உள்ளடக்கத்துக்குச் செல்

நானா அலெக்சாண்டிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நானா அலெக்சாண்டிரியா
Nana Alexandria
நானா அலெக்சாண்டிரியா, 1970
முழுப் பெயர்நானா அலெக்சாண்ட்ரியா
நாடுஉருசியா
சியார்ச்சியா
பிறப்பு13 அக்டோபர் 1949 (1949-10-13) (அகவை 74)
பொட்டி, சியார்ச்சியா, உருசியா
பட்டம்பெண் கிரான்டு மாசுட்டர்
பிடே தரவுகோள்2342 (May 2010)
உச்சத் தரவுகோள்2415 (1988)

நானா அலெக்சாண்ட்ரியா (Nana Alexandria) என்பவர் சியார்ச்சியா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீராங்கனை ஆவார். இவர் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் பிறந்தார். 1976 ஆம் ஆண்டு சதுரங்க பெண் கிராண்டு மாசுட்டர் தகுதியும் 1995 ஆம் ஆண்டு அனைத்துலக நடுவர் தகுதியும் இவருக்கு வழங்கப்பட்டது. மகளிர் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்திற்கான இரண்டு போட்டிகளில் நானா ஒரு சவாலாக இருந்தார். மேலும் நானா சியார்ச்சிய அரசியல்வாதியான கிகா பொகேரியாவின் தாய் ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

அலெக்சாண்டிரியாவிற்கு அனைத்துலகப் பெண் சதுரங்க மாசுட்டர் தகுதி 1966 ஆம் ஆண்டும், 1976 ஆம் ஆண்டு சதுரங்க பெண் கிராண்டு மாசுட்டர் தகுதியும் கிடைத்தன. 1966, 1968, 1969 ஆம் ஆண்டுகளில் இவர் உருசிய பெண்கள் சதுரங்க சாம்பியனாக விளங்கினார். 1975 மற்றும் 1981 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பெண்கள் உலக சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் பங்கேற்று விளையாடினார். இப்போட்டியில் 1975 இல் நோனா கேப்ரிந்தாசிவ்லியிடம் (+3 =1 −8) என்ற புள்ளிகள் கணக்கிலும், 1981 இல் மாயா சிபுர்தானிட்சுவிடம் (+4 =8 −4) என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையும் பெற்றார். 1969, 1974, 1978, 1980, 1982, 1986 ஆம் ஆண்டுகளில் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் இவர் உருசியாவின் சார்பாக விளையாடினார்[1] She was one of the contributing players of the USSR team that dominated the women's Olympiads of the 1980s.. 1980 ஆம் ஆண்டுகளில் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய உருசிய அணியில் இவரும் ஓர் உறுப்பினராக இருந்தார். பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு வழங்கும் பிடே உலகத்தரவரிசைப் புள்ளிகள் மதிப்பில் இவர் 1988 இல் அதிகபட்சமாக 2415 புள்ளிகள் பெற்றுள்ளார். தற்போது பிடே அமைப்பில் நானா ஒரு நிர்வாகியாகச் செயல்பட்டு வருகிறார். இவ்வமைப்பின் பெண்கள் ஆணையத்தின் இருக்கை உறுப்பினராக 1966 முதல் 2001 வரை பணியாற்றியுள்ளார்.

மேலும் வாசிக்க

[தொகு]
  • "none", New In Chess, no. #7, 1986, pp. 66–68
  • ChessBase News

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nana Aleksandria
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நானா_அலெக்சாண்டிரியா&oldid=2808486" இலிருந்து மீள்விக்கப்பட்டது