நானாபாவு பால்குனராவ் பட்டோலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நானாபாவு பால்குனராவ் பட்டோலே, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் பண்டாரா மாவட்டத்தின் சாக்கோலி வட்டத்தைச் சேர்ந்த சுகலி என்ற ஊரில் பிறந்தார்.[1]

சான்றுகள்[தொகு]