உள்ளடக்கத்துக்குச் செல்

நாக லக்சுமயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாக லக்சுமயா
Naka Laxmaya
நாக லட்சுமயா உருவப்படம்
ஒடிசாவின் சட்டமன்றம்
பதவியில்
9 சூன் 1980 – 9 மார்ச்சு 1985
முன்னையவர்நாக கண்ணயா
பின்னவர்நதியாபாசி பிசுவாசு
தொகுதிமால்காங்கிரி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-12-02)2 திசம்பர் 1950
இறப்பு16 சனவரி 2020(2020-01-16) (அகவை 69)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

நாக லக்சுமயா (Naka Laxmaya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் நாகா கோயாவுக்கு மகனாகப் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒடிசா சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மால்காங்கிரி சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாக ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

1975 ஆம் ஆண்டில் அரசு வேலையை விட்டுவிட்டு பொதுச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பின்னர் காங்கிரசு கட்சியில் சேர்ந்து நேரடி அரசியலில் ஈடுபட்டார். 1977 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், மால்காங்கிரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டார், ஆனால் அப்போது தோல்வியடைந்தார்.

நாகா லக்சுமயா 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 அன்று தனது 69 ஆவது வயதில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Members in Eighth Assembly( 09/06/1980-09/03/1985)". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 17 January 2020.
  2. "ମାଲକାନଗିରି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ପୂର୍ବତନ ବିଧାୟକ ନାକା ଲାଛମାୟାଙ୍କ ପରଲୋକ" (in or). 17 January 2020. http://sambad.in/state/malkajgiri-ex-mla-naka-lachhamaya-passes-away-472054/. பார்த்த நாள்: 17 January 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக_லக்சுமயா&oldid=3803945" இலிருந்து மீள்விக்கப்பட்டது