நாராயணா பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாராயணா பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை (Narayana Multispeciality Hospital) இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையாகும். குசராத்து மற்றும் தெற்கு இராசத்தான் பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு இம்மருத்துவமனை சிகிச்சை அளிக்கிறது. நாராயணா சுகாதார குழுமத்தின் ஒரு பகுதியான நாராயணா மருத்துவமனை முன்னர் நாராயணா இருத்யாலயா தனியார் நிறுவனம் என அறியப்பட்டது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இம்மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தேவி பிரசாத் செட்டியால் நிறுவப்பட்டது.[1][2]

குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான இருதய பராமரிப்பு, நரம்பியல், எலும்பியல், சிறுநீரகவியல், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம்,[3] பொது மருத்துவம், காது மூக்கு மற்றும் தொண்டை, குழந்தை மருத்துவம் மற்றும் குழவி மருத்துவம், நுரையீரல், எலும்பியல் மற்றும் புற்றுநோயியல் ஆகிய பிரிவுகளில் மருத்துவத்தை வழங்குகிறது.[4]

எண்ணிம வடிகுழாய் ஆய்வகம், இரத்தக்குழாய்சார் பராமரிப்பு பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய வசதிகள் இங்கு உள்ளன.[5] முதுகெலும்பு வட்டு இறக்கம், முதுகெலும்பு முறிவுகள் மற்றும் முதுகுத்தண்டு கட்டிகள் போன்ற நிலைமைகளுக்கு மருத்துவமனையில் உள்ள நரம்பியல் துறையானது முதுகெலும்பு அறுவை சிகிச்சை மற்றும் நுண் அறுவை சிகிச்சையை வழங்குகிறது. எலும்பியல் துறை முழங்கால், இடுப்பு மற்றும் தோள்பட்டைக்கான மாற்று அறுவை சிகிச்சையும் இங்கு வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]