நாற்கரிச்சர்க்கரை
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நாற்கரிச்சர்க்கரை (Tetrose) என்பது கரிம வேதியியலில், 4 கார்பன் அணுக்களைக் கொண்ட ஓர் ஒற்றைச்சர்க்கரை ஆகும். டெட்ரோசு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். நாற்கரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாய்க் கொண்டு ஆல்டோ நாற்கரிச்சர்க்கரை என்றும் கீட்டோ நாற்கரிச்சர்க்கரை என்றும் இரண்டு வகைகளாய்ப் பிரிக்கலாம். ஆல்டோ நாற்கரிச்சர்க்கரையில் கட்டமைப்பு நிலை ஒன்றில் ஓர் ஆல்டிகைடு (−CH=O) வேதி வினைக்குழுவும் கீட்டோ நாற்கரிச்சர்க்கரையின் கட்டமைப்பு நிலை 2 இல் ஒரு கீட்டோன் (>C=O) வேதி வினைக்குழுவும் இடம்பெற்றிருக்கும்.[1][2]
-
D-எரித்ரோசு
-
D-திரியோசு
-
D-எரித்ருலோசு
ஆல்டோ நாற்கரிச்சர்க்கரைகள் இரண்டு சமச்சீரற்ற கரியணுக்களைக் கொண்டுள்ளன. எனவே நான்கு முப்பரிமாண மாற்றியங்களுக்கு வாய்ப்புண்டு. ஆனால் இயற்கையில் எரித்ரோசு மற்றும் திரியோசு என இரண்டு வடிவங்களே உள்ளன.
கீட்டோ நாற்கரிச்சர்க்கரைகள் ஒரே ஒரு சமச்சீரற்ற கரியணுவை மட்டுமே உடையவை. எனவே இரண்டு முப்பரிமாண மாற்றியங்களுக்கு வாய்ப்புண்டு. ஆனால் இயற்கையில் எரித்ருலோசு என ஒரு வடிவம் மட்டுமே காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lindhorst TK (2007). Essentials of Carbohydrate Chemistry and Biochemistry (1st ed.). Wiley-VCH. ISBN 978-3-527-31528-4.
- ↑ Robyt JF (1997). Essentials of Carbohydrate Chemistry (1 ed.). Springer. ISBN 0-387-94951-8.