உள்ளடக்கத்துக்குச் செல்

நன்னம்பிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்லின் சுவர் நினைவுச்சின்னம் (மேற்கு திசை நோக்கு). சுவரின் மேற்கு திசை முழுவதும் நன்னம்பிக்கையையும் பிரதிபலிக்கும் சுவர் வாசகங்கள்

நன்னம்பிக்கை (Optimism) என்பது ஒருவித மனப்பான்மையாகும். ஒரு குறிப்பிட்ட முயற்சியின் விளைவு, பொதுவாக, நேர்மறையாகவும் சாதகமானதாகவும் விரும்பத்தக்கதாகவும் இருக்கும் என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு நம்பிக்கையாகும். நன்னம்பிக்கையாளர்கள் மற்றும் இழநம்பிக்கையாளர்களின் மனப்பாங்கினை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மரபுத்தொடரானது, "பாதியளவு நீர் நிரப்பப்பட்ட கண்ணாடிக் கோப்பையைப் பார்க்கும் நன்னம்பிக்கையாளர் பாதியளவு நீர் நிரம்பியுள்ளதாகவும், இழநம்பிக்கையாளர்கள் பாதியளவு காலியாக உள்ளதெனவும் கூறுவர்" என்கிறது.

நன்னம்பிக்கை என்பதற்கன ஆங்கில வார்த்தை optimism என்பது "சிறந்தது" என்று பொருள் தரக்கூடிய இலத்தீன் மொழிச் சொல் optimum என்ற வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் பொருளானது, ‘எந்த ஒரு குறிப்பிட்ட சூழலில் இருந்தும் சாத்தியமாகக்கூடிய சிறந்த விளைவுகளை எதிர்நோக்கும் நம்பிக்கை’ என வரையறுக்கப்படுகிறது.[1] உளவியலில் இது பொதுவாக நன்னம்பிக்கை மனப்பான்மை என குறிப்பிடப்படுகிறது. ஆகையால், இஃது எதிர்கால நிலைமைகள் சிறப்பானவற்றிற்காக வேலை செய்யும் என்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது.[2]

நன்னம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள் மனநிலை சார் மாதிரிகள் மற்றும் விளக்கமளிக்கும் பாணியிலான மாதிரிகள் ஆகியவை அடங்கும். நம்பிக்கைத்தன்மையை அளவிடுவதற்கான முறைகள், தத்துவார்த்த அமைப்புகளினால், நன்னம்பிக்கையின் உண்மையான வரையறையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் சார்புநிலை சோதனை போன்ற வெவ்வேறு வடிவங்களிலமைந்த சோதனைகளும், விளக்கவியல் பாணியில், நன்னம்பிக்கையைச் சோதித்தறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட கற்பித்துக் கூறுதல் பாணி வினாப்பட்டி போன்றவையும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை போன்ற மனவியல்புகள் ஓரளவு மரபு வழி சார்ந்தவையாக இருக்கலாம்.[3] மேலும், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு உயிரியல் சார் நடத்தைக்கூறுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம்.[4] இத்தகைய மனப்பாங்குகள் குடும்பச் சூழல் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணிகளாலும் உருவாக்கப்படலாம்.[3] சிலர் இத்தகைய மனப்பாங்கு கற்றுக்கொடுக்கப்படலாம் எனவும் கூறுகிறார்கள்.[5] நன்னம்பிக்கை என்பது உடல் நலத்துடனும் தொடர்பு படுத்தப்படலாம்.[6]

உளவியல்ரீதியான நன்னம்பிக்கை

[தொகு]

நன்னம்பிக்கை மனநிலை

[தொகு]
ஒரு நன்னம்பிக்கையாளரும், இழநம்பிக்கையாளரும், விளாடிமிர் மாகோவ்ஸ்கி, 1893

ஆய்வாளர்கள் இந்த சொல்லை அவரவர் ஆய்வுகளுக்குத் தகுந்தவாறு கையாண்டுள்ளனர். மற்ற எந்தவொரு குணாதிசயக்கூற்றினையும் போல நன்னம்பிக்கைப் பாங்கினையும் மதிப்பிட வாழ்வியல் சார்புநிலை சோதனையைப்  போன்ற பலவித சோதனைகள் உள்ளன. மனநிலை சார்ந்த நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை[7] வகை மாதிரிக்குப் பொருத்தமாக தொடர்புடைய நபர்களிடம் அவர்கள் எதிர்வரும் விளைவுகளை நேர்மறையாக எதிர்பார்க்கிறார்களா? அல்லது எதிர்மறையாக எதிர்பார்க்கிறீர்களா? என்ற வகை வினாக்களைக் கேட்பதன் மூலம் மதிப்பிடலாம். (கீழே காண்க). வாழ்வியல் சார்புநிலை சோதனை தகவல்கள் தனித்தனியான நன்னம்பிக்கை மற்றும் இழநம்பிக்கை மதிப்புகளை ஒவ்வொரு தனிநபருக்கும் தருகின்றன. நடத்தையியல்ரீதியாக, இந்த இரு வித மதிப்பீட்டு எண்ணிக்கைகளும் ஒன்றுக்கொன்று r = 0.5 என்ற அளவில் தொடர்புக் கெழுவினைக் கொண்டுள்ளன. இந்த அளவுகோலில், நன்னம்பிக்கைக்கான மதிப்பீட்டு எண்ணிக்கைகள் சிறப்பான விளைவுகளை தொடர்புகளில் கணிக்க முடிகிறது.[8] உயர்ந்த சமூக நிலை,[9] மற்றும் ஆபத்தைப் பின் தொடர்ந்து வரும் குறைக்கப்பட்ட நல்வாழ்வின் இழப்பு [10] உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் நடத்தை ஆகியவை நன்னம்பிக்கையோடு இணைந்துள்ள அதே வேளையில், உடல் நலத்தைப் பாதிக்கும் நடத்தைகள் இழநம்பிக்கையோடு இணைந்துள்ளன.[11]

