நாரணப்பா உப்பூர்
நாரணப்பா உப்பூர் (1918-1984) 20 ஆம் நூற்றாண்டின் யக்ஷகானா கலையின் புகழ்பெற்ற பாகவதர் (யக்ஷகானா பாடகர்) ஆவார்.[1] அவர் தனது குரல், பாரம்பரிய அறிவு மற்றும் யக்ஷகானா பாரம்பரியம் ஆகியவற்றிற்காக மிகவும் அறியப்பட்டவர்.எழுத்தாளரும் அவரது சமகாலத்தவருமான டாக்டர் சிவராம காரந்த், இவரைப்பற்றி நாரணப்ப உப்பூர் மேடை மரபுகளின் (யக்ஷகானா) செழுமையான பாரம்பரியத்தை நன்கு அறிந்த ஒருவர், கடந்த காலத்தில் என்ன இருந்தது, எதை இழக்கிறோம் என்பதை அவரால் மட்டுமே சொல்ல முடியும் என்று சொல்லியுள்ளார். [1]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]நாரணப்பா உப்பூர், இந்தியாவில் உடுப்பி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமான தட்டுவாட்டுக்கு அருகிலுள்ள மார்வியில் பிறந்தார்; இவரது தந்தை பெயர் மார்வி சீனிவாச உப்பூர்.இவரது தந்தை யக்ஷகானத்தில் குரு. மார்வி ஸ்ரீனிவாச உப்பூர் நாற்பது ஆண்டுகளாக பகவத் அல்லது யக்ஷகானா பாடகர் ஆவார், மேலும் அவர் "மார்வி பாணி" என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான பாணிக்காக அறியப்பட்டார் மற்றும் அவரது சகோதரர் வாசுதேவ உப்பூர் யக்ஷகானாவில் மத்தளம் வாசிப்பவராக இருந்தார்.[1] நாரணப்பா உப்பூர் தனது தந்தை மற்றும் குடும்ப உறவினர்களிடம் இருந்தே யக்ஷகானாவின் அம்சங்களைக் கற்றுக்கொண்டார்.
யக்ஷகானத்தில் பங்களிப்பு
[தொகு]நாரணப்பா உப்பூர் 1937 இல் கோட்டாவில் உள்ள ஸ்ரீ அம்ருதேஸ்வரி மேளாவில் பாகவதராக (பாடகர்) தொடங்கினார்.20 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க பின்னணிப் பாடகர்களில் நாரணப்பா உப்பூர் ஒருவர். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அவரது வாழ்க்கையில், அவர் ஸ்ரீ அம்ருதேஸ்வரி யக்ஷகானா மண்டலி, கோட்டா உட்பட பல யக்ஷகானா குழுக்களில் பாகவதராகப் பணியாற்றியுள்ளார், மேலும் சாலிகிராமம், சௌகூர், இடுகுஞ்சி, கொல்லூர், மாரணக்கட்டே முதலிய இடங்களில் அமைந்துள்ள மற்ற கோவில் விழாக்களிலும் அவர் 40 பிரசங்கங்களை (கதை கவிதைகள்) மனப்பாடமாக அறிந்திருந்தார், மேலும் அவர் 60 யக்ஷகான ராகங்களை (ஸ்யூன்கள்) பாடுவார்.
டாக்டர் காரந்த் உடனான சங்கம்
[தொகு]நாரணப்ப உப்பூர் யக்ஷகானா துறையில் டாக்டர் சிவராம காரந்த் உடன் பல்வேறு இசைச்சோதனைகளை செய்து பார்த்துள்ளார். டாக்டர்.காரந்த் யக்ஷகானாவில் பல்வேறு சீர்திருத்தங்களை முயற்சித்தார், ஒன்று நிகழ்ச்சியின் மொத்த நேரத்தை முந்தைய 8-10 மணிநேரத்திலிருந்து 2-3 மணிநேரமாகக் குறைத்தது. டாக்டர் காரந்தின் மற்றொரு துணிச்சலான பரிசோதனையானது யக்ஷகானா பயலே ஆகும், அங்கு பாலே நுட்பங்கள் யக்ஷகானா நடனத்துடன் கலக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் இணைந்து கிருஷ்ணார்ஜுன கலகா, யக்ஷகானா பாலே தயாரித்தனர், இது 1968 இல் மும்பையின் கலை ஆர்வலர்களால் பாராட்டப்பட்டது. கலாநிதி சிவராம காரந்த் தனது யக்ஷகானா ஆராய்ச்சியில் நாரணப்ப உப்பூர் அளித்த பங்களிப்பை எல்லா இடங்களிலும் மறைக்காமல் கூறியுள்ளார். .
