உள்ளடக்கத்துக்குச் செல்

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய அங்கதக் கவிதைநூலாகும். இது நாஞ்சில்நாட்டில் நிலவி வந்த 'மருமக்கள் வழி' சொத்துரிமை முறையின் தீங்குகளை அந்த முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வதுபோலக் குலமுறை கிளத்துப்படலம் முதலாகக் கும்பி எரிச்சல் படலமாகப் பதினோரு படலங்களில் பாடப்பட்டிருக்கின்றது. 1916-இல் ஒரு பழைய சுவடி என்ற பேரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையவர்களால் திருவனந்தபுரத்தில் இருந்து வெளி வந்த தமிழன் என்ற பத்திரிகை இதழில் தொடராக வெளிவந்தது. 1942-இல் புதுமைப்பதிப்பகம் முதன்முதலில் இந்நூலைப் புத்தகமாக வெளியிட்டது. தமிழன் பத்திரிக்கை ஆசிரியர் எஸ். முத்துசாமிப் பிள்ளை அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டு காலச்சுவடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

மருமக்கள் தாயமுறை-விளக்கம்[தொகு]

“மருமக்கள் தாய முறைப்படி ஒருவரின் உடைமைகள், அவருக்குப்பின் அவருடைய மக்களைச் சாராமல், அவருடன் பிறந்த சகோதரிகளுடைய ஆண்மக்களில் மூத்தவனைச் சாரும். சொத்தில் உரிமையை வைத்திருந்தவர் ‘காரணவர்’ என்றும், அவருக்குப்பின் அவ்வுரிமையை அடையும் மருமகன் ‘அனந்தரவன்’ என்றும் அழைக்கப்பட்டனர். காரணவர் இறந்தபின், அவரது மனைவி மக்களுக்கு அவ்வீட்டில் ஒரு உரிமையும் இல்லை. அவள் தன்மக்களுடன் பிறந்த வீட்டுக்குச் சென்றாக வேண்டிய சூழ்நிலை அன்று இருந்தது. அனந்தரவன் மனம் உவந்து கொடுக்கும் ‘உகந்துடைமையால்’ அவர் வயிறு வளர்ப்பர். ஆனால், பெரும்பாலும் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமலிருந்தது. இம்முறையால் வழக்குகள் மலிந்தன. பலதார மணமும், மாதரை இழிவுபடுத்தும் நிலையும் சமூகத்தில் தோன்றின. சமுதாயத்தில் கொடுமைகள் மலிந்தன.” -முனைவர் வை.கிருஷ்ணமூர்த்தி, 2007.

மூலம்[தொகு]