நான்காவது தூண் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நான்காவது தூண்
நூல் பெயர்:நான்காவது தூண்
ஆசிரியர்(கள்):மதுமிதா
வகை:இதழியல்
துறை:நேர்காணல்
இடம்:ஸ்ரீ விஜயம் பதிப்பகம் ,
10, பாலு தெரு,
திருவான்மியூர்,
சென்னை- 600 041.
மொழி:தமிழ்
பக்கங்கள்:368
பதிப்பகர்:ஸ்ரீ விஜயம்
பதிப்பு:2006
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

நான்காவது தூண் எனும் தலைப்பில் 18 பத்திரிகை ஆசிரியர்களது நேர்காணல்கள் கொண்ட ஒரு இதழியல் தொடர்புடைய நூலாக 368 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 175 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

இராஜபாளையம் எனும் ஊரைச் சொந்த ஊராகக் கொண்ட மதுமிதா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இணைய இதழியலில் ஆர்வமுடைய இவர் 2003 ஆம் ஆண்டில் "மௌனமாய் உன் முன்னே" என்கிற கவிதைத் தொகுப்புடன் அறிமுகமானார். "சுபாசிதம்" என்கிற சமஸ்கிருத நூலின் இவரது தமிழ் மொழிபெயர்ப்பு 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

பொருளடக்கம்[தொகு]

 1. அண்ணா கண்ணன்
 2. அருணா ஸ்ரீனிவாசன்
 3. அனுராதா சேகர்
 4. கண்ணன்
 5. கீழாம்பூர்
 6. சீதாரவி
 7. சுகதேவ்
 8. சோ
 9. நக்கீரன் கோபால்
 10. நிலா என்கிற நிர்மலா ராஜீ
 11. மதுரபாரதி
 12. மரபின் மைந்தன் முத்தையா
 13. மனுஷ்ய புத்திரன்
 14. லேனா தமிழ்வாணன்
 15. கலைமாமணி விக்கிரமன்
 16. ஜெயகிருஷ்ணன்
 17. ஜெயபாஸ்கரன்
 18. ஸ்ரீ.ஸ்ரீராம்

எனும் 18 பத்திரிகை ஆசிரியர்களின் நேர்காணல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அச்சு இதழ்கள் மற்றும் இணைய இதழ்களின் ஆசிரியர்களாக இருக்கும் இவர்களது அனுபவங்கள் பதில்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களது பதில்கள் இதழியலில் இருப்பவர்களுக்கும், இதழியல் குறித்து படிப்பவர்களுக்கும் உதவிகரமானதாக இருக்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காவது_தூண்_(நூல்)&oldid=1509737" இருந்து மீள்விக்கப்பட்டது