நூலாசிரியர்
[தொகு]நாரணப்ப உப்பூர் யக்ஷகானா அத்யயனா என்ற புத்தகத்தை எழுதியுள்ளார், இது யக்ஷகானாவின் பண்டைய பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது, மேலும் இதில் ஆர்வமுள்ளோர்கள் கற்பவர்களுக்கான யக்ஷகானா பாடத்திட்டமும் அடங்கும்.[2]
ஆசிரியப்பணி
[தொகு]அவர் பல மாணவர்களுக்கு யக்ஷகானா பின்னணி பாடலில் பயிற்சி அளித்துள்ளார், மேலும் இதுபோன்ற பல மாணவர்கள் நல்ல பாகவதர்களாக மாறியுள்ளனர். அவரது மாணவர்களில் மிகவும் பிரபலமானவர் கலிங்க நவதா ஆவார், அவர் நாரணப்ப உப்பூரின் பாடும் பாணியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சுப்ரமணிய தாரேஷ்வர், ராகவேந்திர மய்யா, கடலோர கர்நாடகத்தின் மற்றொரு புகழ்பெற்ற பாகவத் நாரணப்பா உப்பூரிடம் பகவதிகே (பாடல்) கற்றார். மத்தளம் (மத்தலே) அடிப்பவர்கள் போன்ற பிற பின்னணி கலைஞர்களையும் ஊக்குவித்தார்.[3] மற்ற சில மாணவர்கள் ஜி. சதானந்த ஐதலா, கே.ஜி. ராமராவ், கே.பி. ஹெகடே, நாராயண ஷபராய, எஸ். சுரேஷ் ஷெட்டி, ஹாலடி ராகவேந்திர மய்யா போன்றவர்கள். இவ்வாறு யக்ஷகானா பாடலிலும் அதோடு இணைந்த இசைகளிலும் பல்வேறு மாணவர்களுக்கு குருவாக இருந்து கற்றுக்கொடுத்துள்ளார்.
யக்ஷகானா கலகேந்திரா, ஹங்கரகட்டே
[தொகு]1972 ஆம் ஆண்டு கோட்டாவில் உள்ள ஹேரேமலிங்கேஸ்வரர் கோயிலின் ஹங்கர்கட் யக்ஷகானா கேந்திரத்தில் நாரணப்ப உப்பூரினால் யக்ஷகானா கற்பிப்பதற்கான இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த மையத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் யக்ஷகானா கலையை கற்று, பின்னர் கடலோர கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் யக்ஷகானா கலையை நிகழ்த்தினர்.
மரணம்
[தொகு]1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி, பாகவத நாரணப்ப உப்பூர் ஒரு பொது நிகழ்ச்சியின் போது அம்ருதேஸ்வரி யக்ஷகானா குழுவிற்காக (அவரது முதல் முதலாளி) பாடும் போது மாரடைப்பு ஏற்பட்டு, அதே நாளில் மரணமடைந்தார்.[4]
விருது நிறுவப்பட்டது
[தொகு]இவரது பெயரிலே ஒரு விருது நிறுவப்பட்டு , தேர்ந்தெடுக்கப்பட்ட யக்ஷகானா கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் யக்ஷகானா கலாரங்க உடுப்பியில் இருந்து "பகவத் நாரணப்பா உப்பூர் விருது" வழங்கப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 K.S., Upadhyaya (12 May 2001). "Sri Naranappa Uppooru". Udupi: Yakshagana.com. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.
- ↑ K.S., Upadhyaya (12 May 2001). "Sri Naranappa Uppooru". Udupi: Yakshagana.com. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.K.S., Upadhyaya (12 May 2001). "Sri Naranappa Uppooru". Udupi: Yakshagana.com. Retrieved 21 August 2012.
- ↑ "Hear the drums speak for him". 15 April 2009 இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090419235947/http://www.hindu.com/2009/04/15/stories/2009041558940200.htm.
- ↑ K.S., Upadhyaya (12 May 2001). "Sri Naranappa Uppooru". Udupi: Yakshagana.com. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.K.S., Upadhyaya (12 May 2001). "Sri Naranappa Uppooru". Udupi: Yakshagana.com. Retrieved 21 August 2012.
- ↑ The, HIndu (3 November 2011). "Yakshagana Kalaranga awards for 12 artistes". Mangalore. http://www.thehindu.com/news/cities/Mangalore/article2594172.ece.