ஒரு சிலர்  சமூக விருப்பு போன்ற காரணிகளில் எவ்வித வேறுபாடுமற்ற சூழலில் நன்னம்பிக்கையும், இழநம்பிக்கையும் ஒரே பரிமாணத்தின் இரு முனைகள் என்று விவாதிக்கின்றனர். இருப்பினும், உறுதிப்படுத்தும் காரணி பகுப்பாய்வானது இரு பரிமாண மாதிரியை ஆதரிக்கிறது.[12] மேலும், இரு பரிமாணங்களும் வெவ்வேறு விளைவுகளைக் கணிக்கின்றன.[13] மரபியல் சார் கோட்பாடு இந்த சார்பின்மையை உறுதி செய்வது இழநம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை இரண்டுமே உள்ளார்ந்த தனித்த பண்புகள் எனவும், வகை மாதிரியான தொடர்புக்கெழுவானது பொதுவான நன்னலம் மற்றும் குடும்பச் சூழல்கள் போனற காரணிகளால் விளைபவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.[3]

.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Definition of optimism", Merriam-Webster, archived from the original on November 15, 2017, பார்க்கப்பட்ட நாள் November 14, 2017
  2. "optimism - Definition of optimism in English by Oxford Dictionaries". Oxford Dictionaries - English. Archived from the original on 2014-06-06.
  3. 3.0 3.1 3.2 Bates, Timothy C. (25 February 2015). "The glass is half full and half empty: A population-representative twin study testing if optimism and pessimism are distinct systems". The Journal of Positive Psychology 10: 533–542. doi:10.1080/17439760.2015.1015155. 
  4. Sharot, Tali (December 2011). "The optimism bias". Current Biology 21 (23): R941–R945. doi:10.1016/j.cub.2011.10.030. http://www.sciencedirect.com/science/article/pii/S0960982211011912. 
  5. Vaughan, Susan C. (2000). Half Empty, Half Full: Understanding the Psychological Roots of Optimism. New York: Courtyard.
  6. யூடியூபில் Ron Gutman: The hidden power of smiling
  7. Scheier, M. F.; Carver, C. S. (1987). "Dispositional optimism and physical well-being: the influence of generalized outcome expectancies on health". Journal of Personality 55: 169–210. doi:10.1111/j.1467-6494.1987.tb00434.x. https://archive.org/details/sim_journal-of-personality_1987-06_55_2/page/169. 
  8. House, J.; Landis, K.; Umberson, D (1988-07-29). "Social relationships and health". Science 241 (4865): 540–545. doi:10.1126/science.3399889. http://www.sciencemag.org/cgi/doi/10.1126/science.3399889. 
  9. Lorant, Vincent; Croux, Christophe; Weich, Scott; Deliège, Denise; Mackenbach, Johan; Ansseau, Marc (2007-04-01). "Depression and socio-economic risk factors: 7-year longitudinal population study". The British Journal of Psychiatry 190 (4): 293–298. doi:10.1192/bjp.bp.105.020040. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-1250. பப்மெட்:17401034 இம் மூலத்தில் இருந்து 2015-12-22 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20151222003929/http://bjp.rcpsych.org/content/190/4/293. 
  10. Carver, C. S.; Scheier, M. F. (1998). On the self-regulation of behavior. New York: Cambridge University Press.
  11. Hooker, Karen; Monahan, Deborah; Shifren, Kim; Hutchinson, Cheryl. "Mental and physical health of spouse caregivers: The role of personality.". Psychology and Aging 7 (3): 367–375. doi:10.1037/0882-7974.7.3.367. http://doi.apa.org/getdoi.cfm?doi=10.1037/0882-7974.7.3.367. 
  12. Herzberg, Philipp Yorck; Glaesmer, Heide; Hoyer, Jürgen. "Separating optimism and pessimism: A robust psychometric analysis of the Revised Life Orientation Test (LOT-R).". Psychological Assessment 18 (4): 433–438. doi:10.1037/1040-3590.18.4.433. http://doi.apa.org/getdoi.cfm?doi=10.1037/1040-3590.18.4.433. 
  13. Robinson-Whelen, Susan; Kim, Cheongtag; MacCallum, Robert C.; Kiecolt-Glaser, Janice K.. "Distinguishing optimism from pessimism in older adults: Is it more important to be optimistic or not to be pessimistic?". Journal of Personality and Social Psychology 73 (6): 1345–1353. doi:10.1037/0022-3514.73.6.1345. http://doi.apa.org/getdoi.cfm?doi=10.1037/0022-3514.73.6.1345. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நன்னம்பிக்கை&oldid=3587327" இலிருந்து மீள்விக்கப்பட்டது