நாக்ரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாக்ரைட்டு
Nacrite
Nacrite - Mineralogisches Museum Bonn1.jpg
நாக்ரைட்டு கனிமம்,
பொதுவானாவை
வகைபைல்லோசிலிக்கேட்டுகள்
காவோலினைட்டு - செர்பண்டைன் குழு
வேதி வாய்பாடுAl2Si2O5(OH)4
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு

நாக்ரைட்டு (Nacrite) என்பது Al2Si2O5(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். களிமன் வகை கனிமமான இது பல்லுருவத் தோற்றங்களில் காவோலினைட்டுடன் சேர்ந்து காணப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிகத் திட்டத்தில் நாக்ரைட்டு படிகமாகிறது. நேர்மறையான அடையாள முடிவுகளுக்கு எக்சு கதிர் விளிம்பு பகுப்பாய்வுகள் அவசியமாகிறது.

1807 ஆம் ஆண்டு நாக்ரைட்டு முதன்முதலில் செருமனியிலுள்ள சாக்சானி மாநிலத்தில் கண்டறியப்பட்டது. முத்துப் போன்ற பளபளப்புக்கு தாயாகக் கருதப்படும் நாக்கர் என்ற சொல்லிலிருந்து நாக்ரைட்டு தொகுதி கனிமத்திற்கு இப்பெயர் வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்ரைட்டு&oldid=2631902" இருந்து மீள்விக்கப்பட்டது