நான்சி ஜோ பவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான்சி ஜோ பவல்
Nancy Jo Powell.jpg
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஏப்ரல் 2012

நான்சி ஜோ பவல் (English: Nancy Jo Powell) (பிறப்பு - 1947) 2012 ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக நியமனம் [1] செய்யப்பட்டார். நேபாளத்துக்கான அமெரிக்கத் தூதராக பணியாற்றிய பின் நான்சி ஜோ பவல் அமெரிக்க வெளியுறவுத் துறைப் பொது இயக்குனராக பதவியேற்றார். 1977-ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவு விவகாரத் துறையில் சேர்ந்த அவர் அதற்குப் பின் ஆப்பிரிக்கா மற்றும் தென் ஆசிய கண்டங்களில் உள்ள பல்வேறு நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

[2] இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண் நான்சி ஜோ பவல் என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய பதவிகள்[தொகு]

 • அமெரிக்க வெளியுறவுத் துறையின் பொது இயக்குனர், 2009 - 2012
 • நேபாளத்துக்கான அமெரக்க தூதர், ஜூலை 16, 2007 - 2009
 • தெற்கு ஆசியாவுக்கான தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி, 2006 - 2007
 • எவியான் இன்ப்லுவென்ஸா உட்பட தொற்றுநோய்கள் தடுப்பு இயக்கத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர், 2006.
 • சர்வதேச போதை தடுப்பு மற்றும் சட்ட அமலாக்கத் துறையின் துணைச் செயலர், மார்ச் 14 - நவம்பர் 25, 2005.
 • அமெரிக்க சட்ட விவகாரத் துறையின் துணைச் செயலாளர், நவம்பர் 2004 - மார்ச் 2005.
 • பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்ட் 9, 2002 - அக்டோபர் 2004.
 • கானாவுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்ட் 14, 2001 - மே 2002.
 • ஆப்பிரிக்க விவகாரத் துறையின் துணைச் செயலர், ஜனவரி 2001 - ஜூன் 2001.
 • உகாண்டாவுக்கான அமெரிக்க தூதர், 1997 - 1999
 • வங்காளதேசத்துக்கான அமெரிக்க தூதரக குழுவின் துணைத் தலைவர், 1995 - 1997
 • டெல்லியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகத்தில் அரசியல் ஆலோசகர், 1993 - 1995.
 • கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதர், 1992 - 1993.
 • ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டிற்கான தூதரகக் குழுவின் துணைத் தலைவர், 1990 - 1992.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்சி_ஜோ_பவல்&oldid=2217502" இருந்து மீள்விக்கப்பட்டது