நார்மன் வின்சென்ட் பீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நார்மன் வின்சென்ட் பீல்
Norman Vincent Peale
1966 இல் பீல்
1966 இல் பீல்
பிறப்புமே 31, 1898(1898-05-31)
போவர்சுவில், ஒகையோ
இறப்புதிசம்பர் 24, 1993(1993-12-24) (அகவை 95)
பவ்லிங்கு, நியூயார்க்
தொழில்நூலாசிரியர், பேச்சாளர்,
இடச்சு சீர்திருத்த சபை மறைப்பரப்புனர்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
வகைஊக்கம்
கருப்பொருள்நேர்மறை சிந்தனை

நார்மன் வின்சென்ட் பீல் (Norman Vincent Peale, மே 31, 1898 – திசம்பர் 24, 1993) என்பவர் அமெரிக்க மறைப்பரப்புனரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். அவர் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் அதிக அளவு விற்பனையான நூலாகிய "நேர்மறைச் சிந்தனையின் திறன்" என்ற நூலை எழுதினார். இந்த நூலானது பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மனதை ஈர்த்து வாழ்வில் வெற்றி பெற வைத்தது.[1] இவர் 1932 முதல் 1984 வரை நியூயார்க்கில் கிறித்தவப் போதகராகப் பணியாற்றினார்.[2] பீல் அரசுத்தலைவர் இரிச்சார்ட் நிக்சனின் தனிப்பட்ட நண்பராக விளங்கினார்.

நூலின் சிறப்பு[தொகு]

நேர்மறைச் சிந்தனையின் திறன் என்ற நூலானது ஒவ்வொருவரும் வாழ்க்கையில் பெற வேண்டிய வெற்றிகள், நம்பிக்கைகள், மகிழ்வான தருணங்கள், சிறப்புகள் பற்றி விரிவாகவும், இயல்பாகவும், ஏற்புடையத்தக்க வகையிலும் விளக்குகிறது. வின்சென்ட் பீலே நேர்மறைச் சிந்தனையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

நேர்மறைச் சிந்தனையின் சிறப்பு[தொகு]

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நம்பிக்கை, சாதகமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். அவர் மக்கள் எதிர்மறையான எண்ணங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நார்மன் வின்சென்ட் பீலேவின் பிற தலைப்புகள்[தொகு]

  • உன்னால் முடியும் நீ நினைத்தால் உன்னால் முடியும்
  • நேர்மறைச்சிந்தனை வாழ்வு
  • நேர்மறைச்சிந்தனையின் வியப்பூட்டும் முடிவுகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Park, Robert L. (2009). Superstition: Belief in the Age of Science. Princeton University Press. p. 127. ISBN 978-0-691-13355-3
  2. "History - Welcome - Marble Collegiate Church". www.marblechurch.org. 2019-10-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-10-25 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]