பர் அவ்வப்போது உதவினால்தான் பயன்படுவர்
  • பனை ஒருமுறை நட்டுவிட்டால் காலமெல்லாம் காய்க்கும். சீவினாலும் கள்நீர் தரும். தலையாயார் நட்பு அதுபோலப் பயன்படும்.
 • திருக்குறளை மேற்கோள் காட்டி உரை எழுதும் பகுதிகள் பல உள்ளன.

கருவிநூல்[தொகு]